கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3 - இந்த படம் 2023 ல் வெளிவந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக ஒரு நல்ல வெளியீடுதான். இந்த படத்துடைய கதை. கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி அமைப்பின் மிகவும் திறன் மிகுந்த நண்பராகவும் மிக மிக அதிகமான வேற்றுகிரக டெக்னாலஜிக்களை தெரிந்து வைத்தவருமாக இருப்பவர் நம்முடைய ராக்கெட் ரக்கூன். ஆனால் இந்த படம் அவருடைய வாழ்க்கையை பாதித்த ஒரு வில்லன் பல வருடங்களுக்கு பின்னால் அவரை கொல்ல முயற்சி பண்ணுவாதாக தொடங்குகிறது.
பிரபஞ்சத்தில் உயிரோடு இருக்கும் விலங்குகளை ஆராய்ச்சி செய்து பரிமாண வளர்ச்சியை உருவாக்க நினைக்கும் ஒரு சாடிஸ்ட் வில்லன்தான் இந்த ஹை - ஏவால்யூஷனரி, ஆனால் இவருடைய நிறைய நாள் நோக்கம் ராக்கெட் ரக்கூனை கொன்று பின்னால் அவருடைய உடலை வைத்து ஆராய்ச்சி செய்வதுதான்.
கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியில் இருப்பவர்கள் அவெஞ்சர்ஸ் அமைப்பை போலவோ இல்லையென்றால் கேப்டன் மார்வேல் போலவோ பயங்கரமாக சூப்பர் பவர்ஸ்களால் தாக்கும் சக்திகள் கொண்ட போர்த்திறன் மிக்க பயங்கர சூப்பர் ஹீரோக்களாக சென்ற படங்களில் இருப்பது இல்லை. ஒருவருக்கு ஒருவர் உதவிகளை செய்யும்பொது சந்தித்துக்கொண்டு பின்னாட்களில் ஒரு குடும்பம் போல விண்வெளியில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இந்த வகையில் அளவுக்கு அதிகமான புத்திசாலியான இந்த ஹை - ஏவால்யூஷனரியின் படைகளை நேருக்கு நேராக எதிர்க்க வேண்டிய நிலைப்பாடு இவர்களுக்கு வருகிறது.
இந்த படம் விஷுவல் எஃபக்ட்ஸ் அதிகமாக கொடுத்து இருந்தாலும் சென்ற படங்களை விடவும் பெரிய அப்கிரேடுதான். மறுமுறை ஸ்டார் லோர்ட் மற்றும் கமொரா சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் பிரமாதம். நோவேர் குடியிருப்புகளை நேரடியாக ஹை - ஏவால்யூஷனரியின் கியூப் ஸ்பேஸ் ஷிப் தாக்கும் அதே நேரத்தில் நமது ஹீரோக்கள் ரிஸ்க் எடுத்து அந்த ஸ்பேஸ் ஷிப்க்குள் அடைபட்டு இருக்கும் எல்லோரையும் கவனமாக காப்பாற்றி வெளியே கொடுவரும் காட்சிகள் பிரமாதம். ராக்கெட் இல்லையென்றால் உருவாகும் கடினமான சம்பவங்களில் கார்டியன்ஸ் மற்ற படங்கள் போல இல்லாமல் இணைந்து செயல்படுவது உண்மையிலேயே நல்ல காரேக்டர் டெவலப்மெண்ட். இயக்குனர் ஜேம்ஸ் கன் உண்மையில் நல்ல படத்தை கொடுத்துள்ளார். ரைஸ் ஆஃப் தி பிளானெட் ஆஃப் ஏப்ஸ் படங்களுக்கு பின்னால் இந்த மனிதர்கள் மற்ற உயரினங்களின் மேல் அளவுக்கு அதிகமான அட்வாண்டேஜ் எடுத்துக்கொள்வது எவ்வளவு மோசமான விஷயம் என்பதை யோசிக்க வைக்கிறது ராக்கெட் கதாப்பத்திரம். கொஞ்சம் கொஞ்சம் நகைச்சுவை இருந்தாலும் இந்த ஸ்டார் ட்ரேக் மற்றும் அவதார் போன்ற மிகப்பெரிய ஸ்பேஸ் படங்களின் அட்வென்சர்க்கு குறைவே இல்லாமல் என்டர்டைன்மெண்ட் கொடுப்பது இந்த கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3. கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள்.
No comments:
Post a Comment