Saturday, August 19, 2023

CINEMATIC WORLD - IRON MAN 3 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 



கிட்டத்தட்ட மார்வேல் படங்கள் எல்லாவற்றையும் பற்றி இந்த வலைப்பூவில் பேசிவிட்டோம் என்று நினைக்கும்போது ஒரு படம் மிஸ்ஸிங் . அதுதான் IRON MAN 3 . இந்த படம் 2013 இல் வெளிவந்த THE AVENGERS திரைப்படத்தின் சம்பவங்களுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. தொழில் அதிபரும் தொழில் நுட்ப அறிவியலாளரும் ஆன அயர்ன் மேன் கடந்த அவெஞ்செர்ஸ் படத்தின் சம்பவங்களை கடந்து பாதுகாப்பற்ற ஒரு நிலையை உணர்கிறார் இதனால் நிறைய கவசங்களை உருவாக்குகிறார். மேலும் போஸ்ட் டிரமாடிக் ஸ்ட்ரெஸ் டிசோர்டர் என்ற மன நிலையில் கடந்த கால சம்பவங்களை நினைக்கும்போது பதட்டம் அடையும் ஒரு நிலையிலும் இருக்கிறார். இந்த நிலையில் புதிதாக உதயமாகும் MANDRIN என்ற வில்லன் அவருடைய டென் ரிங்ஸ் என்ற அமைப்போடு அயர்ன் மேன் இருக்கும் இடத்தை தாக்குகிறார். இதனால் மறைந்து இருக்கும் அயர்ன் மேன் MANDRIN இன் பின்னணியை கண்டறிந்து அவரை தடுக்க செய்யும் முயற்சிகளே இந்த IRON MAN 3 படத்தின் கதைக்களம்.


 ராபர்ட் டோனி ஜூனியர், பென் கிங்ஸ்லி, ரெபேக்கா ஹால், உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. அவெஞ்செர்ஸ் படத்தின் கதையை தொடர்ந்து அதே போன்று பிரம்மாண்டமான புதிய புதிய தொழில் நுட்பங்களை ஸ்டார்க் கண்டறியும் காட்சிகளும் பின்னாளில் அந்த தொழில் நுட்பங்களை செயல்பாடுக்கு கொண்டுவந்து MANDRIN போன்ற ஒரு வில்லனை தனி மனிதனாக எதிர்க்கும் காட்சிகளும் உடைந்து போன விமானத்தில் இருந்து கடலுக்குள் விழப்போகும் மனிதர்களை அவருடைய கவசத்தின் கட்டுப்பாட்டில் காப்பாற்றும் காட்சிகள்  ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைத்த பொருட்களை கொண்டு நிறைய பெரை தாக்கும் காட்சிகள் மேலும் வேறு ஒரு நாட்டில் இதுவரை சந்திக்காத ஒரு சிறுவனின் உதவியுடன் எக்ஸ்ட்டிமிஸ் என்ற நெருப்பு சக்தி வில்லன்களை சமாளிக்கும் காட்சிகள் என்று இந்த படத்தின் புதிதான காட்சிகள் நிச்சயமாக நினைவில் நிற்கும் அளவுக்கு இருக்கிறது. பின்னணி இசை சிறப்பு . படத்தொகுப்பு அருமை. இன்னும் நிறைய விஷயங்களை இந்த படத்துக்கு பாரட்டுகளாக கொடுத்துக்கொண்டே போகலாம். இயக்குனர் ஷேன் பிளாக் டெக்னோ முதல் டெரரிஸ்ட் வரைக்கும் எல்லாவற்றையும் கதைக்குள் கொண்டுவந்துள்ளார். 

போஸ்ட் ட்ராமாட்டிக் ஸ்ட்ரெஸ் இருக்கும்போது ஒரு சில நிமிடங்கள் மனதுக்குள் பதட்டமும் படபடப்பும் இருக்கும் இருந்தாலும் அவருடைய மொத்த டெக் சப்போர்ட்டையும் இழந்த நிலைமையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மாஸ்.. போன படம் IRONMAN 2 ல்  பெரும்பாலும் நம்முடைய வார் மெஷின் கேரக்டரை கொண்டுவரவும் டோனி ஸ்டார்க் தன்னுடைய பெல்லாடியம் ரசாயன பாதிப்பை குறைப்பதுமாக போகவே இந்த படம் அப்படி எல்லாம் இல்லாமல் நிறைய டெக்னாலஜிக்களின் உதவியடன் எந்த அவெஞ்சர் உதவியும் இல்லாமல் தன்னுடைய பிரச்சனையை தானே சரி பண்ண வேண்டும் என்று டோனி களம் இறங்குவதாக காட்டுகிறது. மொத்தத்தில் ONE LINE REVIEW : IRON MAN 3 : "நினைத்ததை முடிப்பவன்"

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...