நித்தம் ஒரு வானம் - இந்த படத்துடைய கதை - ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அசோக் செல்வன் தனக்கு பிடித்த விஷயங்களை மட்டும்தான் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் ஒரு ஆப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஸார்டர் இருப்பதால் அதிகமாக யாரிடமும் பேசாமல் இருக்கிறார். வெளியே பயணிப்பதை தவிர்க்கிறார். காரணம் இல்லாமல் கோபமாகவும் நடந்துகொள்கிறார். இப்படி அவருடைய வாழ்க்கை சென்றுக்கொண்டு இருக்கும்போது . இவரை ஒரு அளவுக்கு புரிந்துகொண்டு நெருங்கி பழக்குகிறார் இவரது வீட்டில் இவருடைய திருமணத்துக்காக பெண் பார்த்து நிச்சயிக்கப்பட்ட வின்ஷூ ரெச்சல். இருந்தாலும் கடைசி நேரத்தில் திருமணம் நின்றுபோகிறது.
இதனால் மனம் உடைந்துபோகும் அசோக் கடைசியில் தனிமைக்கு செல்கிறார். குடும்பத்தினரும் வருத்தமாக இருக்கின்றனர். இப்போதுதான் கதையில் ஒரு அருமையான திருப்பம். அசோக் செல்வனுக்கு அவருடைய ஃபேமிலி டாக்டர் கிருஷ்ணவேணி தனித்தனியான இரண்டு அருமையான காதல் கதைகள் எழுதப்பட்ட ஒரு டைரியை கொடுக்கிறார். ஆனால் அந்த இரண்டு கதைகளும் பாதியில் நின்றுபோகிறது. கிருஷ்ணாவேணி இப்போது இந்த கதையின் சம்பவங்கள் அனைத்துமே நிஜமாக நடந்தது என்றும் மேலும் காதலித்த இவர்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளவும் மேலும் கதையின் முடிவுகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் தன்னுடைய கட்டுப்பாடுகளை எல்லாம் விட்டுவிட்டு அசோக் செல்வன் ஒரு தொலைதூர பயணத்தை மேற்கொண்டால் மட்டும்தான் தெரிந்துகொள்ள முடியும் என்றும் சொல்கிறார். இப்போது அசோக் செல்வன் இந்த காதல் கதைகளில் இருக்கும் கதாபாத்திரங்களை நேரில் சந்திக்க முடிவு எடுத்து செல்கிறார் , அடுத்து என்ன நடக்கும் என்பதை ஸ்வரஸ்யமாக சொல்வதுதான் இந்த படத்தின் கதை.
ஒரு கதையின் முடிவை தெரிந்துகொள்ள மிகுந்த ஈடுபாடு கொண்டு இருக்கும் அர்ஜூன் மற்றும் அவரோடு இணைந்து பயணம் செல்லும் சுபத்ரா இவர்கள் இருவரும் தனித்தனியாக இரண்டு துருவங்களை போல மாறுபட்ட மனங்களுடன் இருந்தாலும் இணைந்து பயணம் செல்வது ஸ்வரஸ்யமாக இருக்கிறது. இந்த கதைகளுக்குள் பின்னப்பட்ட அடுத்தடுத்த இரண்டு காதல் கதைகளின் எதிர்பார்ப்புகள் அதிகம் என்றாலும் கிளைமாக்ஸ் நிறைவானதாகவே இருக்கிறது. கதைகளின் கேரக்டராக வீரா மற்றும் பிரபாகரன் கதாப்பத்திரத்தில் மிகவும் ரசிக்கும்படியான கத்தாப்பாத்திரமான அசோக் செல்வன் பிரகசிக்கிறார். ரீத்து வர்மா ஒரு துணிவான நிறைய மொழிகள் தெரிந்த ஸ்வாரஸ்யமான பெண்மணியின் கதாபத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார். மொத்தத்தில் ஒரு அட்வென்சர் ஆன ரொமான்டிக் ஸஸ்பென்ஸ் இந்த படம். கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள். இயக்குனர் ரா/ கார்த்திக் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
No comments:
Post a Comment