இந்த உலகத்துக்கு எதனால் சினிமா முக்கியமான விஷயம் ! சினிமாவை பற்றியோ சினிமா துறையில் வேலை பார்ப்பவர்களை பற்றியோ எடைபோட்டு கருத்துக்களை சொல்லும் பழைய காலத்தின் செயல்முறைகளை எல்லாம் விட்டுவிடுங்கள். மொத்த சினிமாவின் நோக்கம் உங்களுக்கு தெரியாத விஷயத்தை உங்களுக்கு தெரியப்படுத்துவதும் உங்களுடைய வாழ்க்கையின் ஒரு குறிப்பட்ட நேரத்தை ஒரு கதைக்காக கொடுக்க வைப்பதுமே ஆகும். இப்பொது சினிமாவை விட்டுவிடுங்கள். வெப் தொடர்கள் இன்னொரு லெவல்லில் சென்றுக்கொண்டு இருக்கிறது. இந்த சினிமா உலகத்தை கடினமாக விமர்சனம் பண்ணுவது சுலபம். ஆனால் இந்த உலகத்தில் உண்மையான வாழ்வது கடினம்.
இங்கே அனைவருக்கும் நல்ல கதைகளை கேட்க பிடிக்கும். கதைகள் நம்முடைய வாழ்க்கையில் நிஜத்தில் நடக்காத நிறைய சம்பவங்களை நம்முடைய மனதுக்குள் கொண்டுவந்து அந்த சம்பவங்களின் காலத்தோடு நம்மை பயணம் பண்ண வைக்கும், புத்தகங்களில் மற்றும் ஆடியோ ஒளிபரப்பில் கதைகளை கேட்ட காலங்கள் போனதால் அடுத்த பரிமாணம்தான் சினிமா ! நல்ல கதைகளை கலைஞர்கள் நாடகமாக முன்வைக்கும்போது இயல், இசை , நாடகம் என்ற மூன்று விஷயங்களையும் ஒன்றாக சேர்த்து மிகவும் தெளிவாக சொல்லும் ஒரு விஷயம் சினிமா ! காலத்தின் அடிப்படையில் வீடியோகேம்க்கு குறைவான புத்தகங்களுக்கு அதிகமான ஒரு அனுபவ உலகத்தை உங்களுக்காக டிசைன் பண்ணும் ஒரு விஷயம் சினிமா மற்றும் தொடர்கள். நடிப்பு என்பது சாதாரணமானது இல்லை, நிறையவே கஷ்டப்பட வேண்டியது இருக்கும். லொகேஷன்கள் , பொருட்கள் , ஆடைகள் , வசனம் , இசை. கலை அமைப்பு , நடனம் , வண்ணங்கள் , மென்கலை வேலைப்பாடுகள் என்று ஒரு திரைப்படத்துக்கு கொடுக்கக்கூடிய உழைப்பும் காலமும் மிக மிக அதிகமானது.
சினிமாட்டிக் வேர்ல்ட் பகுதி இனிமேல் சினிமா டாக்ஸ் என்ற பகுதியாக மாற்றப்படுகிறது. இனிமேல் இந்த பகுதியில் நீங்கள் பார்த்த படங்கள் பற்றிய விமர்சனங்கள் , கருத்துக்கள் , விவாதங்கள் என்று நிறைய விஷயங்களை பார்க்கலாம். சினிமா டாக்ஸ் பகுதி உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரைக்கும் நிறைய விஷயங்களை அலசி ஆராய்ச்சி பண்ண போகிறது. இந்த உலகத்தில் மொத்தம் 50 லட்சம் படங்கள் நடப்பு காலம் வரைக்கும் வெளிவந்துள்ளது ! அனைத்து படங்களையும் நம்மால் பேசிக்கொண்டு இருக்க முடியாது இருந்தாலும் நல்ல படங்களை இந்த பகுதியில் விமர்சனங்களை கொடுத்து சிறப்பாக செய்துவிடலாம். கடைசியாக ஒரு விஷயம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு மனிதன் தன்னுடைய சக்தியை மிகவும் சரியாக பயன்படுத்தினால்தான் அவனால் அவனுடைய சுற்றுச்சூழலுக்கு முன்னேற்றம் கொடுக்க முடியும். சினிமா இந்த உலகத்தை பற்றி நிறைய தகவல்களை கொடுத்து நீங்கள் நல்ல முடிவுகளை எடுக்க உங்களுக்கு நிறைய திறன்களை கொடுக்கிறது. CINEMA பார்க்காமல் வளர்ந்த குழந்தைகள் குழந்தைத்தனமாக முடிவுகளை எடுக்கிறார்கள். இவர்கள் வெளியே சென்று மனிதர்களுடன் சேர்ந்து பேசாமல் பழகாமல் இருப்பதால் இவர்களுக்கு விவரம் இருப்பதே இல்லை என்பதை என்னுடைய கண்களால் பார்த்து இருக்கிறேன். இதனால்தான் சினிமா மற்றும் தொடர்கள் நம்முடைய வளர்ச்சிக்கு ஒரு நல்ல கருவி.
No comments:
Post a Comment