Tuesday, August 8, 2023

CINEMATIC WORLD - 088 - MORTAL KOMBAT - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

மார்டெல் கொம்பேட் என்ற இந்த வீடியோ கேம் உடைய லேகசி மிக அதிகமானது, ஒரு பக்காவான ஆக்ஷன் பிளேயர் வேர்ஸஸ் பிளேயர் வீடியோ கேம் என்பதால் இந்த வீடியோ கேம் ஃபர்ஸ்ட் ஜெனரேஷன் ஆஃப் கேமிங் ஆண்டுகளில் இருந்தே ஃபேன்ஸ் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை கொண்டுள்ளது. டெஸ்ட் யுவர் மைட் - என்ற மார்ட்டல் கொம்பேட் வீடியோ கேம் தீம் சாங்க் உங்களுடைய ரெட்ரோ காலத்தில் கேட்டு கேட்டு வளர்ந்த பாடல் என்று கண்டிப்பாக சொல்லலாம். 

வீடியோ கேம் பேஸ் பண்ணிய படங்கள் நான் நிறையவே பார்த்து இருக்கிறேன். இந்த படம் ஒரு அருமையான ஆக்ஷன் திரைப்படம். கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள். பாக்ஸ் ஆஃபிஸ் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என்றாலும் ஆக்ஷன் , அட்வென்சர் , ஃபேன் சர்வீஸ் என்று ஒரு வீடியோ கேம் அடாப்ஷன்க்கான எல்லா பாக்ஸ்ஸையும் இந்த படம் டிக் பண்ணியுள்ளது. 

இந்த படமே சப்-ஸீரோ அவனுடய சக்திகளால் ஸ்கார்ப்பியனின் நெருக்கமான எல்லோரையும் கொலை பண்ணுவதில்  தொடங்குகிறது.  மார்டெல் கொம்பேட் என்ற மிகப்பெரிய யுனிவெர்ஸ் அளவில் உலகங்களின் உரிமைகளுக்காக போராடும் மாயாஜால நியதிகளை உடைய பாரம்பரியமான மோதலில் உயிரை பணயம் வைத்து கட்டாயமாக கலந்துகொள்ளப்போகும்  நடப்பு காலகட்டத்தை சேர்ந்த மனித இனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பூமியின் பாதுகாவலர் ரேய்டனால் பாதுகாக்கப்படுகிறார்கள். ஆனால்  மார்டெல் கொம்பேட் தொடங்கும் முன்னதாகவே பூமிக்காக போராட வேண்டிய அனைவரையும் கொலை செய்ய பூமிக்கு ஆட்களை அனுப்புகிறான் வில்லன் சாங் டெஷான். 

இப்போது பூமிக்காக போராடும் ரேய்டன் தலைமையிலான படையில் இருக்கும்  சோனியா , கோல் யான்க் , லியு கேன்ங், ஜாக்ஸ் இந்த நான்கு பெரும் அவுட் வேர்ல்ட் வில்லன் சாங் டெஷான் இவர்களை கொல்ல அனுப்பிய கொலைகார படையின் மெம்பர்கள்  சப்-ஸீரோ  , கேனோ , மைலினா , ரைக்கோ ஆகியோரை  கொல்ல வேண்டும். 

அடுத்தது என்ன ? மாஸ் ஆன ஆக்ஷன் சண்டை காட்சிகள்தான், படத்தில் வயலன்ஸ்  ஒரு ரேட்டட் வெப் சீரிஸ் அளவுக்குதான் உள்ளது. படத்தின் கதையை விட சண்டை காட்சிகள் முக்கியம் என்றால் இந்த வீடியோ கேம் ஃபேன்களின் மனது நிறையும் அளவுக்கு பயங்கர ஃபேட்டலிட்டி சண்டை காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. ஹிட் மேன் வீடியோ கேம் பேஸ் பண்ணி எடுத்த படங்களை போலவே வீடியோ கேம்ன் கதைக்களம் மாறாமல் இந்த படம் இருப்பது பாராட்டுக்கு உரியது. அடுத்த பாகத்துக்காக கண்டிப்பாக காத்து இருக்கலாம். இந்த வீடியோ கேம் பற்றி தெரியாதவர்கள் இந்த படங்களை பார்த்தால் நிறைய காட்சிகள் உங்களுக்கு ஃபைனல் டெஸ்டினேஷன் படங்களை நினைவுபடுத்தலாம். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...