Sunday, August 13, 2023

CINEMATIC WORLD - 096 - NIGHT IS SHORT WALK ON GIRL - TAMIL REVIEW - ஒரு MULTIVERSE ல SHOT பண்ணுண படம் !!

 



NIGHT IS SHORT WALK ON GIRL - பொதுவாக அனிமேஷன் படங்கள் எல்லாமே இரண்டு பரிமாண திரைப்படமாகவோ இல்லையென்றால் மூன்று பரிமாண திரைப்படங்களாகவோ ஒரு மெயின் ஆன கதையை ஃபாலோ பண்ணிக்கொண்டு இருக்கும் , ஆனால் இந்த படம் ஒரு கனவு மாதிரியான உணர்வில் நடக்கக்கூடிய ஒரு படம் போல இருக்கிறது. நான் நிறைய அனிமேஷன் திரைப்படங்களை பார்த்து இருக்கேன். ஆனால் இந்த படம் ஒரு மாறுபட்ட பிரபஞ்சத்தில் அல்லது மல்டி-வேர்ஸ் உலகத்தில் இருந்து பிரிண்ட் எடுத்தது போல இருக்கிறது. பெயர் சொல்லப்படாத ஒரு பெண்ணை காதலிக்கும் ஒரு பையன் அவளுக்கு பிடிக்கும் என்பதற்காகவும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் பேசி பழகி இம்ப்ரஸ் பண்ணிவிடலாம் என்பதற்காகவும் நிறைய விஷயங்களை தொடர்ந்து படம் முடியும் வரைக்கும் பண்ணிக்கொண்டே இருக்கிறான் , இந்த இரவு பொழுது கனவுகளின் உலகத்துக்குள் எப்படி செல்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை. மெயின்ஸ்ட்ரீம் டைம்லைன் கதைகளை விட்டுவிட்டு நம்முடைய உலகத்துக்கே சாராமல் கனவு உலகத்துக்குள் நடக்கும் ஒரு மீட்டா கதையாக இந்த படம் இருக்கிறது. மெயின் கதைக்கு சம்மந்தமே இல்லாத எக்கச்சக்கமான கதாப்பத்திரங்களை கொண்டுவந்து கொட்டி எக்கச்சக்கமான டுவிஸ்ட்களை அள்ளி அள்ளி கொட்டி படத்தை முதல் ஸீன் முதல் கடைசி ஸீன் வரைக்கும் போரடிக்காமல் விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார்கள். இந்த படத்தில் அடுத்தடுத்த காட்சியில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்ற வாய்ப்புதான் கதைக்கு விறுவிறுப்பாக இருக்கிறது.  மற்றப்படி கதையும் கருத்தும் என்று இல்லாமல் ஒரு நல்ல டைம் பாஸ்க்கு ஒரு முறை பார்க்க ஒரு நகைச்சுவையான அட்வென்சர் படம் வேண்டும் என்றால் இந்த கனவு உலக படத்தை பார்க்கலாம். இந்த பார்த்து முடித்த பின்னால் நிறைய நாளுக்கு இந்த படம் "மல்டி-வேர்ஸ்ஸில் இருந்து கொண்டுவரப்பட்டு நம்முடைய பூமியில் வெளியிடப்பட்ட படமா ? என்ற யோசனை மனதுக்குள் இருந்துகொண்டே இருக்கும்.  இந்த படத்தில் காமெடிக்காக மொத்த ஸ்கிரிப்ட்டையும் தாறு மாறாக டிசைன் செய்து உள்ளனர். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...