Tuesday, August 8, 2023

CINEMATIC WORLD - 087 - HELLBOY & HELLBOY - GOLDEN ARMY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



இந்த படம் வெளிவந்த 2000 ஆவது ஆண்டுகளில் நல்ல விஷுவல் எஃபக்ட்ஸ் கொடுப்பது ரொம்பவே கடினமான விஷயம் , சோனியின் ஸ்பைடர் மேன் படங்களில் பிசிறு தட்டாத வி எஃப் எக்ஸ் காட்சிகள் சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று ஒரு நல்ல ஹைப் கொடுத்து இருந்தது, அந்த வகையில் காமிக் புக் கதாப்பத்திரமான ஹெல் பாய் படங்களின் இரண்டு தனித்த லைப் ஆக்ஷன் இன்ஸ்டால்மென்ட் இந்த ஹெல்பாய் திரைப்படங்கள். இந்த படங்களின் கதைக்கு வருவோம் , நிறைய வகை மான்ஸ்ட்டர்கள் பூமியின் அடுத்தடுத்த பரிமாணங்களில் காலாகாலமாக வாழ்ந்துகொண்டு பூமியின் அழிவை நோக்கி காத்துக்கொண்டு இருக்கின்றன. இவைகளிடம் இருந்து பூமியை காப்பாற்றும் அமைப்பு ஹெல்பாய் மற்றும் சக நண்பர்கள் ஆபிரகாம் மற்றும் லீஸ் ஷேர்மேன் உதவியுடன் இந்த அரசாங்கம் சாராத தனியார் அமைப்பான பாராநார்மல் ரிசர்ச் அண்ட் டிஃபென்ஸ் அமைப்போடு சேர்ந்து மான்ஸ்டர்களை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார், ஒரு பக்கம் ஹெல்பாய்யின் சக்திகளை அடைய நினைக்கும் மோசமான அமைப்புகள் மறுபக்கம் மான்ஸ்டர்களை வெளியே கொண்டு வந்து போராடும் வில்லன்கள் என ஒரு பாராநார்மல் உலகத்தின் வேர்ல்ட்பில்டிங் இந்த படத்தின் கதையில் மிகவும் தெளிவாக வொர்க்அவுட் ஆகியிருக்கும், பிசிறு இல்லாத ஸி.ஜி.ஐ மற்றும் பராக்டிக்கல் எஃபக்ட்ஸ் இந்த ஹெல்பாய்யை கொஞ்சம் அதிக நம்பிக்கையுள்ள பலம் வாய்ந்த சூப்பர் ஹீரோவாக காட்டுகிறது. என்னதான் மக்களால் வெறுக்கப்பட்டாலும் ஹெல்பாய் தனிமையில் தவித்து யாராவது புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் காட்சிகளிலும் இவரை காதலிக்கும் நெருப்பு சக்தியுள்ள லிஸ் இவரால் உலகமே அழிந்தாலும் இவருடைய நலனைவிரும்பும் காதலி லீஸ்ஸின் காட்சிகள் இந்த கதாப்பாத்திரங்களை நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளது, நீங்கள் கோல்டன் ஆர்மி படம் பாரத்தீர்கள் என்றால் காண்ட் ஸ்மைல் வித் அவுட் யு என்ற பாடலை உங்கள் பிளே லிஸ்ட்டில் சேர்க்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இப்போது எல்லாம் இந்த சோனியின் வெனம் படம் போன்று கதைகளை குறைவாகவும் ஃபேன்ஸ் எதிர்பார்ப்புகளை அதிகமாகவும் கொடுக்கும் படங்கள் வந்த காரணத்தால் புதிய இன்ஸ்டால்மெண்ட் ஹெல்பாய் 2019 படத்தை தப்பி தவறி கூட பார்த்து விடாதீர்கள். கதை கூட கொஞ்சம் ஓகே என்று சொல்லி விடலாம் ஆனால் இந்த 2019 படத்தில் இருக்கும் வி எஃப் எக்ஸ் போல ஒரு மோசமான விசுவல் எஃபக்ட்ஸ் பயன்பாட்டை நான் வாழ்நாளில் எந்த படத்திலும் பார்த்தது இல்லை. கண்களால் காணவே  சகிக்க முடியாத ஒரு படம் ஹெல்பாய் 2019 இன்ஸ்டால்மெண்ட்.. மற்றப்படி இந்த ஹெல்பாய் மற்றும் ஹெல்பாய் கோல்டன் ஆரமி திரைப்படங்கள் நல்ல படங்கள் எனலாம்.  

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...