ANTMAN AND THE WASP - OUANTUMANIA - இந்த பூமியை காப்பாற்ற மிகப்பெரிய போரில் டைம் டிராவல் பண்ணும் டெக்னோலஜியை கண்டுபிடித்து அவஞ்சர்ஸ்க்கு பெரிய ஹெல்ப் பண்ணியதாலும் மேலும் தேனோஸ் படைகளை தோற்கடிக்க சண்டைபோட்டதாலும் ஸ்காட் லாங் மிகவும் ஃபேமஸ் ஆன சூப்பர் ஹீரோவாக மாறிவிட்டார். இவருடைய வாழ்க்கை சிறப்பாக சென்றுக்கொண்டு இருக்கும்போது இவருடைய மகள் காஸ்ஸி லாங் செய்துகொண்டு இருக்கும் அறிவியல் ஆராய்ச்சியால் குவாண்டம் ரியலம் என்று சொல்லப்படும் இன்னொரு பரிமாணத்துக்குள் இவர்களின் குடும்பம் மாட்டிக்கொள்ளும் நிலை உருவாகிறது. மாறுபட்ட பிரபஞ்சங்கள் எனப்படும் MULTIVERSE ஐ நடுநடுங்க வைக்கும் மிகப்பெரிய அறிவுத்திறன் மிக்க சூப்பர் வில்லனான கேன்க் - தி கான்க்வரர் என்ற வில்லன் பலவருடமாக இந்த குவாண்டம் பரிமாணத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறான் என்பதை ஜேனட் மூலமாக தெரிந்துகொள்ளும் ஸ்காட் குடும்பம் இதுவரையில் அவர்கள் கற்றுக்கொண்ட குவாண்டம் ஆராய்ச்சிகளின் மொத்த அனுபவத்தையும் பயன்படுத்தியாவது மாட்டிக்கொண்டு இருக்கும் மகள் காஸ்ஸி லாங்க்கை காப்பாற்ற வேண்டும்.
பொதுவாக மார்வேல் ஸ்டுடியோ வரிசையில் இருக்கும் பக்காவான விஷுவல் எஃபக்ட்ஸ் மற்றும் பிரம்மாண்டமான வெளியீடு இந்த படத்துக்கு இருப்பதால் கண்டிப்பாக நிறைய பிளஸ் பாயிண்ட்கள் இருக்கிறது. குவாண்டம் பரிமாணத்தின் டிசைன் முழுக்க முழுக்க ஒரு நல்ல கிரியேடிவிட்டி. புதிய வில்லன் கேன்க் - தி கான்க்வரர் கதாபத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஜோனாத்தன் மேஜர்ஸ் மற்ற வில்லன்கள் போல பயமுறுத்துவதில் ஃபோகஸ் பண்ணாமல் நிறுத்தி நிதானமாக செயல்படுவதால் ஹீரோக்கள் பயப்படுவதை பார்க்க முடிகிறது. LOKI என்ற WEB SERIES பார்த்தவர்கள் இந்த படத்தை பார்த்தால் இன்னும் நன்றாக புரிந்துகொள்ளலாம் மற்றபடி புதிதாக இந்த படம் பார்ப்பவர்களுக்கு KANG ஒரு புதிரான வில்லனாக இருக்க வாய்ப்பு உள்ளது. டிரெய்லர்களில் கொஞ்சம் சீரியஸ் காண்பித்தாலும் ஆண்ட் மேன் படங்களில் இருக்கும் ஹியூமர் லெவல் இந்த படத்திலும் இருப்பதால் கதையின் சீரியஸ் ஆன விஷயங்கள் சமநிலைப்படுத்தப்படுகிறது - ஃபேஸ் ஃபைவ் தொடக்கத்திலேயே இந்த வில்லனால் அண்ட் மேன் அவுட் ஆகிவிடுவாரோ ? என்று நினைத்தால் இந்த படத்தின் கிளைமாக்ஸ் கண்டிப்பாக சர்ப்ரைஸ் ஆக இருக்கும். படத்தில் லூயிஸ் இல்லை. படமே வேறு ஒரு யுனிவெர்ஸ்ல் நடக்கும் அட்வென்சர் என்பதால் 3 படமாக கம்ப்ளீட் பண்ணுவதற்காக அண்ட் மேன் படங்களுக்கு ஒரு ஃபினிஷ்ஷின்ங் டச் இந்த படம்.
No comments:
Post a Comment