ஒரு சராசரி அமெரிக்க இஸ்லாமிய குடும்பத்தில் அன்புடன் வளர்க்கப்படும் பெண் கமலா கான் , எப்போதுமே சூப்பர் ஹீரோக்களை மிகவும் பிடிக்கும் என்றதாலும் குறிப்பாக கேப்டன் மார்வேல்லை அதிகமாக நேசிப்பதாலும் எப்போதுமே அவெஞ்சர்ஸ் குறித்த அனைத்து நிகழ்ச்சிகளையும் தவறாமல் கலந்துகொள்கிறாள். ஒரு கட்டத்தில் ஒரு மாய அட்டிகையால் வெளிச்ச கட்டிட அமைப்புகளை உருவாக்கும் சக்திகள் கிடைக்கவே அந்த சக்திகளை கொண்டு ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றுகிறாள். இப்போது ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் சம்பவங்களை தொடர்ந்து புதிதாக உருவாகும் இளம் சூப்பர் ஹீரோக்களை குற்றம் சுமத்தி கேட்டவர்களாக கருதி அடைத்து வெக்க முயற்சிக்கும் டேமேஜ் கண்ட்ரோல் என்ற அமைப்பின் விசுவாசிகளிடம் இருந்து தப்பிக்கவே நேரம் சரியாக போகும்போது நிறைய சக்திகளை தற்போது பயன்படுத்தும் இளம் பெண் இன்னொரு டைமன்ஷன் பரிமாணத்தில் இருந்து பூமியில் மாட்டிக்கொண்ட பரிமாணத்தை கடந்த மனித-ஜின் இனத்தை சேர்ந்த கலடெஸ்டைன்ஸ் குடும்பத்தால் பரிமாண கதவுகளை திறக்கவேண்டுமென கட்டாயப்படுத்தப்படுகிறாள். ஆனால் பரிமாண கதவுகளை திறந்தால் வெளிப்படும் சக்தி இந்த உலகத்தை அழித்துவிடும் என்பதால் சொந்த நாட்டுக்கு விமானப்பயணம் மேற்கொண்டு அவளுடைய பாட்டியிடம் உண்மைகளை தெரிந்துகொள்ளும் கமலா கான் அடுத்து என்ன செய்கிறாள் ? எப்படி கலடெஸ்டைன்ஸ் இனத்தின் பிரச்சனைகளில் இருந்தும் டேமேஜ் கண்ட்ரோல் அமைப்பின் தொல்லைகளில் இருந்தும் குடும்பத்தையும் பள்ளி நண்பர்களையும் காப்பாற்றுகிறாள் என்பதே இந்த படத்தின் கதை. சராசரி குடும்பமாக வாழும் பெண்மணிக்கு சூப்பர் பவர்ஸ் கிடைத்தால் வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்கள் உருவாகும் என்பதை மிகவும் அழகாக சொல்லும் கதைதான் மிஸ் மார்வேல் , ஒரு சராசரி ஃபேன் கேர்ள் என்று அவெஞ்சர்ஸ் அமைப்பை ஆதரிக்கும் பள்ளி மாணவியாக இருக்கும் கமலா கான் வாழ்க்கை மிகவும் அழகாக சொல்லப்பட்டு உள்ளது. வெளிச்ச கட்டிட அமைப்புகளால் கட்டிடத்தில் இருந்து கீழே விழும் பையனை காப்பாற்றும் காட்சியாக இருந்தாலும் கிளைமாக்ஸ் வரும்போது பள்ளிக்கூடத்தின் அனைத்து நண்பர்களையும் காப்பாற்றும் காட்சியாக இருந்தாலும் அளவான விஷுவல் எஃபக்ட்ஸ் கதைக்கு தேவையான அளவுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்ட ஜெர்ஸி சிட்டி காட்சிகள் முதல் கராச்சி தலைநகரில் நடக்கும் காட்சிகள் வரை லொகேஷன் , ஸ்டண்ட் மற்றும் காட்சியமைப்பு வேற லெவல் ஸ்டாண்டர்ட் என்றே சொல்லலாம். ஒரு பிளாக்பஸ்டர் பெரிய பட்ஜெட் சூப்பர் ஹீரோ படத்தில் கூட இவ்வளவு அருமையான சேசிங் காட்சிகளை கொடுப்பது கஷ்டம். ஸ்டண்ட் குழுவுக்கு பாராட்டுக்கள். மிஸ் மார்வேல்லின் நண்பர்கள் கதாப்பாத்திரங்களான கம்ரான் , ப்ரூனோ மற்றும் கரீம் என்று மூன்று பேருமே மிஸ் மார்வேல் கமலா கான் மேல் அக்கறை உள்ள சக நண்பர்களாக உதவுகின்றனர். அப்பா , அம்மா . அண்ணன் என்று குடும்பத்தில் இருப்பவர்களும் சப்போர்ட் செய்வதாக இந்த கதையின் அமைப்பு இருப்பது இன்னும் சிறப்பு. பொதுவாக சூப்பர் ஹீரோ கதைகளின் ஹீரோ வேர்சஸ் வில்லன் சண்டை காட்சிகளை பெரிதுபடுத்தி காட்டப்படும் கதைகள் என்று இல்லாமல் ஒரு குடும்பம் நண்பர்கள் என்று ஒரு நல்ல சமூகத்தின் அன்பையும் இணைந்து செயல்படுவதையும் சொல்லியிருக்கும் இந்த தொடர் கண்டிப்பாக கவனத்தை ஈர்க்கிறது. பார்ட்டிஷன் ஆஃப் இந்தியா காட்சிகள் மிக அருமை. மொத்தத்தில் மிக மிக ஸ்பெஷல் ஆன ஒரு மார்வேல் ஸ்டுடியோ தொடர் அதனால் கண்டிப்பாக பார்க்கவும். ஒரு பேர்ஃபேக்ட் LIKABLE SUPERHEROINE தான் நம்ம அக்கா மிஸ் மார்வேல் !
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...
No comments:
Post a Comment