இந்த பாடல் வரிகள் என்னக்குமே எனக்கு மிகவுமே பிடித்தமான பாடல் வரிகள். நான் இந்த பாடலுக்கு ஒரு வீடியோ சாங்க் எடுக்க வேண்டும் என்று நிறைய நாட்களாகவே ஆசைப்பட்டுள்ளேன். நிறைய பக்தி பாடல்கள் கடவுளை பாராட்டுவதில் மற்றும் நன்றி சொல்வதில் பாடல் வரிகளை கொடுக்கும்போது இந்த பாட்டு மட்டும் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் வாழ்க்கைக்கும் இருக்கும் தொடர்புகளில் எதார்த்தத்தை சொல்லியுள்ளது. டி எம் சௌந்தர் ராஜன் குரலில் இந்த பாடல் கேட்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.
அன்று கேட்பவன் அரசன் மறந்தால் நின்று கேட்பவன் இறைவன்.. நடுவில் மனிதன் வாழுகிறான் வீணில் மனம் தடுமாறுகிறான் இறைவா இறைவா..
1. மனம் போல் மாங்கல்யம் என்பார் தன்மனமே சகலமும் என்பார் தெரிந்தும் குணத்தை இழக்கிறான் இதயம் குலைந்து தவிக்கிறான்.
2. அடிக்கும் அவன் கை அணைக்கும் புவி அனைத்தும் தலைவன் இயக்கம் தலைவன் அணைத்தால் சிரிக்கிறான் தன்னை அடித்தால் பழிக்கிறான்
3. கற்றது கைமண் அளவு கரை கண்டவர் இங்கே குறைவு கண்டு அறிந்தவர் ஓர் தலைவன் யாவும் அருள்வான் நம் இறைவன்.
இந்த பாடலில் வார்த்தைகள் கொஞ்சமாக இருந்தாலும் அதிகாலை நேரத்தில் இந்த பாடலை கேட்கும்போது இந்த பாடல் கொடுக்கும் அனுபவம் வேற லெவல். கண்டிப்பாக இந்த பாட்டுக்கு நான் வீடியோ சாங்க் எடுப்பேன். இது இன்னைக்கு தேதியில் என்னுடய பராமிஸ்...!!
No comments:
Post a Comment