Wednesday, August 2, 2023

CINEMATIC WORLD - 082 - PUSS IN BOOTS - THE LAST WISH - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION 2024 - 000116]

 

 

PUSS IN BOOTS _ THE LAST WISH - இந்த படம் ட்ரீம் வொர்க்ஸ் நிறுவனத்துக்கு ஒரு சிறப்பான கம் பேக் படம் என்றே சொல்லலாம். இந்த படம் ஹாலிவுட் அனிமேஷன் நகைச்சுவை திரைப்படங்களான SHREK 1, 2, 3, 4 மற்றும் PUSS IN BOOTS படங்களுக்கு சீக்வல் ஆகிய வந்துள்ளது. இந்த படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் ஒரு மரண மாஸ் திரைப்படம். போன படங்கள் போல மொத்த சி ஜி ஐ காட்சிகள் என்று இல்லாமல் ஒரு உன்னிப்பான அனிமேஷன் டெக்னோலஜி இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் இந்த படம் ஒரு ஸ்பெஷலான திரைப்படமாக இருக்கிறது. காட்சிகள் , கதை, திரைக்கதை, வசனம் என்று எல்லா வகையிலும் இந்த படம் மரண மாஸ். முன்னதாக வெளிவந்த அனைத்து படங்களையும் ஒரு முறை பார்த்துவிட்டு இந்த படத்தை பாருங்கள். கதையை டிஸ்கஸ் பண்ண விரும்பவில்லை. நீங்களே பாருங்கள் இந்த படம் பெரிய சர்ப்ரைஸ் ஆகிய உங்களுக்கு இருக்கும். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்த திரைப்படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். ஸ்டுடியோவுக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தின் கிரியேட்டிவ் ஐடியாஸ் மற்றும் விஷுவல்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுக்கு முந்தைய படங்கள் பார்த்தால் உங்களுக்கு புரியும் இந்த SHREK படத்தின் மற்ற படங்கள் பெரும்பாலும் MODERN DAY COMMENTARY போலத்தான் இருக்கும் ஆனால் இந்த படம். மொத்தமாக புதுசாகவே யோசனை பண்ணி , புதுசாகவே கதையை உருவாக்கி , ஒரு புது மாடல் SPIDERMAN - INTO THE SPIDER VERSE - அனிமேஷன் ஸ்டைல் பயன்படுத்தி ரொம்ப ரொம்ப பிரமாதமாக எடுத்து இருக்கிறார்கள். இந்த படம் ஃபேமிலியுடன் இணைந்து பார்க்க வேண்டிய ஒரு சிறப்பான அனிமேஷன் படம். இந்த வலைப்பூவுக்கு காட்சிகளை கொடுத்தமைகளுக்கு நன்றிகள். கண்டிப்பாக அடுத்தடுத்த போஸ்ட்களை படித்து இந்த வலைப்பூவை பகிர்ந்துகொள்ளவும். இப்படிக்கு #NICETAMILBLOG முன்னேற்ற கழகம் !!

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...