Sunday, August 6, 2023

CINEMATIC WORLD - 084 - CLOUD ATLAS - TAMIL REVIEW - திரை விமர்சனம் ! [REGULATION 2024 - 000120]

 




CLOUD ATLAS 2012 - "நிறைய நேரங்களில் சினிமாவை வெறும் ஒரு பொழுது போக்கு கருவியாக மட்டுமே பார்க்கிறோம், ஒரு நல்ல கதையை அல்லது ஒரு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சம்பவங்களின் தொகுப்பை கதையாக கொடுத்து காட்சிகளாக ரொம்பவுமே ரசிக்கும்படியான ஒரு விஷயத்தை உங்களுக்கு வழங்குவது சினிமா அந்த வகையில் உருவான சினிமாவின் வரலாற்றின் மிகச்சிறந்த சாதனை படம்தான் கிளவுட் அட்லஸ்.. வெவ்வேறு காலகட்டத்தில் வாழும் தனித்தனியான மனிதர்களின் வாழ்நாள் போராட்டங்கள், அதுக்காக அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் , நேசித்தவர்களின் இழப்புகள் . மாயாஜாலமான ஒரு கால இணைப்பு, மனிதனுடைய மனிதத்தன்மை , கேபிட்டலிசம் அளவுக்கு அதிகமானால் நடக்கும் கொடுமைகள், உரிமைக்கான போராட்டம் , பயத்தில் இருந்து மீண்டு வருதல் , தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் காப்பாற்ற தன்னுடைய மொத்த திறன்களையும் சப்போர்ட் பண்ணும் மக்களின் உதவியையும் பணயம் வைத்து உயிரை பணையம் வைத்து போராடிய இந்த படம் உங்களுடைய வாழ்க்கையில் சாவதற்க்கு முன்னால் ஒரு முறை , ஒரே ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் , இந்த உலகத்தில் இந்த காலத்தில் கூட நடக்கும் எல்லா கொடுமைகளையும் தட்டி கேட்டு மனித இனத்துக்கு ஒரு நல்ல கருத்தை சொன்ன ஒரு படம் இந்த கிளவுட் அட்லஸ், வெறும் விமர்சனங்கள் யார் வேண்டுமென்றாலும் சொல்லலாம், ஒரு மனிதன் போறான் , ஒரு படம் பார்க்கறான் , எனக்கு இந்த படம் பொழுதுபோக்கை கொடுக்கவில்லை என்றும் நான் இந்த படத்தை அவ்வளவாக நேசிக்கவில்லை என்றும் சொல்லிவிட்டு சென்றுகொண்டே இருக்கிறான். ஆனால் கடுமையான விமர்சனங்களை கொடுத்து ஒரு படத்தின் மரியாதையும் மதிப்பையும் கெடுக்க நினைக்கும் மோசமான விமர்சனம் பண்ணும் ஆட்கள் ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். இந்த உலகத்தில் எல்லா படங்களும் உங்களுக்கு பொழுது போகவேண்டும் என்ற காரணத்துக்காக எடுக்கப்படும் படம் கிடையாது. சில படங்கள் மட்டும்தான் மனிதர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் , அவர்களின் நம்பிக்கையாலும் , போராட்டத்தாலும் எப்படி தங்களின் கஷ்டங்களை தாண்டி மேலே வருகிறார்கள் என்று தைரியமாக சொல்கிறது. இந்த படம் ஒரு காலத்தின் பொக்கிஷம். வரலாற்றின் கல்வெட்டில் செதுக்கி வைக்க வேண்டிய ஒரு ஃபிக்ஷன் வொர்க் இந்த படம். கிளவுட் அட்லாஸ் என்ற புத்தகத்தை ஒரு படமாக எடுப்பது சாத்தியம் இல்லாத ஒரு விஷயம் என்று அமெரிக்க சினிமாவில் பேசிக்கொண்டு இருந்த காலகட்டத்தில் அதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மிகப்பெரிய பணம் செலவு பண்ணி இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்த பட குழுவினருக்கு கண்டிப்பாக மனித இனத்தில் எல்லோரும் நிறைய பாராட்டுக்கள் கொடுத்து வாழ்த்து அட்டைகளை அனுப்ப வேண்டும். இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கவும், ஃபேமிலியுடன் பார்க்கும் அளவுக்கு ஒரு சில காட்சிகள் இல்லை.என்பதால் தனியாக பார்க்கவும். இந்த மாதிரி ஒரு நல்ல இண்டரெஸ்ட்டிங்கான படம் அதே சமயத்தில் மனுஷங்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லியிருக்கும் படம் என்று பார்த்தால் நிறைய படங்கள் நம்ம கணக்குக்குள் அடங்காது.காலத்தால் அழிக்க முடியாத சாதனை இந்த படம்.  இந்த மாதிரி நிறைய தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை வெளிவந்த நிறைய படங்களின் விமர்சனங்களை தெரிந்துகொள்ள நம்முடைய வலைத்தளம் NICE TAMIL BLOG - ஐ கண்டிப்பாக சந்தா பொத்தான் மற்றும் ஃபாலோ பொத்தான்களை அழுத்தி சப்ஸ்க்ரைப் பண்ணிக்கொள்ளவும். இந்த வலைப்பூவின் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும், இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...