Saturday, August 12, 2023

WHY ART INTELLIGNCE IS BAD ? EXPLAINED IN TAMIL - எனக்கு வேற வழி தெரியல ஆத்தா !! - 😕



நம்முடைய வேலையை சுலபமாக மாற்றவும் குறைவான நேரத்தில் அதிகமான பணத்தை சம்பாதிக்கவும்தான் ஆர்டிபிஷியல் இன்டெல்லிஜென்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. யாராவது இந்த உலகத்தின் நன்மைக்காக ஆர்டிபிஷியல் இன்டெல்லிஜென்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது என்று கதை கதையாக சொன்னால் நம்பாதீர்கள். நான் இந்த வலைப்பூவில் பல வருடங்களாக எழுதுகிறேன், எழுதுவது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. கடைசி போஸ்ட் SHREK படங்களை பற்றி எழுதினேன் ஆனால் எடிட்டிங் பண்ணவே எனக்கு ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆகிவிட்டது. அதிகமான பணம் இணையதளத்தில் கிடைப்பதால் மனிதர்களிடம் மனிதத்தன்மை குறைந்துவிட்டது. இந்த இணையதளம் இப்போது மனிதர்களின் நண்பனாக மாறிவிட்டது, நிஜத்தின் போதையில் நாசமாக போவதை விட கனவின் இணையத்தில் கெத்தாக இருக்கலாம் என்று முடிவுகளை எடுப்பதால் இணையத்தில் பணம் சார்ந்த விஷயங்கள் அதிகமாக நடக்கிறது. மாதாந்திர வருடாந்திர மெம்பர்ஷிப் பண்ணுபவர்களுக்கு அதிக சலுகை என்பதால் பணத்தை கொட்டுகின்றனர். எனக்கு என்னுடைய வலைப்பூவுக்கு வியூ கூட கிடைப்பது இல்லை. எல்லாம் யூ ட்யூப் பக்கம் போவதால் இப்போது எல்லாம் டெக்ஸ்ட் டேட்டா படிக்க ஆளே இல்லை. வாழ்க்கையே தோல்வி ஆகும்போது இந்த ஆர்டிபிஷியல் இன்டெல்லிஜென்ஸ் மனிதர்களை போலவே கதைகளை எழுதுகிறது. படத்துக்கு கதைகளை இது எழுதுவதாலும் டிசைன்களை இது போடுவதாலும் சம்பளம் மிச்சம் பண்ண இந்த விஷயங்களுக்கு பணத்தை கொட்டி கொடுத்தால் சராசரி மனிதனின் முயற்சிகள் என்ன ஆகும் ? என்னை கேட்டால் இந்த ஆர்டிபிசியல் இன்டெல்லிஜென்ஸ் போன்ற விஷயத்தை பயன்படுத்தி மனிதனை மரியாதை இல்லாமல் நடத்தினால் அது நன்றாக இருக்காது, பணக்காரன் இவைகளை பயன்படுத்தி இன்னும் பணக்காரன் ஆகிறான், ஏழை இன்னமும் ஏழை ஆகிறான். ஒரு பக்க சினிமா கதை எழுத சொல்லி இந்த ஆர்ட் இன்டெல்லிடம் கேட்டேன் ஆனால் இது பக்காவாக ஃபைட் ஸீன்களுடன் பிளாக் பஸ்டர் லெவல்க்கு ஒரு செம்ம ஸ்கிரிப்ட் கொடுக்கிறது, எனக்கு இதுதான் பயமாக உள்ளது. பணக்காரர்கள் ஏழைகளை எட்டி கூட பார்க்க மாட்டார்கள். பஞ்சம் பசி பட்டினி என்று உலகம் இப்படித்தான் போக வேண்டுமா ? அடுத்த ஸ்கை நெட் இந்த ஏ ஐ ஆக மாற வாய்ப்புகள் இருந்தாலும் இந்த வகை சாஃப்ட்வேர்கள் மனிதர்களை கட்டுப்படுத்தினால் கண்டிப்பாக மனித இனத்தையே புதைக்கப்பட்ட சுடுகாடாக மாற்றிவிடும். ஆனால் இவைகளின் வளர்ச்சியை பார்க்கும்போது எனக்கு ஜகமே தந்திரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் சொன்ன வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகிறது "ஒரு போரை ஆரம்பிக்கத்தான் முடியும். முடிக்க முடியாது." - கஷ்டப்பட்டு பண்ணி சாப்பாடு போடுபவர்களுக்கு சாப்பிட பணம் இல்லை. ஆனால் கிரிப்ட்டோ, ஆர்ட் இன்டெல் மற்றும் இணையத்துக்கு கோடி கோடியாக பணத்தை கொண்டுவந்து  கொட்டுவது நியாயமா ? மனித இனத்தில் மனிதத்தன்மையை இந்த கற்பனைக்கு பணத்தை கொட்டும் பழக்கம் மொத்தமாக நாசம் பண்ணிவிடும் என்பதே இப்போது மிகப்பெரிய அபாயம். சாஃப்ட் வேர் பணியாளர்கள் வெளியே அனுப்பப்படுகிறார்கள். எழுத்தாளர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். உலகத்தின் இந்த விஷயங்கள் கவனிக்கப்படாமல் போவதற்கும் இவைகள்தான் காரணமா ? இந்த AI எல்லாம் பணக்காரனை இன்னும் பணக்காரனா மாத்தும் !! ஆனால் கஷ்டப்படற மக்களோட வாழ்க்கை கடைசியில வீடு வாசல் இல்லாத நிலைமைக்கு கொண்டுவந்து விட்டுடும் ! உங்களுக்கு என்னய்யா இப்படி ஒரு பொல்லாதா ஆசை. ஒரு பக்கம் மனுஷங்க மண்டைக்குள்ள CHIP வெச்சு CONTROL பண்ணலாமான்னு ஆராய்ச்சி , இன்னொரு பக்கம் இந்த AI மண்டைக்கு வெளியே உலகத்தையே கட்டுப்படுத்தலாம்னு விளையாடிக்கிட்டு இருக்கு !  எல்லோருமே சம்பாதிக்காம சோறு சாப்பிடனுமா ? அதுதான் உங்களுடைய ஆசையா ? 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...