பொதுவாக சூப்பர் ஹீரோ மெடீரியல் எல்லாமே சூப்பர் பவர் இருக்கும் ஹீரோக்கள் மற்றும் வில்லங்களுக்குள் நடக்கும் சண்டைகளைதான் பெரிதுபடுத்தி காட்டும். ஆனால் இந்த ஒரு வெப் சீரிஸ் மட்டும் சூப்பர் ஹீரோக்கள் கெட்டவர்களாக'இருந்தால் அடுத்து\என்ன நடக்கும் என்பதை மிக மிக ஸ்வரஸ்யமாக சொல்லியிருக்கிறது. இந்த சீரிஸ் கண்டிப்பாக தனியாக பார்க்கவும். மிக மிக மிக அதிகமான வயலன்ஸ் மட்டும் கிளாமர் காட்சிகள் இருப்பதால் பார்க்கவே பயங்கரமான காட்சிகள் இந்த வெப் தொடரில் இருக்கிறது. இந்த வெப் தொடரின் கதை. சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் காம்பவுண்ட் வி என்ற கெமிக்கல்லால் சூப்பர் பவர் உள்ளவர்களாக குழந்தை பருவத்தில் மாற்றப்பட்டு பின்னாட்களில் வாட் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தால் பணம் ஈட்டும் சுயநலமான கூலிப்படையாக மாற்றப்படுகிறார்கள். மக்கள் எல்லோரும் சூப்பர் ஹீரோக்கள் நல்லவர்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் சூப்பர் ஹீரோக்கள் அதிக சக்திகளால் மக்களுக்கு தெரியாமல் கணக்கே இல்லாமல் குற்றங்களை பின்னணியில் செய்துகொண்டு இருக்கிறார்கள். இப்படி எல்லாம் இவர்களின் கொடுமைகள் ஒருபக்கம் நடந்துகொண்டு இருக்க ஒரு சாதாரண ELECTRONIC ஸ்டோரில் வேலை பார்க்கும் HUGIE CAMPBELL தான் காதலிக்கும் பெண் கண் முன்னாலேயே ஒரு சூப்பர் ஹீரோவால் சாகடிக்கப்படுவதை பார்க்கிறான். ஆனால் நியாயம் கேட்க போனால் ஒரு பெரிய நிறுவனமே அவர்களுக்கு சப்போர்ட் பண்ணி ஹியூஜி காம்ப்பெலை மிரட்டுகிறது. இப்போது கொலை செய்த அந்த சூப்பர் ஹீரோவுக்கு தண்டனை கொடுக்க முடியாததால் மனது உடைந்து இருக்கும் இந்த பையன் BILLY BUTCHER என்ற சூப்பர்ஹீரோக்களை பழிவாங்க துடிக்கும் கோபமான முன்னால் CIA பாதுகாப்பு ஏஜெண்டு அமைக்கும் தி பாய்ஸ் என்ற குழுவில் சேர்க்கிறார். இந்த WEB SERIES மொத்தமும் RATED சண்டைகளும் கொடூர கொலைகளும்தான்.
கிட்டத்தட்ட சூப்பர் மேன் அளவுக்கு சக்தியுள்ள கொடூர மனிதன் நம்ம ஹோம்லாண்டர் மற்றும் அவருடைய கொடூரமான சூப்பர்ஹீரோ அமைப்பான தி செவன் - [THE SEVEN] அமைப்பால் THE BOYS கண்டுபிடிக்கப்பட்டால் உயிரே போய்விடும் என்று தெரிந்தும் மிகவும் துணிவாக களத்தில் இறங்கியிருக்கும் தி பாய்ஸ் அமைப்புக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன ? சூப்பர் ஹீரோக்கள் செய்த பாவங்களுக்கு தண்டனை கொடுக்க முடிந்ததா ? தான் ஒருவரை தவிர மற்ற அனைவரும் கெட்டவர்கள் என்று தெரிந்தும் ரிஸ்க் எடுத்து உதவும் HUGIE யின் காதலியும் தி செவன் அமைப்பில் இருந்துகொண்டு உயிரை பணயம் வைத்து தி பாய்ஸ்ஸை காப்பாற்ற போராடும் ஒரு நல்ல மனதுள்ள சூப்பர் ஹீரோ பெண்மணியான ANNIE யின் சவால்கள் என்னென்ன ? என்று ஒரு COMPLETE ACTION ENTERTAINMENT ஆக மூன்று சீசன்களில் மிரட்டியிருக்கிறது தி பாய்ஸ். 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தொடரை பார்க்கவும். இளம் வயதினருக்கு பொருத்தமானதாக இருக்காது. இந்த தொடர் மனித தன்மையின் அடிப்படையையே அசைத்து பார்க்கிறது. கொடூரமான விஷயங்களை நம்மால் தடுக்க முடியாத மனிதர்கள் செய்து நமக்கு நியாயமே கிடைக்காமல் போனால் என்ன நடக்கும் என்று இந்த தொடரின் விரிவான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மோசமான அரசியல் , கார்ப்பரேட் ஆளுமை , மனித உரிமை மீறல் , வன்முறையால் கட்டுப்படுத்துதல் , பயமுறுத்தி வேலையை முடித்தல், செய்யாத தவறுக்கு தண்டனை கொடுப்பது , இனவெறி என்று பலதரப்பட்ட சமூக பிரச்சனைகளை இந்த வெப் சீரிஸ் முன்வைக்கிறது. சோதனை அடிப்படையிலான வேப் சீரிஸ் என்றாலும் இவ்வளவு நேரடியாக காட்சிகளை உருவாக்கியருப்பது ஒரு கடினமான முயற்சியாக கருதலாம்.
No comments:
Post a Comment