இன்னைக்கு டாம் ஹாலன்ட் - டெய்ஸி ரைட்லே இணைந்து நடித்துள்ள ஒரு நல்ல சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை பற்றி பார்க்கலாம், கேயோஸ் வாக்கிங் - இந்த படம் "தி நைஃப் ஆஃப் நெவர் லெட்டின்க் கோ" என்ற நாவலின் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாகும்.
இந்த படத்துடைய கதை என்னவென்றால் விண்வெளி பயணங்கள் மூலமாக மனித இனம் இன்னொரு புதிய கிரகத்தில் தங்குகின்றனர், ஆனால் அங்கே இருக்கும் மாய ஆற்றலால் ஆண்கள் மனதுக்குள் என்னென்ன நினைத்தாலும் என்னென்ன பேசினாலும் அது காட்சிகளுடன் சத்தமாக வெளியே கேட்டுவிடும். அவர்களோடு வந்த பெண்கள் அனைவரும் ஒரு தவிர்க்க முடியாத போரால் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் அவருடைய அம்மா இறந்துவிட்டார் என்றும் சொல்லி சொல்லி வளர்க்கப்படுகிறார் கதாநாயகன் டாட் எவிட் . ஆனால் புதிதாக ஒரு விண்வெளி கப்பல் விபத்தால் பெண்களே இல்லாத இந்த உலகத்தில் சிக்கிக்கொள்கிறார் கதாநாயகி வயோலா எட். மற்ற விண்வெளி கப்பல்களுக்கு உதவி கேட்டு மெசேஜ் அனுப்ப முடிந்தால் காப்பாற்றப்பட வாய்ப்புகள் இருக்கிறது என்ற வகையில் முயற்சி பன்னும்போது ஆண்களின் காலனியில் கைதியாக மாட்டிகொள்கிறார்.
வயோலாவுக்கு இங்கே இருப்பது ஆபத்து என்பதால் கதாநாயகன் டாட் எவிட் அவளை உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இன்னொரு அனைத்து மக்கள் வாழும் பகுதிக்கு பயணம் மேற்கொள்வதால் உருவாகும் பிரச்சனைகள் என்னென்ன ? வில்லனை எப்படி தோற்கடித்தார்கள் என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.
ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக தனித்து இருக்கிறது இந்த படம். பெரிய பட்ஜெட். திறன் வாய்ந்த நடிப்பு பெர்ஃபார்மன்ஸ்கள் , காட்சி அமைப்புகள் , பின்னணி இசை , வசனங்கள் , தயாரிப்பு , விஷுவல் எஃபக்ட்ஸ் என்று எல்லாவற்றிலும் வெற்றிகரமான முறையில் எக்ஸிக்கியூஷன் இந்த படத்தில் இருந்தாலும் பாக்ஸ் ஆஃபிஸ் என்ற வகையில் அவ்வளவு வசூல் சாதனை கொடுக்கவில்லை. இருந்தாலும் ஒரு தரமான படம் எனலாம்.
No comments:
Post a Comment