இந்த படம் மார்வேல் படங்களின் வரிசையில் மிகவும் கலகலப்பான படம். கொஞ்சமும் சீரியஸான டோன்னே இல்லாத ஒரு படம் என்றே சொல்லலாம். ஒரு காலத்தில் தோர் கதாப்பத்திரத்தின் வாழ்க்கையில் அவருடைய கதைக்களம் அவெஞ்சர்ஸ் எண்டுகேம் படத்துக்கு பின்னால் ஸ்டோரி ஆர்க் என்ற வகையில் கொஞ்சம் டார்க்காக சென்றுக்கொண்டு இருந்தது ஆனால் இப்போது மறுபடியும் ராக்னராக் காலத்துக்கு வந்துவிட்டது. இந்த படத்துடைய பெரிய பிளஸ் பாயிண்ட் அதுதான். மைனஸ் பாயிண்ட்டும் அதேதான்.
இந்த படத்துடைய கதை , கடவுளுடைய சக்திகளை மிஞ்சிய ஒரு ஆயுதமாக இருக்கும் உயிருள்ள போர் வாளான நேக்ரோ ஸ்வார்ட் இப்போது தன்னுடைய சொந்த மகளை இழந்ததால் கடவுள்களை மொத்தமாக கொல்ல வேண்டும் என்ற அளவுக்கு வெறுக்கும் ஒரு அப்பாவான கோர் தி காட் புட்ச்சர்ரின் கைகளில் இருக்கிறது. பாவம் புண்ணியம் பார்க்காமல் நமது வில்லன் கடவுள்களை கொல்ல ஆரம்பிக்கிறார்.
இன்னொரு பக்கம் கேன்சரில் இறந்துகொண்டு இருக்கும் தோர்ரின் காதலி ஜேன் பாஸ்டர் இப்போது ஒரு காலத்தில் உடைந்து போன தோரின் சுத்தியல் கொடுக்கும் மின்னல் சக்திகளின் காரணமாக தற்காலிக சக்திகளை பெற்று ஹீரோவாக பிரகாசிக்கிறார் இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டு இருக்கும் ஜேனின் நிலையை தோர் மிக மிக தாமதமாக தெரிந்துகொள்வதால் கண்டிப்பாக கோரின் செயல்களையும் தடுக்க வேண்டும் அதே சமயத்தில் ஜேனையும் காப்பாற்ற வேண்டும். இதுதான் இந்த படத்துடைய கதை.
பக்காவான இந்த கதையில் ஹைலைட் என்பதே காமெடி காட்சிகள்தான், படத்தின் மொத்த சீரியஸ் ஆன காட்சிகளும் காமெடியில் கவர் பண்ணப்பட்டு இருக்கிறது. பொதுவாக மார்வேல் படங்களை தொடர்ந்து பார்க்கும் ஆடியன்ஸ்க்கு இந்த டோன் பரிச்சயமானதுதான். KORG இன் ஆரிஜின் ஸ்டோரி. நிறைய OVER ACTING இது எல்லாமே கொஞ்சம் மைனஸ்.
தோர் மற்றும் ஜேன் பாஸ்டர் கதாப்பத்திரங்களின் கதைக்களத்துக்கு ஒரு நிறைவான முடிவு இந்த படத்தின் கிளைமாக்ஸ்ஸில் கிடைத்துள்ளது. கோர் தி காட் புட்ச்சர் காதாப்பத்திரத்தில் அடையாளமே கண்டுபிடிக்க முடியாத மேக் அப்பில் இருக்கும் கிறிஸ்டியன் பேல் ஒரு அட்டகாசமான வில்லனாக வந்துள்ளார். கதைக்கு இந்த கதாப்பத்திரம் சரியாக பொருந்துகிறது. டைக்கா வைட்டிட்டி இயக்கத்தில் நகைச்சுவையான இந்த டோன் படத்தின் கதையை தொடர்ந்து இண்டரெஸ்ட்டிங் ஆக கொண்டு செல்கிறது. குறிப்பாக சொல்லப்போனால் ஜூயிஸ் கதாபத்திரத்தின் தாறுமாறான செயல்கள் எல்லாம் இந்த படம் கிட்டத்தட்ட கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி போல எடுக்கப்பட்ட படம் என்றே காட்டுகிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் நிறைவாக இருப்பதால் படத்தின் குறைகளை மன்னிக்கலாம்.
No comments:
Post a Comment