பொதுவாக மார்வேல் ஸ்டுடியோ வந்த பின்னாலும் முக்கியமான கதாப்பத்திரமான ஸ்பைடர் மேன் கதாப்பத்திரத்தின் ரைட்ஸ் ஒரு காலத்தில் மார்வேல் நிறுவனத்தாரால் சோனி நிறுவனத்துக்கு விற்கப்பட்டதால் அதுவே ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. சோனியின் ஸ்பைடர் மேன் ட்ரியாலாஜி 2003 - 2007 நல்ல பாக்ஸ் ஆஃபிஸ் கொடுத்தாலும் மார்வேல் 2008 இன் IRON MAN படத்தில் சூப்பர் ஹீரோ படங்களுக்கான மார்க்கெட்டையே மாற்றிவிட்டது.
சோனி ஸ்பைடர் மேன் படங்களுக்காக இருக்கும் ரைட்ஸ் பயன்படுத்தி ஒரு புதிய படம் வெளிவிட வேண்டும் என்று முடிவு பண்ணியது. சமீபத்தில் டார்க் நைட் படம் கொடுக்கும் சக்ஸஸ் மற்றும் விமர்சன வரவேற்ப்புகளை பார்த்து ஒரு உண்மையான வாழ்க்கையில் ஸ்பைடர் மேன் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு சிறப்பான ஸ்பைடர் மேன் படத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு பண்ணியது.
அப்படி உருவானதுதான் தி அமேஸிங் ஸ்பைடர் மேன் படங்கள். மார்வேல் வட்டாரத்தில் அவெஞ்சர்ஸ் படங்களை உருவாக்க ஸ்டுடியோ மொத்த உழைப்பையும் கொட்டிக்கொண்டு இருக்கும்போது சோனி ஒரு சாஃப்ட்டான ஸ்பைடர் மேன் ரியல்லிஸ்டிக் படத்தை எடுத்தது.
தி அமேஸிங் ஸ்பைடர் மேன் - ஒரு ஸ்பைடர் மேன் படம் அந்த படத்தின் ரொமான்டிக் ட்ராக்குக்காகவே ஒரு தனியான ஃபேன் பேஸ் வைத்து இருக்கிறது என்று சொன்னால் அது இந்த படம்தான். ஒரு பார்ட் சூப்பர் ஹீரோ படம் ஒரு பார்ட் சயின்ஸ் ஃபிக்ஷன் படம்.
சயின்ஸ் அண்ட் டெக் துறைகளில் இண்டரெஸ்ட் உள்ள உயர்நிலை பள்ளி மாணவராக ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் , இவர் நிறைய நாட்களாக காதலிக்கும் கவேன் ஸிடெசி இவர்களின் காதல் ஒரு பக்கம் போக இன்னொரு பக்கம் ஆஸ்காரப் நிறுவனம் உயர் ரக ஆயுதங்கள் தயாரிப்பு ஆராய்ச்சிக்காக வைத்திருந்த சோதனை சிலந்தி பூச்சிகள் கடிக்கவே அவருடைய இரத்ததில் இருக்கும் ஜெனெடிக் மாற்றம் அடைந்து ஒரு அதிகபட்சமாக வலிமையை கொடுக்கிறது.
கிடைத்த புதிய சக்திகளால் அவருடைய மாமாவை கொன்றவரை பழி வாங்க வெறித்தனமாக சிட்டியில் தேடுகிறார், வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கையில் கவேன் ஸிடெசி காதல் ஒரு பக்கம் போக பீட்டர் பார்க்கர் பண்ணிய உதவியால் வெட்டப்பட்ட உடல் பாகங்களை மறுமுறை கொண்டுவரும் ஆராய்ச்சியை முடித்து சைண்டிஸ்ட் கானர்ஸ் சாதனை படைக்கிறார்.
ஆனால் அடுத்த நாள் கானர்ஸ் ஆராய்ச்சியின் பின்விளைவாக லிசார்ட் என்ற மான்ஸ்ட்டராக மாறிவிடுகிறார். இப்போது கானர்ஸை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் ஸ்பைடர் மேன்க்கு கைகொடுத்ததா என்பதே படத்தின் கதை.
இந்த ஸ்பைடர் மேன் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் வெர்ஷன் நம்முடைய நிஜவாழ்க்கையில் இருப்பது போலவே டிசைன் பண்ணப்பட்டு இருப்பதால் கதையுடன் நன்றாக பொருத்தி பார்க்க முடிகிறது, ஐ மாக்ஸ் காட்சிகள் வேறு லெவல். டீடெயில்லிங்க் பிரமாதம். சயின்ஸ் ஃபிக்ஷன் லெவல்க்கு காட்சிகளில் ஒவ்வொரு கதையும் நன்றாக சொல்லப்பட்டு இருக்கும். ஹீரோ வில்லைனை அடிக்க வேண்டும் என்று ஒரு பேசிக் டெம்ப்ளேட்டில் இருந்து அவுட் ஆஃப் பாக்ஸ்ஸாக யோசித்த ஒரு படம் இந்த அமேஸிங் ஸ்பைடர் மேன். இந்த படத்தின் அடுத்த பாகம் அமேஸிங் ஸ்பைடர் மேன் 2 பற்றி அடுத்த வலைப்பூ பகுதியில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment