வியாழன், 17 ஆகஸ்ட், 2023

CINEMA TALKS - VARISU - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



இப்போது வாரிசு என்ற தமிழ் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் , இல்லை.. இல்லை.. "வாரிசுடு" என்ற தமிழில் எடுக்கப்பட்ட தெலுங்கு படங்களின் கமர்ஷியல் விஷயங்களை மட்டும் வைத்து எடுக்கப்பட்டு வெளிவந்த ஒரு டப்பிங் பண்ணப்படாத டப்பிங் படத்தை பற்றி பார்க்கலாம். விஜய்யின் அனைத்து படங்களும் பெர்சனலாக எனக்கு பிடிக்கும். ஒரு விமர்சனம் பண்ணும் விமர்சகராக நான் சப்போர்ட் பண்ணி பேச வேண்டும் என்று யோசிக்கவில்லை. 

பொதுவாக விஜய் எப்போதும்  ஃபேமிலியுடன் ரசிக்கும்படியான ஆக்ஷன் படங்களை அதிகமாக கொடுத்துள்ளார். ஆனால் ஃபேமிலி எலிமெண்ட்ஸ் படத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் ஆனால் படமே அப்படி இருப்பது கொஞ்சம் புதிதாக இருக்கிறது. 2 மணி நேரம் 50 நிமிஷம் படம் மொத்தமும் அப்பாவுக்கு கேன்சர் , தங்கை கடத்தல் , அண்ணன்கள் வெறுப்பு , ஸ்டாக் ஃபைட் காட்சிகள் , பணக்கார குறும்புகள் என்று கமர்ஷியல் படங்களில் இருக்கும் சுமாரான காட்சிகளே இருக்கிறது, ஒரு பெரிய பங்களாவில் இருக்கும் பணக்கார குடும்பம் மற்றும் பிசினஸ் போட்டிகளைத்தான் காலாகாலமாக சீரியல்களில் பார்த்துக்கொண்டு இருக்கிறோமே ? மறுபடியும் எதுக்காக சினிமாவில் பார்க்க வேண்டும் ?

வாரிசு மோசமான படம் இல்லை.. ஆனால் சென்டிமெண்ட் , சென்டிமெண்ட் , சென்டிமெண்ட் . சென்டிமெண்ட் , இந்த படத்துக்கு பெரிய பின்னடைவு எக்கச்சக்கமான சென்டிமெண்ட்களை போட்டு தாக்கியதுதான். மேலும் காட்சிகள் அவ்வளவு சிறப்பான டுவிஸ்ட்களை கொடுக்கவில்லை. ஒரு எக்ஸாம்ப்பிள்க்கு போக்கிரி படத்தை பார்த்தால் விஜய் ஒரு அன்டர்கவர் ஆபரேஷன்க்காக மிகவும் கெட்டவர்களுடைய நெட்வொர்க்களில் சேரந்து இருக்கும் ஒரு இளம் காவல் துறை அதிகாரி என்பதை கடைசி வரைக்கும் ஒரு பெரிய ஸஸ்பென்ஸ் டுவிஸ்ட் ஆக வைத்து இருப்பார்கள். ஆனால் ஒரு கமர்ஷியல் படத்தில் இருந்தாலும் அந்த டுவிஸ்ட் நன்றாக வேலை செய்து இருந்தது. கிளைமாக்ஸ் மாஸ் ஆக இருந்தது. மேலும் முந்தைய படங்கள் சர்க்கார் படம் எடுத்துக்கொள்ளலாம் இங்கே துணிவோடு நடக்கும் அரசியல் பிரச்சனைகளில் இருந்து மக்களை காப்பாற்ற ஒரு திறன்மிக்க தொழில் அதிபர் முடிவு எடுத்தால் என்ன நடக்கும் என்ற ஒரு லைன் படத்தில் மிக அழகாக எக்ஸெக்கியூட் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த படத்தில் அப்படி ஒன்றும் பெரிதான டுவிஸ்ட் இல்லை. இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ராஸ்மிக்கா கொஞ்சம் காட்சிகளே இருந்தாலும் அவருடைய காட்சிகளை நிறைவாக கொடுத்து இருக்கிறார், யோகிபாபு ஒரு சீனியர் காமெடி ஆக்டராக நன்றாகவே அவருடைய வெற்றியை பதித்து இருக்கிறார், நான் கண்டிப்பாக பரோமிஸ் பண்ணி சொல்லுவேன் இந்த படத்தின் நேரடி தமிழ் பாதிப்பை தவிர தெலுங்கு , கன்னடம் , ஹிந்தி , மலையாளம் , பதிப்புகளில் நல்ல மாஸ் ஆன வசனங்கள் இருந்திருக்கும். ஒரு ஸ்டாக் வசனம்தான் தமிழில் இருக்கிறது. 

கம்பேர் பண்ணி பார்த்தால் வைகுந்தபுரம் படம் அளவுக்கு இந்த படம் இல்லை. ஹார்ட் விஜய் ஃபேன்ஸ்க்கு கண்டிப்பாக இந்த படத்தை சப்போர்ட் பண்ணவேண்டும் என்று தோன்றும். ஆனால் இப்போது நான் இப்படி பண்ணாமல் இருந்தால் நடிகர்களுக்கு மட்டும் 100 கோடி சம்பளம் கொடுப்பதால் படத்தின் பட்ஜெட் குறைந்து பெரிய காட்சிகள் இல்லாமல் சுமாரான காட்சிகளை வைத்து படத்தை கொடுக்கும் கட்டாயம் வரும். விவசாயம் பண்ணும் விவசாயிகளுக்கு இலாபம் இல்லை ஆனால் விவசாயியாக நடிப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் என்றால் இந்த திரைப்படக்கலை மக்களிடம் எவ்வளவு நெருக்கமான விஷயமாக வாழ்க்கையில் இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் படத்துக்கு ஸீன் எடுக்க வைத்த காசு சம்பளம் கொடுக்க சரியாக போய்விட்டது என்று சொல்லி தீபாவளி மற்றும் பொங்கல் நாள் அன்று ஒரு நத்தையை விட மெதுவாக நகரும் டிராமாக்களை பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள வேண்டாம். மொத்ததில் வாரிசு படத்துக்கு நிஜமாக வைக்க வேண்டிய டைட்டில் - குடும்பம் ஒரு கதம்பம் !!! 

"சரத் குமார் யாரென்று தெரியுமா ? அவரை போய் இறந்து போவதாக காட்டிவிட்டீர்களை ? அதுக்காகவே இந்த படத்தை நான் வெறுக்கிறேன் !! "




2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

tharkuri mathiri review panna koodathu, moodiu poda toxic mental aamai nakki

பெயரில்லா சொன்னது…

யோகிபாபு ஏன் ஒரு நாளைக்கு 8 லட்சம் சம்பளம் கேக்குறாரு தெரியுமா !!!

யோகிபாபு vs சூரி: சினிமா அரசியலும் எதார்த்தமும்
உண்மையைச் சொல்லப்போனால், சூரிக்கு முன்னாடியே ஹீரோவானவர் யோகிபாபுதான். ஆனா இன்னைக்கு சூரி ஒரு பெரிய ஹீரோவா வளர்ந்து நிக்கிறாரு. யோகிபாபு கூர்கா, மண்டேலா மாதிரியான படங்கள் மூலமா தான் ஒரு 'கலெக்ஷன் நாயகன்'னு நிரூபிச்சாரு. குறிப்பா 2021, 2022 காலக்கட்டத்துல பயங்கர டிமாண்ட் உள்ள ஹீரோவா அவர்தான் இருந்தாரு.

நிறைய சின்ன இயக்குநர்களுக்கும், புது இயக்குநர்களுக்கும் "யோகிபாபுவை வெச்சு படம் பண்ணா பிசினஸ் ரீதியா ஜெயிச்சிரலாம்" அப்படிங்கிற ஒரு நம்பிக்கையை கொடுத்தாரு.

என் படத்தோட அனுபவம்
என்னோட டபுள் டக்கர் படம் முதல்ல அனிமேஷன் படமா ஆரம்பிக்கல. அது முழுக்க முழுக்க நிறைய அடல்ட் ஜோக்ஸ் இருக்குற மாதிரி, எங்ஸ்டர்ஸை டார்கெட் பண்ணி எழுதின கதைதான். அந்தப் படத்துல வர்ற 'ரைட்', 'லெஃப்ட்' அப்படின்ற ரெண்டு அனிமேஷன் ஏஞ்சல் கேரக்டர்ஸ்ல முதல்ல யோகிபாபுவும், முனிஷ்காந்தும் தான் நடிக்கிறதா இருந்துச்சு.

யோகிபாபுவோட கால்ஷீட் ஒரு பத்து நாளைக்கு தேவைப்பட்டுச்சு. அவரைப் பார்க்க ரெண்டு மாசம் காத்துக்கிட்டிருந்து ஒருவழியா அப்பாயின்மென்ட் கிடைச்சது. அந்த நேரத்துல அவர் தூக்கம் இல்லாம ராப்பகலா ஷூட்டிங்ல பிஸியா இருந்தாரு. அவரைப் பார்க்கணும்னா ஷூட்டிங் நடுவுல கிடைக்கிற அந்தப் பத்து நிமிஷம் பிரேக்ல தான் போயாகணும். அந்தப் பத்து நிமிஷ கேப்ல அவரைப் பார்க்க ஏற்கனவே ஒரு பத்து புரொடியூசர், டைரக்டர் காத்துக்கிட்டிருப்பாங்க. எல்லாத்தையும் தாண்டி எனக்கு ஒரு அஞ்சு நிமிஷம் அவரைப் பார்க்க டைம் கிடைச்சது.

சம்பளப் பிரச்சனையும் காரணமும்
அஞ்சு நிமிஷத்துல கதையைச் சொன்னேன், அவருக்கும் பிடிச்சுப்போய் ஓகே சொல்லிட்டாரு. ஆனா சம்பளம்னு வரும்போது ஒரு நாளைக்கு எட்டு லட்சம் கேட்டாரு. அவ்வளவு காசு கொடுக்க ரெடியா இருந்தாலும், அடுத்த ஆறு மாசத்துக்கு அவர்கிட்ட தேதியே இல்லை. "ஆறு மாசம் வெயிட் பண்ணா டேட் தர்றேன்"னு சொல்லிட்டாரு.

ஆனா நான் கேள்விப்பட்ட வரைக்கும், ஒரு கதை நல்லா இருந்து அவருக்குப் பிடிச்சிருந்தா, புது இயக்குநர்கள் படத்துல ஒரு நாளைக்கு மூணு லட்சம் சம்பளத்துக்கே நடிச்சுக்கொடுப்பாரு. அப்புறம் ஏன் இவ்வளவு கேட்டாருன்னு யோசிச்சப்பதான் ஒரு விஷயம் புரிஞ்சது. நிறைய புது ஆளுங்க இவரை ஒரே ஒரு சீன்ல காமெடியனா நடிக்க வெச்சுட்டு, போஸ்டர்ல இவரைப் பெருசா போட்டு இவர்தான் ஹீரோன்னு சொல்லி ஊரை ஏமாத்தி படத்தை ஓட்டுனாங்க.

இதனாலதான் புதுமுகங்கள் கூட நடிக்க அவருக்கு விருப்பம் இல்லை. ஆனா அதை நேரடியா சொல்ல முடியாம, சம்பளத்தை எட்டோ பத்தோன்னு ஏத்திச் சொல்றது, ஆறு மாசம் டேட் இல்லைன்னு சொல்றதுன்னு பண்ண ஆரம்பிச்சாரு. அப்படிச் சொன்னா இவங்களே வரமாட்டாங்கன்னு அவரோட பிளான்.

விதியின் விளையாட்டு
அதற்கு அப்புறம்தான் யாரையும் நம்பாம அனிமேஷன் மேல நம்பிக்கை வெச்சு படத்தை எடுத்தோம், அதுவும் நல்லாவே அமைஞ்சது. யோகிபாபு ஒரு நாளைக்கு ஏழு, எட்டு லட்சம் கேட்கிறாருன்றதெல்லாம் சும்மா பொய். நல்ல கதையா இருந்தா, அவருக்கு முக்கியத்துவம் இருந்தா புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு தர அவர் எப்பவும் ரெடியாதான் இருக்காரு.

ஆனா விதியை பாருங்களேன்... சூரிக்கு அமைஞ்ச அந்த ஒரு 'லக்' யோகிபாபுவுக்கு அமையல. மண்டேலா படத்துக்கு அப்புறம் அவருக்கு அந்த அளவுக்குப் பெருசா சொல்லிக்கிற மாதிரி படங்கள் வரல. இதுல இந்த ரவி மோகன் வேற யோகிபாபுவை ஹீரோவா போட்டுப் படம் எடுக்குறாராம்... என்னத்த கிண்டிக்கிட்டு இருக்காரோ தெரியல!

TAMIL BLOG POST 001 - GENERAL TALKS - 001 - நேர்மறை எண்ணங்கள் கட்டாயமானவை !

 நமது வாழ்வில், சரியான செயல்களை மட்டுமே ஆற்றுவதற்கு நாம் கண்டிப்பாகக் கட்டுப்பட்டவர்களாகவும், கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். தவறான செயல்...