இந்த படம் எனக்கு ரொம்பவுமே பெர்சனல்லாக பிடித்த படம். கார்த்திக் சுப்புராஜ் ஒரு யூனிக்கான ஸ்டோரிலைன் எடுத்து மிக மிக சிறப்பாக இந்த படத்தை உருவாக்கியிருப்பார். மது ஒழிப்புக்காக காந்தியடிகள் காலத்தில் போராட்டம் செய்தவர்களின் குடும்பத்தில் பிறந்ததர்க்காக ஒரு கட்டுப்பாடும் ஒழுக்கமும் உள்ள காந்தி வழியில் வளர வேண்டும் என்று குடும்பத்தால் மிகவும் மோசமாக கட்டாயப்படுத்தப்பட்டு ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பவர் விக்ரம் , ஒரு நாள் , வெறும் ஒரே ஒரு நாள் , அதுவும் அவருடைய நாற்பதாவது பிறந்த நாள் அன்று ஒரு சின்ன தவறை செய்தால் குடும்பத்தில் உள்ளவர் அனைவராலும் வெறுக்கப்பட்டு தனித்து விடப்படுகிறார்.
இவருடைய பையனை பிரித்து வளர்க்கும் பெற்றோர் அவனை ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ்வதற்காக கொலைகளை கூட செய்யும் ஒரு பயமுறுத்தும் போலீஸ் அதிகாரியாக வளர்க்கின்றனர். வாழ்க்கையின் உண்மைகளை கொஞ்சமும் உணராத ஒரு கோபக்கார அதிகாரியாக மனிததன்மை இல்லாமல் குடிப்பவர்களை வெறுக்கும் ஒரு பையன் அவனுடைய அப்பாவை பழிவாங்க நினைத்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய டுவிஸ்ட்.
படத்தின் தொடக்கத்தில் விக்ரம் அவர்களின் கதாப்பத்திரம் தனக்கென்று ஒரு நாள் கூட வாழாமல் அடுத்தவர்களுக்காகவே வாழந்து வாழ்க்கையில் சலிப்பை எட்டும் காட்சிகள் ஒரு இயல்பான கதையாக இருந்தாலும் அடுத்த பாதியில் கதை போகப்போக ஒரு மாஸ் என்டர்டைன்மெண்ட் ஆக இருக்கிறது. பிரமாதமான விஷுவல்ஸ், கதைக்குள் நம்மையே கொண்டு செல்லும் காமிரா வொர்க். மெய்சிலிர்க்கும் வசனங்கள். சிறப்பான திருப்பங்கள் என பக்காவாக கொடுக்கப்பட்ட ஒரு கதை. இந்த படத்துக்கு பின்னால் வாழ்க்கையில் கொள்கைகளை மண்டைக்குள் போட்டுக்கொண்டு மனிதர்கள் மீது ஒரு சமமான அன்பு கொடுக்காமல் தன்னுடைய மனதின் ஆசைகளை மொத்தமாக விட்டுக்கொடுத்து வாழ்வது எவ்வளவு கடினமான ஒரு விஷயம் என்பதை இந்த படம் நமக்கு யோசிக்க வைக்கும். விக்ரம் வேர்சஸ் துருவ் விக்ரம் காட்சிகள் அனல் பறக்கும் மாஸ். கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள். ஒரு தரமான படைப்பு.
No comments:
Post a Comment