Wednesday, August 16, 2023

HELLO ARTICLE !!! - இந்த உலகத்தை பற்றி கொஞ்சம் பேசலாமா ?




1. இந்த உலகத்தில் இன்னைக்கு தேதிக்கு இருக்கும் வாழ்க்கை கண்ணுக்கு தெரியாத ஒரு போர். நிறைய பணம் இருக்கும் மேல்மட்டத்துக்கும் கொஞ்சம் கூட பணம் இல்லாத தரைத்தளத்துக்கும் காலாகாலமாக நடந்துகொண்டு இருக்கும் ஒரு போர். நம்ம பரிணாம வாழ்க்கையில் உணவு , உடை , இருப்பிடம் , வாழ்க்கை என்ற விஷயங்களுக்காக நம்முடைய முன்னோர்கள் போர்களை செய்தார்கள் போட்டி போட்டார்கள் என்றால் இப்போது இது எல்லாவற்றையும் சேர்த்து கொடுக்கும் ஒரே ஒரு விஷயத்துக்காக போராட்டம் பண்ணுவதாக வாழ்க்கை சென்றுக்கொண்டு இருக்கிறது. 

2. இந்த உலகம் இதுதான் முக்கியமான விஷயம் என்று ஒரு விஷயத்தை காட்டும் , ஆனால் அது முக்கியமான விஷயமாகவே இருக்காது. விதிமுறைகளை பின்பற்றுபவர்களை நேசிப்பது போலவும் ஆதரவு கொடுப்பது போலவும் மக்கள் நடிப்பார்கள் ஆனால் விதிமுறைகளை மீறி வேலையை செய்தால் மட்டும்தான் முன்னேற முடியும். 

3. நீங்கள் நூறு வருஷம் வாழ்ந்தாலும் 36000 நாட்கள்தான் கணக்கு போட்டால் வரும் அதனால் ஒரு ஒரு பகலும் ஒரு ஒரு இரவும் முக்கியமானது. 

4. ஒரு விஷயம் நம்முடன் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கும்  என்பது அந்த விஷயத்தை நாம் இழந்தால் மட்டும்தான் புரிந்துகொள்ள முடியும் , இல்லையென்றால் அதன் அருமை புரியாது. 

5. உங்களுடைய ஆசைகள் என்பது உங்களுக்கு பிடித்த பொருளை இந்த உலகத்தில் இருந்து பெற நீங்கள் போடும் போர் திட்டங்கள், ஆசைப்படுவது ஒரு குற்றம் அல்ல, உலகம் போர்க்களமாக இருக்கும்போது போர்களை செய்துதான் தேவைப்படும் விஷயங்களை அடைய முடியும். 

6. நிறையவே நடிக்கவும் நிறையவே பொய்களை சொல்லவும் கற்றுக்கொள்ளுங்கள், முடிந்தவரையில் யாரிடமும் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நடந்துகொள்ள வேண்டாம். யாருடைய தவறையும் தொட்டு கூட பார்க்க வேண்டாம், சரியாக வரும் வரை பாருங்கள். 

7. கொஞ்சம் பேரிடம் தூரமாக இருப்பதே நல்லது. அவர்களை கண்டுகொள்ள வேண்டாம். மனசு முழுக்க விஷம்தான் அவர்களுக்குள்ளே இருக்கும். 

8. மனிதர்களை எடைபோடும் செயல்முறை தவறு இல்லை ஆனால் உங்கள் கணிப்பு சரியானதா என்பதை சில நாட்கள் நேரம் எடுத்து நன்றாக கவனித்து முடிவெடுங்கள், பார்த்த முதல் சில மணி நேர பேச்சுகள் மனிதர்களை பற்றிய முழுமையான புரிதலுக்கு போதாது. 

9 உங்கள் வங்கி கணக்கில் நிறைய பணம் , நிறைய நிறைய பணம் சம்பாத்தித்து வைத்துக்கொள்ளுங்கள். யாருக்காகவும் கொடுக்க வேண்டாம். 

10. பாங்க் பேலன்ஸ் கண்டிப்பாக 6 டிஜிட்க்கு மேலே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். 

11. ஒருவருக்கு தெரிந்த விஷயம் இன்னொருவருக்கு தெரியாது அதனால் பொறுமையாக பேசுங்கள் , உங்களுக்கு தெரியாத விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள். 

12. உங்களது சுற்றுப்புறம் அமைப்பில் பாதுகாப்பாகவும் தன்மையில் சுகாதரமாகவும் நல்ல குளிர்ச்சியாகவும் இருக்குமாரு பார்த்துக்கொள்ளுங்கள், சூடான இடத்தை விட குளிரான இடத்தில் மூளை ஸ்மார்ட்டாக வேலை செய்யும். 

13. ஒரு புத்தகம் படித்தால் மொத்தமாக படியுங்கள் , ஒரு இன்ஃபர்மேஷன் இருந்தால் சம்மந்தப்பட்ட மொத்த தகவலையும் தெரிந்துகொண்டு களத்தில் இறங்குங்கள், அரைகுறை அறிவை வைத்து ஸீன் போடுவது சுலபம் ஆனால் மெயின்டைன் பண்ணுவந்து கஷ்டம். உங்களுக்கு தெரியாத விஷயத்தை தெரியாது என்று சொல்லிவிட்டு அடுத்தடுத்த வேலையை பார்த்துவிடுங்கள். 

14. உங்களுடைய உயிர் மேலே அதிகமான ஆசையை வைக்க வேண்டாம் , நிறைய நேரங்களில் நீங்கள் உயிரை கொடுத்துதான் ஆக வேண்டும். 

15. மோட்டிவேஷன் என்னைக்குமே போதுமான பொருட்கள் , போதுமான நேரம் , போதுமான அறிவு , போதுமான தொடர்புகள் இந்த நான்கு விஷயங்களில் ஒரு விஷயம் இல்லை என்றாலும் கூட அந்த மனிதனுக்கு வேலைக்கே ஆகாது. அவனுக்கு மோட்டிவேஷன் கிடைப்பது குடோனில் சேல்ஸ் ஆகாத பொருட்களை காலவரையின்றி போட்டு வைப்பது போலத்தான். 

16. சமையல் பொருட்கள் இல்லாமல் சமையல் பண்ண சொல்வதுதான் உலகத்தின் மிகப்பெரிய முட்டாள்தனம் , ஒரு செயலை செய்ய என்னைக்குமே செயல் மட்டுமே போதுமானது இல்லை, பொருட்களும் வேண்டும். 

17. மனிதனின் மனது மாறக்கூடியாது, இன்னைக்கு உங்களை பிடிக்கும், இன்னும் ஒரு வருடம் கடந்தால் உங்களை பிடிக்காமல் போகலாம் , இன்றைய உறவோ , நண்பனோ , தெரிந்தவனோ யாராக இருந்தாலும் நாளைய எதிரியாக மாற வாய்ப்பு உள்ளது , இதனாலதான் உலகம் ஒரு போர் இங்கே எந்த செயல் செய்தாலும் கவனமாக செய்ய வேண்டும். 

18. நீங்கள் பார்க்கும் எந்த ஒரு கற்பனையான வேலைப்பாடுகள் அதாவது சினிமா , தொடர்கள் , புத்தகங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் நடப்பு வாழ்க்கையில் அதே போல அந்த செயலை நடத்திவிட முடியாது. கஷ்டம். மிகவும் கஷ்டம்.

19. உங்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் நீங்கள் கஷ்டப்பட வேண்டும் அல்லது உங்களுக்காக வேலை செய்பவர்கள் கஷ்டப்பட வேண்டும். 

20. மனித இனத்தின் மிக மோசமான விஷயம் கடன் , எந்த ஒரு காரணத்தை கொண்டும் கடனை வாங்க வேண்டாம், கடன் உங்களை ஒரு தனித்த எதிரியை போல தாக்கக்கூடிய ஒரு பலவீனம் , உங்கள் பலத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றால் இப்போதே அனைத்து கடன்களையும் அடைத்துவிடுங்கள். 

21. இந்த உலகமே நிறைய பொய்யான விஷயங்களை பொய்கள் என்று தெரிந்தும் நம்புவதற்கு கற்றுக்கொண்டுவிட்டது. அதுதான் உலகத்தின் பெரிய பிரச்சனை. 

22, ஒரு செயலை செய்யவேண்டுமென்றால் போதுமான நேரம் இல்லாமல் அந்த செயலை செய்து முடிக்க முடியாது. போதுமான நேரம் என்பது எந்த செயலுக்கும் மிக மிக முக்கியமான விஷயம். 

23, இந்த உலகம் உங்களிடம் இருக்கும் உண்மையான விஷயங்கள் அதாவது பொருட்கள் , சொத்துக்கள் மற்றும் உடமைகள் இவைகளுக்கு மட்டும்தான் மரியாதை கொடுக்கும். உங்களுடைய கற்பனையான விஷயங்களான அன்பு , அறிவு , திறமைகள் போன்றவற்றுக்கு மரியாதை எல்லாம் கொடுக்காது. 

24. உங்களிடம் ஐயாயிரம் இருந்தால் டேய் என்று சொல்லி கூப்பிடுவார்கள் , உங்களுடம் ஐந்து லட்சம் இருந்தால் பெயர் சொல்லி கூப்பிடுவார்கள் , உங்களிடம் ஐந்து கோடி இருந்தால் கண்டிப்பாக சார் என்று மரியாதை கொடுத்து கூப்பிடுவார்கள் இதுதான் உலக நியதியும் கார்ப்பரேட் படைப்புகளின் சாரம்சமும் ஆகும். 

25.  உங்களுக்கு நிறைய அறிவு இருந்து மட்டும் பிரயோஜனம் இல்லை அந்த அறிவை பயன்படுத்தி பொருட்களாக மாற்ற வேண்டும். அப்படி உங்களால் மாற்ற முடியவில்லை என்றால் மிகப்பெரிய கஷ்டங்களையும் ஆபத்துகளையும் சந்திக்க வேண்டியது வரும். \

26. ஒரு சில நேரங்களில் கடந்த காலத்தை சேர்ந்த கருத்துக்கள் தவறு என்று சொல்லப்பட்டால் புதிதாக கொண்டுவரப்படும் சரியான கருத்துக்களை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும். 

27. ஒரு நேரத்தில் என்னைக்குமே ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்கள் , உங்களால் இரண்டு மூன்று விஷயங்களை சேர்த்து செய்ய முடியும் என்றாலும் ஒரு விஷயம் மட்டுமே செய்ய வேண்டும் என்ற வகையில் வேலையை பாருங்கள்.

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...