THE FLASH 2023 - இந்த படத்துடைய கதையில் மற்றும் விஷுவல் ஆன காட்சியமைப்புகளை பார்க்கும்போது போன டி ஸி திரைப்படங்கள் போலவே இந்த படமும் மற்ற படங்களில் இருந்து டோன் மாறியுள்ளது. பொதுவாக இந்த படம் அதிக்கப்படுத்தப்பட்ட நகைச்சுவை காட்சிகளுக்காக கதைகளில் நிறைய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. ஆனால் இந்த படம் பார்க்கலாம். நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் நல்ல திரைக்கதை இந்த படத்தில் இருக்கிறது. இருந்தாலும் இந்த படத்தில் மிகவும் சின்ன சின்ன விஷயங்கள்தான் இந்த படத்தை யோசிக்க வைக்கிறது . காலத்தை கடந்து செல்லும் சக்தியுள்ள பேர்ரி ஆலன் எனும் பிளாஷ் தடயவியல் துறையிலேயே வேலை பார்த்த அனுபவம் மிகுந்த சூப்பர் ஹீரோவாக இருப்பினும் அவருடைய அம்மாவை எதற்காக நேரடியாக காலத்தை கடந்து கொல்லப்பட்ட நாளுக்கே சென்று காப்பாற்றிவிட கூடாது ? அல்லது கொன்றது யார் என்றாவது பார்க்கலாமே ? இல்லை அதை பற்றி பார்ரி ஆலன் யோசிக்க கூட இல்லை. நீங்கள் பிளாஷ் தொலைக்காட்சி தொடர் பார்ப்பவராக இருந்தால் கண்டிப்பாக கிராண்ட் காஸ்டின் நடிக்கும் பிளாஷ் காலத்தை கடந்து போகும்போது அம்மாவை கொன்றது ரிவர்ஸ் பிளாஷ் என்ற வில்லன் என்று கண்டுபிடிப்பார் அடுத்தடுத்து கதை ஸ்வரஸ்யமாக நகரும். ஆனால் இங்கே லாஜீக்கில் பிரச்சனை இருக்கிறது. நல்ல விஷயம் என்னவென்றால் அருமையான நடிப்பு. எஸ்ரா மில்லர் (பிளாஷ்) , சாஷா கேல் (சூப்பர் வுமன்), மைக்கேல் கியாட்டான் (பேட் மேன்) எல்லோருமே பிரமாதமான நடிப்பை கொடுத்துள்ளனர். மேலும் கால் கடோட் (வோன்டர் வுமன்) மற்றும் பென் ஆஃப்லக் (பேட் மேன்) இவர்களின் CAMEO நடிப்பும் பிரமாதமாக உள்ளது. இந்த படத்தில் நான் NOTE பண்ணுணது என்னன்னா இந்த கதையில் காலத்தில் மாற்றங்களை உருவாக்க முடியாது என்று ஒப்புக்கொண்டு மாறுபட்ட பிரபஞ்சங்களால் பாதிப்பு உருவாக கூடாது என்று வெளியே வரும் காட்சிகள் ஒரு நல்ல திறமையான எழுத்துவகையில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாகவே காட்சியாக எடுக்கும்போது வெளிப்பட்டு இருந்திருக்கும். இருந்தாலும் இந்த படத்தின் குழப்பான ப்ரொடக்ஷன் காரணமாக அளவுக்கு அதிகமான கலகலப்பான காட்சிகளை கொடுத்து மொத்த கதையயை மாற்றியதால் DC ஃபேன்ஸ் எதிர்பார்த்த இந்த படத்தின் முக்கியமான "பிளாஷ் பாயிண்ட்" கதைக்களம் இன்னும் நன்றாக வெளிப்படவில்லை. இப்போது எல்லாம் சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சமீபத்திய டி ஸி படங்கள் அதிக வசூல் பணத்தை எடுப்பது இல்லை என்பதால் இந்த படத்துக்கு புதிதாக யோசித்து எடுத்த ஸ்டுடியோவின் இந்த மாறுபட்ட முயற்சிகள் பாராட்டுக்கு உரியதே, இருந்தாலும் இந்த மாதிரி படங்கள் எடுத்தால் இன்னும் ரசனைத்தன்மை மிக்கதாக மாற்றவேண்டும் என்ற முயற்சியில் கவனமாக இருந்திருக்கலாமே ? என்பதுதான் இந்த படத்தை பார்த்த ஆடியன்ஸ் கருத்து. மொத்ததில் பிளாஷ் ஒரு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம்தான். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். மற்ற டி ஸி படங்களையும் பார்த்த பின்னால் இந்த படம் பார்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் இந்த படத்தை பார்ப்பதற்க்கு பதிலாக CW - இன் AIRROWVERSE வகையில் இருக்கும் எல்லா நெடுந்தொடர்களையும் பார்க்கலாம். பட்ஜெட் நிறைய இருந்தாலும் கதை நன்றாக இருந்தாலும் இந்த படம் கிளைமாக்ஸ்ல WIN - WIN என்ற நிலையை அடையவில்லை. இந்த படத்தின் என்னுடைய கருத்து இதுதான் . இன்னும் நிறைய கருத்துக்கள் படிக்க தமிழ் வெப்சைட் வலைத்தளத்தை ஃபாலோ பண்ணுங்கள் . நம்ம தமிழ் இணையதளத்தை பயன்படுத்தியதற்கு என்னுடைய நன்றிகள். இந்த மாதிரி நிறைய தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை வெளிவந்த நிறைய படங்களின் விமர்சனங்களை தெரிந்துகொள்ள நம்முடைய வலைத்தளம் NICE TAMIL BLOG - ஐ கண்டிப்பாக சந்தா பொத்தான் மற்றும் ஃபாலோ பொத்தான்களை அழுத்தி சப்ஸ்க்ரைப் பண்ணிக்கொள்ளவும். இந்த வலைப்பூவின் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும், இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்.
No comments:
Post a Comment