Sunday, August 13, 2023

CINEMA TALKS - THE WITCHER 1-3 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



இந்த இணைய தொடர் உங்களை வேறு ஒரு ஃபேண்டஸி உலகத்துக்கே கொண்டுபோகும். நிறைய மாயாஜால சாகசங்கள் நிறைந்த இந்த இணைய தொடருடைய கதையானது இரண்டு தனித்தனி கதாப்பாத்திரங்களை சார்ந்து இருக்கிறது , முதலில் டைட்டில் கதாப்பத்திரம் தி விட்ச்சர், மாயாஜால சக்திகளுடன் மொனஸ்தர் அரக்க உயிரினங்களிடமும் பூதங்களிடமும் தேவைப்பட்டால் மனிதர்களிடம் கூட சண்டை போட்டு காப்பாற்ற வேண்டிய கடமைகளை கொண்ட நிறைய நாட்கள் வாழக்கூடிய மேம்பட்ட போர்க்கலைகளின் அமைப்பான விட்சர்ஸ் குழுவின் மிகவும் திறமையான வேட்டைக்காரர்தான் வெள்ளை ஓநாய் என்ற பட்டப்பெயர் கொண்ட GERALD OF RIVIA - ஜெரால்ட் ஆஃப் ரிவியா - இவருக்கு மாயாஜால சக்திகளும் மேலும் சில நூற்றாண்டுகளுக்கும் மேலே உயிரோடு இருந்த வாழ்க்கையில் கிடைத்த போர் அனுபவங்கள் மற்றும் அரக்க உயிரினங்களை வேட்டையாடிய அனுபவங்கள் இருப்பதால் இவரை அவ்வளவு எளிதில் யாராலும் தோற்கடிக்க முடியாது. ஒரு கட்டத்தில் இளவரசி ஸிரியேல்லா என்ற ஒரு மிகப்பெரிய நாட்டின் பேரரசின் கடைசி வாரிசை காப்பாற்றி பாதுகாக்கும் பொறுப்பு இவருக்கு கிடைக்கிறது. ஆனால் இளவரசி ஸிரியேல்லாவை கொல்ல விரும்புவது எதிரி நாடுகள் மட்டும் அல்ல. இந்த வெப் சீரிஸ் இருக்கும்  இனங்களில் உள்ள அனைவருமே நிறைய காரணங்களுக்காக இளவரசிக்கு ஆபத்து கொடுக்கவே அனைத்து வேலைகளையும் செய்கின்றனர் என்பது போல கதை அமைக்கப்பட்டு இருக்கும் . GERALD யாரையும் நம்பவும் முடியாது அதே சமயத்தில் இளவரசி CIRIELLA வை ஒரு வீரமிக்க பெண்மணியாக வரப்போகும் ஆபத்துகளை தடுக்கும் அளவுக்கு திறமையுடன் வளர்க்க வேண்டும். இப்போதுதான் அடுத்த கதாப்பத்திரம் YENNEFER OF VENDENBERG யேனிஃபர் ஆஃப் வேண்டேன்பேர்க் இவள் ஒரு மாயாஜால கலைகளை நன்கு கற்று தேர்ந்த ஒரு சிறப்பான மாயாஜால பெண்மணி. தன்னுடைய குழந்தை பருவத்தில் இருந்து கொடுமைகளை அனுபவித்து வளர்ந்ததாலும் பின்னால் மாயாஜாலங்களை கற்றுக்கொண்டு அரசரின் தலைமை மாயாஜால உதவியாளராக இருந்த அனுபவத்தாலும் நிறைய திறன்களை வளர்த்துக்கொண்டு இருந்த இந்த வீராங்கனை கடந்த கால வாழ்க்கையில் ஜெரால்ட் செய்த உதவிகளால் இந்த  ஜெரால்ட்க்கு கடமைப்பட்டு இருப்பதாலும் மேலும் ஒரு நல்ல வாழ்க்கையை விரும்புவதாலும் ஆரம்பத்தில் ஒரு உதவியாக ஜெரால்ட்டையும் இளவரசியையும் காப்பாற்ற முயற்சிக்கும் இந்த மாயாஜால பெண்மணி கடைசியில் ஒரு குடும்பமாகவே இவர்களை கருதுகிறாள். ஒரு திறமையான வேட்டைக்கார வீரர் , சிறப்பான மாயாஜால வீராங்கனை மற்றும் பாதுகாக்கப்பபட வேண்டிய கடைசி வாரிசான பட்டத்து இளவரசி என்று இந்த மூன்று பேரின் பயணம்தான் இந்த THE WITCHER நெடுந்தொடரின் கதை. டாலென்டட் காஸ்ட் மற்றும் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த தொடர் இளம் வயதினருக்கு பொருத்தமாக இல்லை என்றாலும் மெச்சூரிட்டி நிறைந்த ஆடியன்ஸ் கண்டிப்பாக பார்க்கலாம். இந்த விமர்சனம் எழுதும் இந்த நேரம் நான் கேம் ஆஃப் திரான்ஸ் என்ற நிறைய கேள்விப்பட்டுள்ள வெப் சீரிஸ்ஸை பார்த்தது இல்லை. ஆனால் THE WITCHER ஒரு மிகவும் சிறப்பான ஃபேண்டஸி வெப் தொடர் அதனால் கண்டிப்பாக பார்க்கவும். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...