இப்போது தி அமேஸிங் ஸ்பைடர் மேன் படத்தின் கதையை பார்க்கலாம், ஆயுதங்களை கடத்தி செல்பவர்களை தடுக்க வேண்டும் என்று பள்ளிக்கூட பட்டமளிப்பு விழாவை கூட லேட்டாக அட்டென்ட் பண்ணுகிறரார் நமது கதாநாயகன் பீட்டர் பார்க்கர், இனிமேல் ஸ்பைடர் மேனாக இருக்கலாமா வேண்டாமா என்று முடிவு பண்ண வேண்டிய தருணம் அவருக்கு வருகிறது.
ஆஸ்காரப் நிறுவனத்தின் வாரிசு ஹாரி ஆஸ்பாரன் ஒரு தவிர்க்க முடியாத மரபணு நோயால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டு இருக்கிறார். இப்போது பீட்டர் பார்க்கர் நினைத்தால் அவருடைய இரத்தத்தை பரிசோதனை பண்ண அனுமதிப்பதன் மூலம் புதிய மருந்தை கண்டுபிடிக்க முடியும் ஆனால் சென்ற படத்திலேயே பரிசோதனைகளின் விளைவுகளை பார்த்ததால் பார்க்கர் இந்த முறை இரத்ததை கொடுக்கவில்லை, பின்னாளில் அவருடைய பெற்றோர் இறப்பு பற்றிய தடயங்களை சேகரிக்கும்போது அவருடைய அப்பாவின் ஒரு வீடியோ ஃபுடேஜ் கிடைக்கிறது. அவருடைய அப்பா அந்த வீடியோவில் சொன்ன கருத்துக்களில் இருந்து ஸ்பைடர் மேன் சக்திகளின் ஆராய்ச்சிக்கு தன்னுடைய இரத்தம் பயன்படுத்தப்பட்டதால்தான் பீட்டர் பார்க்கருக்கு சக்திகள் இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்கிறார். ஆனால் காலம் கடந்துவிட்டது.
இன்னொரு பக்கம் எலெக்ட்ரிக் மீன்கள் குறித்த ஆராய்ச்சியில் ஒரு தவிர்க்க முடியாத விபத்தில் மாட்டிக்கொண்ட மாக்ஸ் இப்போது உடல் முழுவதும் மின்சாரம் போன்ற நிலையில் உள்ள எலக்ட்ரோ என்ற வில்லனாக இருக்கிறார். கிடைத்த தகவல்களை வைத்து களத்தில் இறங்கும் ஸ்பைடர் மேனால் நிலைமையை சமாளிக்க முடியுமா என்பதுதான் படத்தின் கதை. புது வில்லனாக உருவாகும் எலக்ட்ரோ அதிகமான துன்பத்தை கொடுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் ஸ்பைடர் மேன்னை தோற்கடிக்க ஆஸ்க்கார்ப்பின் கடைசி வாரிசான ஹாரியிடம் இருந்து கம்பெனி பறிபோகாமல் காப்பாற்றுகிறார். இந்த இரண்டு வில்லனங்களின் கூட்டணி சிறப்பாக இருந்தது. பார்க்கர் - ஸிடெசி யின் காதல் கதையும் ஒரு பக்கம் செம்ம டேவலப்மெண்ட். கிளைமாக்ஸ் கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்திருக்கலாம் ஆனால் கதைக்கு தேவைப்படுகிறது. ஒரு மொத்த சிட்டியையும் ஒரு கல்லூரி மாணவன் காப்பாற்ற வேண்டும் என்றால் அது எந்த அளவுக்கு கடினமானது என்பதை இந்த படத்தில் இருந்து கற்றுக்கொள்ளலாம். இந்த படம் ரிலீஸ் ஆன சமயங்களில் மார்வேல் ஸ்டுடியோவின் கேப்டன் அமெரிக்கா , தோர் டார்க் வோர்ட் படங்கள் எல்லாம் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருந்தது. மேன் ஆஃப் ஸ்டீல் ஒரு மாடரெட் சக்ஸஸ். இந்த படம் கதைக்காக நன்றாக எடுக்கப்பட்டது.
இப்போது சமீபத்தில் ஸ்பைடர் மேன் லோடஸ் என்ற ஃபேன் ஃபிக்ஷன் வகையறா என்று வெளிவந்த ஒரு படம் பார்க்கர் - ஸ்டேசி கதையை வேறு மாதிரி கொடுக்க முயற்சி பண்ணி எப்படியோ போனது. அது வேறு விஷயம். பார்க்கர் மற்றும் ஸிடெசியின் காதல் உண்மையில் ஒரு நல்ல ரொமான்டிக் டிராக். இதுவரை வெளிவந்த ட்வைலைட் படங்கள் எல்லாம் நோட்ஸ் எடுத்துக்கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும். இந்த படத்தில் எனக்கு பெர்சனல் ஆன ஃபேவரட் இந்த பார்க்கர்- ஸிடெசியின் கெமிஸ்ட்ரிதான். ஒரு நல்ல லவ் ஸ்டோரி இந்த படத்தின் கதைக்குள் சென்றுக்கொண்டு இருக்கும். இந்த படம் மொத்த அவெஞ்சர்ஸ்க்கும் ஈடு கொடுக்கும் ஒரு சிங்கிள் ஹீரோ சென்டர்ட் படம் என்று சொல்ல முடியாது. சயின்ஸ் ஃபிக்ஷன் , ரொமான்ஸ் , ஆக்ஷன் என்று நிறைய விஷயங்களை கலந்த ஒரு சூப்பர் ஹீரோ படம். THE AMAZING SPIDER MAN 3 எடுத்து இந்த கதையின் ஸ்டோரியை மொத்தமாக சரிபண்ணியிருக்கலாம். ஆனால் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் இப்போது மார்வேல்லின் சமீபத்திய படமான ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படம் மூலமாக இந்த காதாப்பாத்திரத்துக்கு ஒரு நல்ல கன்டினியூவேஷன் கொடுத்துள்ளார். ஃப்யூச்சர் படங்களில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment