Tuesday, August 8, 2023

CINEMATIC WORLD - 086 - BLACK WIDOW - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



பொதுவாக ஒரு சூப்பர் ஹீரோ படம் என்றால் நிறைய ஆக்ஷன் அட்வென்சர் நிறைந்த கதையாக இருக்கப்போகிறது என்பதில் இன்று வரைக்குமே  ஆச்சரியம் இல்லை. ஆனால் குறிப்பிட்ட இந்த  பிளாக் விடோ என்ற படம்தான். மற்ற மார்வேல் திரைப்படங்களில் இருந்து தனித்து இருக்கிறது. ஆதரவில்லாத பெண் குழந்தைகளை கடத்தி சென்று அவர்களுக்கு சக்திகள் மற்றும் சண்டை பயிற்சிகளை கட்டாயப்படுத்தி கொடுத்து கருணையற்ற கொலைகார ஆயுதங்களாக மாற்றும் ஒரு அமைப்புதான் ரெட் ரூம். இந்த அமைப்பின் தலைவனை நேரடியாக தாக்க முடியாத இந்த அமைப்பால் பாதிக்கப்பட்ட பிளாக் விடோ நடாஷா ஒரு விபத்தை உருவாக்கி தலைவனை சாகடிக்கிறாள்.  ஆனால் அப்படிப்பட்ட கொடிய வில்லன் சில வருடங்களில் மறுபடியும் உயிருடன் வெளியே வந்து இன்னும் பெரிய அளவில் பிளாக் விடோ ப்ரோக்ராமே செயல்படுத்தும்போது ஏற்கனவே சிவில் வார் திரைப்படத்தில் நடந்த சம்பவங்களின் பிரச்சனைகளால் உலக அளவில் தேடப்படும் பிளாக் விடோ இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கிறாள் என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை. ஒரு சூப்பர் ஹீரோ கதைகளில் வழக்கமான டேம்ப்லெட் காட்சிகள் இருந்தாலும் அவெஞ்சர்ஸ் எண்டுகேம் படத்தில் இந்த கதாப்பத்திரம் முடிவுக்கு வந்து இருந்தாலும் ஒரு சாலிட் ஆன திரைக்கதை இந்த படத்தில் உள்ளது. பிளாக் விடோ கதாப்பாத்திரம் அதீத திறமை மிக்க ஒரு உளவு துறை வீராங்கனை என்று மட்டுமே இல்லாமல் ஒரு மனிததன்மை மிக்க சாதாரணமாக வாழ விரும்பும் கதாப்பத்திரமாக காட்டுவதில் இயக்குனரின் திறன் மிக அருமையாக வெளிப்பட்டு உள்ளது. இந்த படத்தின முதல் காட்சி முதல் கடைசி காட்சிகள் வரை ஸ்டண்ட்ஸ் எல்லாமே மார்வேல் மொழியில் சொல்லப்போனால் அவெஞ்சர்ஸ் லெவல் பிரச்சனை என்ற அளவுக்கு அவ்வளவு நேர்த்தியாக உள்ளது. கதையுடன் சம்மந்தப்பட்ட கேரக்டர் டெவலப்மெண்ட் வேற லெவல். மொத்தத்தில் பார்னே திரைப்படம் போல ஒரு ஸ்பை வேர்ஸஸ் எவரிதிங்க் என்ற இந்த படத்தின் பரீமைஸ் மிக தெளிவாக கொடுத்துள்ளது, புதிய கதாப்பாத்திரங்கள் சகோதரி எலேனா , லேடி பிளாக் விடோ , ரெட் கார்டியன் கொஞ்சம் காட்சிகளே வந்தாலும் டிரேட்மார்க் சூப்பர் ஹீரோ ஃபைட் காட்சிகளுக்கு உதவியாக இருக்கின்றனர். ஹெலிகாப்டர் வைத்து பனி நிறைந்த நாட்டின் தனித்த சிறைச்சாலையில் இருந்து ஒருவரை மீட்கும் காட்சி கிட்டத்தட்ட ரெட் நோட்டீஸ் படத்தின் காட்சி போலவே இருக்கிறது. மொத்ததில் இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் பொதுவான சூப்பர் ஹீரோ டேம்ப்லேட்டுக்குள் அடங்காமல் ஒரு சூப்பர் ஹீரோவாகவே இருந்தாலும் அவங்களுக்கும் மனதுக்குள் வலியும் வேதனையும் இருக்கும். HUMAN TRAFFIKING உலகம் முழுக்க ரொம்பவுமே அச்சறுத்தலான ஒரு குற்றச்செயல். ஒரு MARVEL படம் இந்த குற்றத்தை தட்டி கேட்பது போல ஒரு படம் எடுத்து வெளியிட்டு இருப்பது ரொம்பவுமே பாராட்டுக்கு உரியது. மற்றபடி உங்களுக்கு கொஞ்சம் கமர்ஷியல் கலந்த ஒரு நல்ல ஆக்ஷன் திரைப்படம் வேண்டும் என்றால் இந்த படம் ஒரு பெஸ்ட் சாய்ஸ்.

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...