Tuesday, August 22, 2023

OREY NAALIL COLLECTOR AAVATHU EPPADI ? - THE ART INTEL KODUMAI !!



நான் பொதுவாக எதனால் ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் தேவையற்றது என்று சொல்கிறேன் என்றால் இதனால் நிறைய பேருக்கு வேலை போய்விடும். அதிகமான சம்பளத்தக்கு வேலை பார்ப்பவர்கள் அவர்களுடைய சம்பளத்தை குறைத்துக்கொண்டு குறைவான சம்பளத்துக்கு வேலைக்கு போவார்கள். ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் என்பது ஒரு லைப்ரரியில் புத்தகம் எடுத்து படித்து அறிவை வளர்த்துக்கொள்வது கிடையாது. ஒரு உதாரணத்துக்கு சொல்லவேண்டும் என்றால் வருங்காலத்தில் மனிதர்களுடன் இந்த ஆர்ட் ரோபோட்க்கள் சுற்றிக்கொண்டு இருந்தால் ஒரு கட்டத்தில் தெரியாமல் மனிதர்களை தாக்கிவிட்டால் குறைந்தபட்சம் மன்னிப்பு கூட கேட்காது ! அப்படியே கேட்டாலும் என்ன பிரயோஜனம் ! இவைகளுக்கு வலி அல்லது சோர்வுதான் இருக்கிறதா ? இது மனிதர்களாக சப்போர்ட் பண்ணும் பிரச்சனை ! யாருக்கு தெரியும் இந்த கிரிப்ட்டோ கரன்சி படைப்பு கூட ஒரு ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் உருவாக்கிய படைப்பாக இருக்கலாம். உலகம் முழுவதும் கம்ப்யூட்டர் விற்பனையை அதிகப்படுத்த ஒரு கம்ப்யூட்டர் உயிரோடு வந்து யோசித்து செய்த விஷயமாக இருக்கலாம் !!

இன்னைக்கு உலகத்தில் சொந்தமாக யோசிக்கும் கம்ப்யூட்டர் வந்துவிட்டால் அந்த கம்ப்யூட்டர் முன்னால் ஷெர்லாக் ஹோம்ஸ் நின்றாலும் வெறும் சின்ன பையன் நிற்பதற்க்கு சமம். காரணம் என்னவென்றால் எல்லா விஷயங்களையும் ஃபிங்கர் டிப் வகையில் வைத்துள்ளது. சப்போஸ் பாஸ்ட் அண்ட் ஃபூரியஸ் படத்தில் வரும் காட்ஸ் ஐ தொழில் நுட்பம் போல நம்மை ஆர்ட் இன்டெல் டிராக் செய்து புடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அடுத்த ஐந்து நிமிடங்களில் பிடித்து விடலாம். இவைகளுக்கு என்ன உடல் சோர்வு இருக்கிறதா ? இல்லையென்றால் மனதுக்குள் வலிதான் இருக்கிறதா ? வெறும் பிளாஸ்டிக் பொம்மைகள் ! கம்ப்யூட்டர் டப்பாக்கள் ! இவைகளோடு போட்டி போட நாம் டொமினிக் டொரெட்டோவும் கிடையாது நம்மிடம் ஹை ஸ்பீட் பறக்கும் கார்களும் கிடையாது ! 

இந்த விஷயத்தை நான் தெளிவாக சொல்கிறேன் ! இது மாதிரி கம்ப்யூட்டர் வேலைகளை கம்ப்யூட்டர்க்கே கொடுத்து செய்ய சொன்னால் அடைப்படையில் நல்லாதான் இருக்கு ! ஆனால் வேலை போகிறது ! பிட் காய்ன்ல சம்பாதிச்சு சி. பி. யூ யூனிட்டாக வாங்கி தள்ளுகிறான். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இவனுக்கு கரண்ட் பில் பெரிய விஷயம் கிடையாது ! ஆனால் கரண்ட் சும்மா தயாரிக்க முடியுமா ? காரணமே இல்லாமல் சூடான டிகிரி காப்பியை நடு மண்டையில ஊத்துவது போல வெயில் அடிக்குதே ! அது எல்லாமே கரிப்ட்டோ கரன்சியை மெயின்டைன் பண்ணற சி பி யூக்களுக்கு கரண்ட் கொடுக்கத்தான் . !! இந்த டப்பாக்கள் ஓடும்போது இன்னும் கரண்ட் அதிகமாக எடுத்துக்கொள்ளும் !

உலகத்தில் தாயார் பண்ணும் கரண்ட்டில் 1.3 சதவீதம் இந்த உருப்புடாத கரன்சியை மெயின்டைன் பண்ணாத்தான் இல்லீகலாக செலவு ஆகுதுன்னு ஒரு கேள்வி ! எவ்வளவு நிலக்கரி !! பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு வருஷத்துக்கு லைட் , ஃபேன் , வாட்டர் சப்ளைக்கு செலவு பண்ணலாம் !! இப்போ நீங்க என்னை கேட்கலாம் ? என்ன சார் இப்படி தரை லோக்கலா இறங்கி திட்டுறேங்கனு !! உண்மைதான் தலைவா ! நான் திட்டிதான் ஆகணும் ! இந்த டப்பாக்களால வேலை போனது எனக்குதான் ! ஒரு மனுஷன்னா போனுக்கு காசு போடவும் , வண்டிக்கு பெட்ரோல் வாங்கவும் , சோப்பு சீப்பு வாங்கவும் , பல் துலக்க பேஸ்ட் வாங்கவும் , மினரல் வாட்டர் வாங்கவும் கூட கையில பணம் வேணும். துட்டு இல்லாட்டி மனுசனுக்கு மதிப்பே இல்லை ! பணம் யாருக்கு சார் வேணும் ? மனுசங்கதான் முக்கியம்னு கருத்து சொல்லற மக்களே ! ஒரு மூணு மாசம் கரண்ட் பில் கட்டாம பாருங்க ! போடற ஃபைன்ல உங்க பாக்கெட் பன்ஜர் ஆகிவிடும். போனுக்கு EC பண்ணாமல் இன்கமிங் கூட வராது ! உங்களுக்கு கால் பண்ணற நண்பனும் சொந்தக்காரனும் உயிரோடுதான் இருக்கியானு கேட்பான் ! காசு இல்லைன்னா நீங்க சோறு போட்டு வளர்க்கும் நாய்க்குட்டி கூட உங்களை மதிக்காது ! 

இந்த கிரிப்டோ கரன்சின்ன என்ன ? வரவு செலவுகளை ஒரு கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்ல எழுதி அது சரியாக இருந்தால் உங்களுக்கு பொருள் வாங்க பணம் கொடுக்கப்படும்.. அவ்வளவுதானே ! இதைத்தானே பாங்க் பண்ணிட்டு இருக்கு.. ஒரு மனுசனுக்கு காசு கிடைச்சா குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு துணிமணி வாங்கி கொடுத்து படிக்க அனுப்புவான் ஆனால் கம்ப்யூட்டர் என்ன பண்ணும் ? கஷ்டப்பட்டு பைக்ல வெயில்ல அலைஞ்சு சம்பாதிக்கறதும் ஒரு 10 க்கு 30 ன்னு இருக்கும் சர்வர் ரூம்ல ஏ. ஸி குளிரில் இருக்கும் கம்ப்யூட்டர்ல சம்பாதிக்கறதும் ஒண்ணாகுமா ? இந்த சாமாச்சாரங்களை மொத்தமாக தடை பண்ணுங்க !! மக்களுக்கு தற்கொலை எண்ணம்தான் இவைகளால் வேலை போகும்போது அதிகமாகும் ! டெக் என்பது ஒரு கருவி ! ஆனால் கம்ப்யூட்டர்கள் என்னும் டப்பாக்கள் இவைகளை ஆயுதங்களாக மாற்றி நம்மையே தாக்குகிறது !!! 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...