இந்த படம் 2009 ல் வெளியானபோது உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்த படத்துடைய கதை, கதாநாயகன் ஜேக் அவருடய அண்ணனின் மறைவுக்கு பிறகு அவருடைய வேலையில் பணியமர்த்தப்படுகிறார். கால்கள் பாதிப்பால் நடந்து செல்லும் சக்தியற்ற ஜேக் அவருடைய புதிய நண்பர்களின் உதவியால் அவதார் என்ற ப்ராஜக்ட்டின் மூலமாக நாவி என்ற பேன்டோரா என்ற கிரகத்தின் ஏலியன் உடலை அடைந்து அந்த கிரகத்தில் உளவாளியாக மாறி நிறைய தகவல்களை சேகரிக்கிறார்.
இந்த நிலையில் இவர் காதலிக்கும் பேன்டோரா கிரகத்தின் தலைமை குழுவின் பெண்மணி நெட்ரி மூலமாக பூமியில் இருப்பவர்களின் மரங்களை வெட்டும் ப்ராஜக்ட் இந்த மக்களை பெரிய அபாயத்தில் கொண்டு சென்றுவிடும் என்று புரிந்துகொள்ளும் ஜேக் எவ்வளவோ தடுக்க முயற்சித்தும் மனிதர்களின் படையால் தோற்கடிக்கப்பட்டு தூரத்தப்படுகிறார். இப்போது அவரை முழுமையாக நம்பும் ஏலியன் நாவி படையின் உதவியுடன் இயந்திர ஆயுதங்களை உடைய மிகப்பெரிய விண்கலன்களின் படையை தடுத்து மரங்களை காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் இந்த படத்தின் கதை.
நிறைய விஷுவல் எஃபக்ட்ஸ் பயன்படுத்தப்பட்ட இந்த படம் இன்னொரு கிரகத்தின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கண்முன்னால் காட்டுகிறது. ப்ரோமிதியஸ் மற்றும் ஏலியன் கோவனன்ட் படங்களில் வேற்று கிரகங்களின் காட்சிகள் இருப்பது போன்று இந்த படத்தின் வேற்றுகிரக காட்சிகள் இல்லை. மரங்களின் முக்கியத்துவம் தெரிந்தும் அதனை அழிப்பது மிகவும் மோசமான செயல் என்ற ஒரு மாடர்ன் கமெண்ட் இந்த படத்தில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. சாம் வோர்த்திங்க்டன் மற்றும் ஜோ ஸல்டனா மிக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment