பொதுவாகவே ஒரு 15 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த பாடல்கள் இப்போது இருக்கும் பாடல்களை விட கொஞ்சம் இயற்கையோடு சேர்ந்த காதல் பாடல்களாக இருக்கும் , அங்கே "டிக் டாக் எல்லாம் பானு மா " என்றோ "ஓ எம் ஜி தென்றலா " இது போன்று ஆங்கில கலப்பு இல்லாத தமிழ் மொழி இயற்கை வருணிப்புகளை பார்க்கலாம் ! இந்த வகையில் 2008 இல் வெளிவந்த ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் இடம்பிடித்த இந்த பாடல் வரிகளை பார்க்கும்போது பள்ளிக்கூட காலத்து காதலில் என்னவோ யோசித்து யோசித்து கவிதைகள் எழுதிய நாட்கள் உங்களுக்கு நினைவில் வரும் ! பாடலாசிரியர் கபிலன் அவர்களின் வரிகளில் கல்யாணி நாயர் அவர்களின் குரலில் இந்த பாடல் இயற்கையின் இனிமையில் காதலின் காலடித்தடங்கள் படும் உணர்வை கண்டிப்பாக உங்களுக்கு கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது !
மழை நின்ற பின்பும் தூரல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கு அதற்கு உன் பேர் வைக்கட்டுமா… ?
எனக்குள் இதயம் தனித்திருக்கே ! அதை உன்னுடன் சேர்க்கட்டுமா ?
நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை
பாதம் விரைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும் ?
வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழைதுளி பனிக்குள்ளே கலந்தபின்னே அதுமறுபடி இரண்டென பிரிந்திடுமா ?
கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா ? உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே !
உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை !
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்து விடு நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு.
இருக்கும் மரங்களையும் காடுகளையும் காலி பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் ! கடைசி காலத்தில் ஏ. ஸி. காற்றில் உட்கார்ந்து எழுதும் அளவுக்கு வசதி வாய்ப்பு கிடைத்தாலும் இது போன்று இயற்கையான ஒரு காதலை அந்த பாடல் வரிகள் சொல்லிவிடுமா என்ன ? தொடர்ந்து இணைந்திருங்கள் தமிழ் வெப்சைட் !
இணைப்பு :
Photo by Ram Palaparty on Unsplash
No comments:
Post a Comment