1. பிராசசர் :
"முதல் விஷயமே பிராசஸ்ஸர்தான் , ஒரு ஃபோன் வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்தால் கடைக்கு சென்று அல்லது ஃபோன் மாடல் நம்பர் பார்த்து அந்த பிராசஸ்ஸரில் எத்தனை கோர் உள்ளது என்றும் அத்தனை கோர்களில் எத்தனை கிளாக் ஸ்பீட்க்கு வேலை செய்யுமாறு செட் பண்ணப்பட்டு இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும். " இப்போது எதுக்காக பிராசஸஸர் ஸ்பீட் முக்கியம் என்றால் வெறும் பிராசஸ்ஸர் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு அது எவ்வளவு வேகமானது என்று முடிவு பண்ண கூடாது, ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் K8000 என்று பிராசஸ்ஸர் பெயர் வைத்து இருப்பார்கள் ஆனால் ஃபோன் மெதுவாக வேலை பார்க்கும் G1000 என்ற பிராசஸ்ஸர் பெயர் இருந்தாலும் மிக வேகமாக வேலை செய்யும். காரணம் என்னவென்றால் இந்த G1000 தான் மிக வேகமான பிராசஸ்ஸராக இருக்கும். இவைகளை எஸ். ஓ. ஸி என்று சொல்வார்கள். நல்ல எஸ். ஓ. ஸி இருக்கும் ஃபோன் பார்த்து வாங்கினால் 90 சதவீதம் பிரச்சனைகள் இருக்காது.
2. ஹார்ட்வேர்
"காமிரா முக்கியம் , வசதிகள் முக்கியம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் என்று போட்டுவிடுங்கள் , முதலில் போனின் பில்ட் எப்படி இருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும், இன்டர்நெட்டில் குறிப்பாக யூட்யூப் வலையில் இது போன்ற வீடியோக்கள் இருக்கும். அந்த ஃபோன் மாடலை உடைத்து பார்த்தால் உடையாமல் இருக்கிறதா ? என்றும் தண்ணீருக்குள் போட்டு பார்த்தால் நோகாமல் இருக்கிறதா என்றும் ஒரு பெரிய இடத்து பையன் கண்டிப்பாக டெஸ்ட்களை பண்ணி ஆன்லைன் அப்லோட் பண்ணியிருப்பான் , இந்த மாதிரி வீடியோக்களை பார்த்து நீங்கள் வாங்கப்போகும் ஃபோன் மாடல்களின் உறுதித்தன்மையை தெரிந்துகொள்ளலாம். ஃபோன் என்பது கண்டிப்பாக 2-3 வருடங்களாவது வேலை செய்யும் விஷயங்கள் என்பதால் கீழே போட்டாலும் உடையாமல் கொஞ்சம் நாட்கள் தாங்க வேண்டும் இல்லையா ?
3. விமர்சனம் :
"தமிழ் டெக் , C4E டெக் என்று நிறைய சேனல்கள் ஆன்லைன் யூனிட்களை கண்டிப்பாக விமர்சனம் பண்ணி கவர் பண்ணியிருப்பார்கள், ஆனால் ஆஃப்லைன் யூனிட்களை பற்றி அவ்வளவாக விமர்சனம் இருக்காது. சொல்லப்போனால் இணையத்தில் விமர்சனங்களே இருக்காது. நீங்கள் லோக்கலில் உங்கள் ஏரியாவில் ஒரு ஃபோன் ஷோரூம்மில் ஃபோன் வாங்கினால் அந்த ஃபோன் மாடல் போட்டு நீங்கள்தான் நெட்டில் போட்டு பார்க்க வேண்டும். 8 GB RAM , 120 MP CAMERA , 12000 விலை , 128 GB இன்டெர்னல் என்று வசதிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கலாம் , ஆனால் பிராசஸ்ஸர் ஸ்னாப் டிராகன் அல்லது மீடியா டெக் ஆக இருக்காது, என்னமோ 3 வருடத்துக்கு முன்னால் வெளிவந்த பிராசஸ்ஸர் போட்டு ஃபோன் இருக்கும். வெறும் 3 வருடங்கள் உபயோகிக்க நன்றாகவே இருக்கும் ஆனால் நெட்டில் வசதிகளை பார்த்து வாங்குவாதன் மூலம் இன்னும் சிறப்பான வசதிகளை கம்மி விலைக்கே வாங்கிவிடுங்கள், நெட்டில் விற்கும் ஃபோன்களுக்கு வருவோம், மிக அருமையான விமர்சனங்கள் இன்டெர்நெட்டில் கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால் இரண்டு தனித்தனி ஃபோன்களின் வேகத்தையும் செயல்பட்டையும் டெஸ்ட் பண்ணி பார்க்கும் செயல்பாடுகள் இந்த யூ ட்யூப் வீடியோக்களில் பார்க்கலாம்.
4. காமிரா
இங்கே ஆஃப்லைனில் கிடைக்கும் ஃபோன்களுக்கு காமிரா டெஸ்ட் பண்ணிய வீடியோ இருந்தால் அது உங்கள் அதிர்ஷ்டம்தான் ! ஆனால் ஆன்லைன் ஃபோன்களுக்கு கண்டிப்பாக ஒரு காமிரா டெஸ்ட் ஆவது இன்டர்நெட் வீடியோக்களில் இருக்கும். சும்மா 20000 உங்கள் கையில் இருக்கும் காரணத்தால் ஒரு மட்டமான ஃபோன் வாங்கிவிடாதீர்கள். இப்போது ஃபோன் காமிராக்கள் ரொம்பவுமே முக்கியமானது, ஒரு டிராவல் பண்ணினால் அதன் நினைவுகளை நல்ல போட்டோவாக எடுப்பது 2004 களில் வாழ்நாள் ஆசையாக எல்லோருக்கும் இருந்தது, அப்போது இவ்வளவு டெக்னோலஜி இல்லை. ஃபோன் காமிராவைவிட டி.எஸ்,எல்.ஆர் காமிராக்கள் எப்போதும் துல்லியமாக வண்ணமயமாக பிக்சர் குவாலிட்டி கொடுக்கும். ஐபோன் வரிசையில் லேட்டஸ்ட் மாடல் போனை வாங்கவேண்டும் என்று நீங்கள் பைக் வாங்க சேர்த்து வைத்த காசு எவ்வளவு ஆகுமோ அந்த விலையை போட்டு ஒரு ஐ ஃபோன் வாங்கினாலும் ஒரு டி.எஸ்,எல்.ஆர் காமிராவை உங்களால் மிஞ்சவே முடியாது. இந்த வகை காமிரா மற்றும் லென்ஸ் சமாச்சாரங்கள் எல்லாம் சேர்த்தாலே புரஃபஷனல் காமிராவின் விலை 1,80,000 ஆவது குறைந்த பட்சம் வரும், இதுவுமே மாடல் பார்த்து வாங்க வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக விமர்சனம் பார்க்காமல் வாங்கினால் போதுமான பெர்ஃபார்மன்ஸ் உங்களுக்கு கிடைக்காது.
No comments:
Post a Comment