ஃபேண்டஸி படங்களின் காதலில் இருக்கும் அளவுக்கு அளவுக்கு அதிகமான ஓவர் ரேட்டட் காட்சிகளை சிறப்பாக கலாய்த்து எடுக்கப்பட்ட படங்கள்தான் இந்த ஷ்ரேக் திரைப்படங்கள். இந்த படங்களை பற்றி என்னை கேட்டால் நிறைய நேரங்களில் காதல் என்றால் என்ன ? அன்பு என்றால் என்ன ? என்ற கேள்விக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கும் படங்கள் என்றே சொல்லலாம். கொஞ்சம் வித்தியாசமான அனிமேஷன் வொர்க்ஸ். நடப்பு மீட்டா ஹ்யூமர் படங்களுக்கு கொஞ்சம் முன்னோடியான படம் எனலாம்.
முதல் படமான ஷ்ரேக் படத்தில் ஒரு யுனிவெர்ஸ் காட்டப்பட்டுள்ளது. இந்த யுனிவெர்ஸ் பெயர் ஃபார் ஃபார் அவே. மாயாஜால கதாப்பத்திரங்களும் மனித கதாப்பத்திரங்களும் இணைந்து இருக்கும் யுனிவெர்ஸ் இதுவாகும். ஒரு கொடிய இளவரசனின் கட்டாயத்தால் அடைக்கப்பட்ட இளவரசியை காப்பாற்றி கொண்டு வரும் கதாநாயகன் ஷ்ரேக் தன்னை அறியாமல் இளவரசியை காதலிக்க ஆரம்பிப்பதே இந்த படத்தின் கதையாகும்.
இந்த படத்துடைய அடுத்த பாகம் ஷ்ரேக் 2 ல் இளவரசி ஃபியோனாவின் அப்பா அவளை ஷ்ரேக்கிடம் இருந்து தனியாக பிரித்து ஃபேரி காட்மதரின் பையனான இளவரசன் சார்மிங்குக்கு கல்யாணம் பண்ணி வைக்க சதிதிட்டம் தீட்டுகிறார்கள் , இளவரசி ஃபியோனா மற்றும் கணவர் ஷ்ரேக் எப்படி இந்த சதிகளை கடந்து இணைகிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை. இந்த படம் போன படத்தை விட மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் சாதனையை செய்தது, ட்ரீம்வொர்க்ஸ் ஸ்டுடியோவுக்கு இன்றைக்கு தேதி வரைக்கும் மிகப்பெரிய சக்ஸஸ் இந்த படம்.
மூன்றாவது பாகம் ஷ்ரேக் தி தேர்ட் படத்தில் இளவரசியை காதலில் வசப்படுத்த முயற்சி செய்து தோற்றுப்போன பிரின்ஸ் சார்மிங் இப்போது புதிதாக பதவி ஏற்கும் ஷ்ரேக்கை கொல்ல அந்த ஃபார் ஃபார் அவே உலகத்தின் மொத்த வில்லன் கதாப்பாத்திரங்களையும் சேர்த்து ஒரு பெரிய படையாக மாற்றி களத்தில் இறக்குகிறான். நிறைய ஃபேமிலி காட்சிகள் இருக்கிறது. அனிமேஷன் படமாக இருந்தாலும் ஒரு டிஃபரெண்ட் ஆன மியூசிக்கல் காமெடியாக இந்த படத்தை எடுத்துக்கொள்ளலாம்.
கடைசி பாகமான ஷ்ரேக் - தி ஃபைனல் சாப்டர் படத்தில் இப்போது குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழும் ஷ்ரேக் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை மாற்ற நினைத்து ஒரு மாயாஜால வில்லனிடம் டைம் டிராவல் வகையில் இதுவரை நடந்த சம்பவங்களை மாற்ற சொல்கிறான் இதனால் ஷ்ரேக் மற்றும் ஃபியோனா நிரந்தரமாக பிரிந்து வாழும் இன்னொரு டைம்லைன் கதையில் ஷ்ரேக் இருக்கிறார், மறுபடியும் காதல் பூக்குமா ? என்பதே இந்த படத்தின் கதை.
ஆரம்பத்தில் லைவ் ஆக்ஷன் அனிமேஷன் கலவையாக எடுக்க நினைத்த இந்த படம் பின்னால் மொத்தமாக அனிமேஷன் படங்களாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புஸ் இன் பூட்ஸ் என்று சொல்லப்படும் சண்டை போடக்கூடிய கதாப்பாத்திரம் மட்டும் இருக்கும் படம் தனியாக 2011 ல் அனிமேஷன் படமாக வெளிவந்தது. இந்த படமே தனி ஒரு உலகத்தில் நடப்பதால் பார்க்க ஒரு வித்தியாசமான கதைக்களம் உள்ள அனிமேஷன் படங்களாக இந்த படங்கள் இருக்கும். ட்ரீம்வொர்க்ஸ் ஸ்டுடியோவுக்கு ஒரு அருமையான வெற்றி திரைப்பட வரிசையாக இந்த படங்கள் இருக்கிறது
ஃபேரி டெல் எனப்படும் தேவதை கதைகள் கதாப்பாத்திரங்களும் மனித இனமும் இணைந்து வாழும் இந்த யுனிவெர்ஸ்ஸில் எல்லோராலும் தனித்து விடப்பட்ட ஒரு அரக்க மனிதன் இந்த ஷ்ரேக். இங்கே இளவரசன் பாரூக் இந்த ஷ்ரேக்கை பயன்படுத்தி அடைக்கப்பட்ட இளவரசி ஃபியோனாவை விடுவித்து அவளை திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்கிறார், ஆனால் எப்படி ஷ்ரேக்-ஃபியோனா சந்திப்பு காதலாக மாறுகிறது என்பதை ரெகுலர் ரொமான்டிக் காமெடி ஸ்டைலில் சொல்லும் ஒரு படம்தான் இந்த ஷ்ரேக். சின்ன சின்ன ஸீன்களில் கூட ப்யூடி அண்ட் தி பீஸ்ட் , மாட்ரிக்ஸ் , சிண்ட்ரெல்லா போன்ற நிறைய படங்களை ஸீன் பை ஸீனாக கலாய்த்து இருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக