"இந்த படத்தின் முதல் பாகம் கிங்ஸ் மேன் தி சீக்ரட் சர்வீஸ் படம் ஆண்டு வெளிவந்தது . தனியாக வளர்க்கப்படும் இளைஞர் எக்ஸி ஆன்வின் உலகத்தரமான ஒரு தனியார் உளவுத்துறை ஏஜென்ஸியின் முன்னால் மெம்பர் ஒருவரின் மகன் என்று தெரிந்துகொள்கிறார். பார்ப்பதற்க்கு உயர்தர கோட் தயாரிப்பு நிறுவனம் போல இருந்தாலும் நல்ல திறமையான ஆட்களின் உதவியால் கெட்ட சக்திகளிடம் இருந்து உலகத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட ஒரு அமைப்புதான் இந்த கிங்ஸ் மேன் அமைப்பு. இப்போது ஆன்வின் ஒரு கடினமானா ட்ரைனிங் பாஸ் பண்ணனும், அப்படி பாஸ் பண்ணினால்தான் இந்த ஏஜென்ஸியின் நிரந்தர மெம்பர்ராக சேர முடியும். ஆனால் ட்ரைனிங் நடந்துகொண்டு இருக்கும் நாட்களின் முடிவில் ஒரு தனியார் டெக்னாலஜி கம்பெனி உரிமையாளர் அவருடைய மொபைல் ஃபோன்கள் மூலம் கட்டுப்பாடற்ற வன்முறையை கேட்பவர்களுக்கு தூண்டும் சோனிக் ஒலிகளை பயன்படுத்தி உலகத்தின் மக்கள் தொகையை காலி பண்ண திட்டமிடுகிறார். இப்போது எப்படி இந்த பிரச்சனையை எக்ஸி ஆன்வின் சமாளித்தார் என்பதுதான் படத்தின் கதை.
"
படத்துடைய டார்க் தீம் மற்றும் அன்யூசுவல் ஹ்யூமர் ஸென்ஸ் இந்த படத்தை ஜேம்ஸ் பாண்ட் மற்றும் மிஷன் இம்போஸ்சிபல் படங்களில் இருந்து தனியாக பிரித்து காட்டுகிறது, டாரன் எட்கர்ட்டன் மிக சிறப்பான நடிப்பாற்றலை கொடுத்துள்ளார் , மிஷன் இம்போஸ்சிபல் படங்களை பற்றி பேசும்போது இன்னும் அந்த படங்கள் பற்றி வலைப்பூவில் பதிவிடவில்லையே என்று ஆடியன்ஸ் கேட்பது எனக்கு புரிகிறது , நான் என்னால் முடிந்த முயற்சிகளை பண்ணிக்கொண்டுதான் இருக்கிறேன். சொல்லப்போனால் பேக் டூ தி ஃப்யூச்சர் , ஹாரி பாட்டர் என்று நிறைய ஃபிரான்சைஸ் இந்த வலைப்பூவில் பதிவு பண்ணாமல்தான் இருக்கிறது. போதுமான கதாப்பத்திரங்களின் மேம்படுத்துதல் என்று சொல்லப்படும் கேரக்டர் டெவலப்மெண்ட் இல்லாததால் படத்தின் ஃபிரான்சைஸ் ஒரு அளவுக்கு ஹிட் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. இப்போதுதான் நம்முடைய மெயின் பாயிண்ட்க்கு வருவோம். கேரக்டர் டேவலப்மெண்ட் - அது எங்கே போனது. ?
படத்துடைய அடுத்த பாகம் கிங்ஸ் மேன் : கோல்டன் சர்கிள் - மனிதர்களையே கொன்று சாப்பிடும் அளவுக்கு மனசாட்சி இல்லாத வில்லன்கள். இவர்களின் அட்டாக்கால் கிங்ஸ் மேன் அமைப்பில் நிறைய பேர் உயிரை தியாகம் ப வேண்டியதால் அமெரிக்காவின் தனியார் அமைப்பான ஸ்டேட்ஸ்மேன்னுடன் கைகோர்த்து செயல்படவேண்டிய கட்டாயம். இந்த படத்தில் வில்லன்களின் ப் பொருட்களில் விஷம் கலந்து பிளாக் மெயில் செய்யும் காட்சிகள் புதிதாக இருந்தாலும் முக்கியமான கேரக்டர் மெர்லின் இந்த படத்தில் இறந்து போவது வருத்தமானது. கிங்ஸ் மேன் படங்களுக்கு உரிய நக்கலான நகைச்சுவை வசனங்கள் முதல் கிங்ஸ் மேன் அமைப்பு செயல்படும் விதம் வரை கேரக்டர் டெவலப்மெண்ட் கொடுத்தாலும் போதுமான அளவுக்கு இல்லை என்றே நான் சொல்லுவேன். வெளியான வருடம் படம் ஒரு அளவுக்கு பாக்ஸ் ஆஃபிஸ் சக்ஸஸ்தான்.
இப்போது கிங்ஸ் மேன் அமைப்பு எப்படி உருவானது என்று காட்ட ஒரு படம் வந்தது "தி கிங்'ஸ் மேன்" - இந்த படத்தை எங்கே ஆரம்பிப்பது எங்கே முடிப்பது என்றே தெரியவில்லை. படத்தில் ஒரு துடிப்பான இளம் ஹீரோ வருகிறார். இன்டர்வேல் வரைக்கும் ஒரு அளவுக்கு நல்ல நடிப்பை கொடுக்கிறார். ஆனால் இன்டரவலில் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத காரணத்துக்காக கொல்லப்படுகிறார். இவருடைய அப்பா அரும்பாடுபட்டு எடுத்த மெஷின்னை முடிக்கிறார். இங்க்லிஷ் வரலாறு குறித்த சம்மந்தம் இல்லாத வதந்திக்களுடன் தொடர்பு படுத்தி எடுக்கிறேன் என்று கதையின் களத்தை போட்டு படுத்தி இருக்கிறார்கள். கொஞ்சம் கூட புரியாத ஒரு குழப்ப மேகம்தான் இந்த படம். அடுத்த படத்துக்கு ஹிட்லரை களம் இறக்க எண்டு கிரெடிட்ஸ் காட்சிகள். அடுத்த படம் எடுக்க முடியும் என்று நம்பிக்கை வேறு இருக்கிறதா ? இனிமேல் வரப்போகும் படம் கிங்ஸ் மேன் தி புளூ பிளட் எப்படி இருக்கிறது என்று வந்தால்தான் தெரியும்.
No comments:
Post a Comment