Sunday, August 20, 2023

CINEMA TALKS - THE MOVIE WORTH A WATCH !!! - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

டேனியல் ராட்கிளிஃப் நடித்த  கன்ஸ் அகிம்போ படத்தை பற்றி பார்க்கலாம்  - இந்த படம் ஒரு செம்ம ஆக்சன் அடவென்சர் என்டர்டெயின்மென்ட்.. ஒரு பிரைவேட் கம்பனியில் சாதாரணமான ஒரு சாப்ட்வேர் புரோகிராமர் வேலையில் நிறைய வருடங்களாக பணிபுரிந்து கொண்டு இருப்பவர் நமது கதாநாயகன் டேனியல். இவருடைய வாழ்க்கையில் தினம் தினம் கம்பெனியில் பாஸ் கொடுக்கும் டார்ச்சர் முதல் சமீபத்தில் இவருடைய காதல் பிரேக் அப் ஆனது வரை அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்துக்கொண்டு இருக்கும் டேனியல்க்கு வீடியோகேம் விளையாடுவதுதான் ஓரே பொழுதுபோக்கு.. ஒரு நாள் இதேபோலத்தான் வீடியோகேம் விளையாடிக்கொண்டு இருக்கிறார்.. ஆனால் இந்த முறை நம்ம ஊர் ஆன்லைன் சூதாட்ட ஆப்களை போல ஒரு வீடியோகேம் ஆப் இவருடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுகிறது. மிகவும் மோசமான கொலை கொள்ளைகளில் ஈடுபடும் ஒரு இன்டர்நேஷனல் அமைப்பு ஸ்கிஷம் . தற்காலிகமாக ஃபைட் கிளப் போலத்தான் இவர்கள் செயல்படுவார்கள் ஆனால் வீடியோகேம் ஸ்டைல்லில் வேண்டாதவர்களை தீர்த்துக்கட்டுவதை ஒரு பெரிய நெட்வொர்க்காகவே காலகாலமாக செய்துகொண்டு இருக்கிறார்கள். நிறைய குற்ற செயல்களில் சமீபத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் இந்த அமைப்பை கட்டுப்படுத்துவது காவல் துறைக்கே ஆபத்தான விஷயமாக இருக்கும்போது தெரியாமல் நம்முடைய கதாநாயகன் டேனியல் இந்த அமைப்பில் இருக்கும் ஒருவரை ஆன்லைன் வீடியோகேம் சாட் பேனல்லில் திட்டிவிடுகிறார். அடுத்த நாள் இந்த அமைப்பை சார்ந்தவர்கள்  டேனியலை மோசமாக அடித்துவிட்டு ஆபரேஷன் செய்து அவருடைய இரண்டு கைகைளில் துப்பாக்கிகளை நிரந்தரமாக பொருத்திவிடுகிறார்கள். மேலும் இவருடைய உயிருக்கு கொலைகாரர்கள் மத்தியில் ஒரு விலையையும் நிர்ணயித்துவிடுகிறார்கள். இந்த கொலைகாரர்கள் அமைப்பின் முயற்சிகளில் இருந்து டேனியல் எப்படி தப்பி சென்றார் ? இவர்களால் கடத்தப்பட்ட காதலியை எப்படி காப்பாற்றினார் என்று படம் மிகவும் விறுவிறுப்பாக பயணிக்கிறது.   இந்த படத்துடைய ஸ்வாரஸ்யமான விஷயம் அவருடைய உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் டேனியல் இங்கே அவரால் கோபப்படாமல் யாரையும் காயப்படுத்தாமல்  என்னென்ன செய்ய முடியுமோ எல்லாவற்றையும் செய்வதுதான். இவரை துரத்தும் டாப் லெவல் கொலைக்காரியாக நடிக்கும் சமாராவின் கதாப்பத்திரமும் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது. மொத்ததில் ஒரு தாறு மாறான ஆக்ஷன் காமெடி படம் இந்த படம். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கவும். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...