ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

CINEMATIC WORLD - 095 - டெக்னோலஜி சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் - சிறப்பு கண்ணோட்டம் !



UPGRADE -  இனிவரும் காலத்தில் உலகத்தில் டெக்னோலஜியின் தாக்கம் மிகவும் அதிகமாக மாறிவிட்டது என்றால் ஆட்டோ மாட்டிக் ஆக ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் வகையறாக்களின் தேவைகளும் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை.  எதிர்காலத்தில் நடக்கும் கதையாக இருக்கும் இந்த படத்தில் நமது கதாநாயகன் எளிமையான விஷயங்கள் மட்டும் போதும் என்று டெக்னாலஜி வாழ்க்கை பிடிக்காமல் தனியாக ஒரு குடும்பமாக வாழும் வாழ்க்கையை வாழ்கிறார். இருந்தாலும் ஒரு நாளில் இந்த அன்பான வாழ்க்கை கெட்டவர்களால் மாறுகிறது. கொள்ளையடிக்க முயற்சி பண்ணும் சில கொடியவர்கள் பயணத்துக்கு ஆசைப்பட்டு அவர்களுடைய உடல்களில் பொறுத்தப்பட்ட மெட்டல் ஆயுதங்களால் கணவர் கிரே டிரேஸ்ஸை பயங்கரமாக அடித்து  இனிமேல் நடக்கவும் நகரவும் முடியாத அளவுக்கு கடினமாக தாக்கிவிட்டு மனைவி ஆஷா டிரேஸ்ஸை கொன்றுவிடுகிறார்கள். இப்போது சக்கர நாற்காலியில் மட்டுமே உயிரோடு இருக்க முடியும் என்ற நிலையில் வருத்தத்தில் நமது கதாநாயகன் தற்கொலை வரை சென்றுவிட முயற்சிக்கவே அவனுடைய நண்பனால் காப்பாற்றப்பட்டு ஒரு கம்ப்யூட்டர் சிப் பொறுத்தப்பட்டு மறுபடியும் பழைய வாழ்கக்கையை பெறுகிறார். இப்போது டுவிஸ்ட் என்னவென்றால் அந்த கம்ப்யூட்டர் சிப் அவரோடு பேச ஆரம்பிக்கறது. அவருடைய குடும்பத்தை கொன்றது ஒரு திட்டமிட்ட நெட்வொர்க்கின் சதி என்று அவருக்கு புரியவைத்து அவரை அந்த பெரிய நெட்வொர்க்கில் இருப்பவர்களோடு சண்டைபோட வைக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. சாதாரணமாக இருக்கும் மனிதனான கிரே இந்த கம்ப்யூட்டர் சிப் பொறுத்தப்பட்ட பின்னால் அசாதரணமாக இயந்திர மனிதராக மாறி சண்டைபோடுவது சிம்பிள் ஆன பிளாட் டுவிஸ்ட் ஆக இருந்தாலும் நன்றாகவே இந்த படத்துக்கு வேலை செய்துள்ளது. சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களை கம்பேர் செய்தால் மைனாரிட்டி ரிப்போர்ட் படம் அளவுக்கு டீடெயில் இல்லை என்றாலும் நேரடியான கதையும் மேம்பட்ட சண்டை காட்சிகளும் சைபர்பங்க் ஸ்டைல்களும் கொண்ட ஒரு சிம்பிள் ஆன படம்தான் இந்த அப்கிரேடு. கதாநாயகனாக நடிக்கும் லோகன் மார்ஷல் கிரீன் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தின் ஹீரோவுக்காக இந்த படத்தை பார்க்கலாம். 



 
BLOODSHOT - இதுக்கு முன்னால் சொல்லப்பட்ட அப்கிரேடு படத்தின் கதையின் ஒரு பெரிய பட்ஜெட் வெர்ஷன் என்று இந்த படத்தை சொல்ல முடியாது. நிறைய சூப்பர் ஹீரோ படங்களை பார்த்துவிட்டு இன்னொரு டெக்அட்வான்ஸ் சூப்பர் ஹீரோ படம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதுதான் இந்த பிளட்ஷாட் . கதாநாயகன் காரிஸன் கண்களை விழிக்கும்போது நெடுநாட்கள் கோமாவில் இருந்ததால் அவருடைய குடும்பம் கொல்லப்பட்ட நினைவுகள் மட்டும்தான் அவருக்குள் இருக்கிறது. அவரை பார்த்துக்கொள்பவர்கள் நானோபாட்ஸ் மூலமாக அவருக்கு நிறைய பவர்ஸ்களை கொடுத்து அவரை வலிமையானவராக மாற்றியுள்ளனர் ஆனால் பிரச்சனை என்னவென்றால் கதாநாயகனுக்கு நினைவில் இருக்கும் எல்லாமே பொய்யான மூளைக்குல் பதிவு பண்ணப்பட்ட காட்சிகள். ஒரு மோசமான கம்பெனி முதலாளி அவருடைய நினைவுகளை மாற்றி அவருடைய எதிரிகளை தீர்த்துக்கட்ட பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார். இந்த உண்மை தெரியும்பொது கதாநாயகன் எடுக்கும் முடிவுகள் என்னென்ன என்பதுதான் இந்த படத்தின் கதை. கதை நன்றாக இருந்தாலும் விஷுவல்ஸ் பக்காவாக இருந்தாலும் மற்ற சூப்பர் ஹீரோ படங்களை போல மறுமுறை பார்க்கும் அளவுக்கு கதை நன்றாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கலாம். மற்ற வகையில் குறை சொல்ல எதுவுமே இல்லை. பெரிய ப்ரொடக்ஷன் வேல்யூ இருப்பதால் கிளைமாக்ஸ் இன்னும் பெரிய லெவல்லில் இருந்திருக்கலாம். ஒரு சூப்பர் ஹீரோ படம் பார்க்க போகிறோம் என்று எதிரபார்த்து இந்த படம் பார்த்தால் உங்களின் போதுமான எதிர்பார்ப்புகளில் மிகவும் சரியாக ஐம்பது சதவீதத்தை கொடுக்கும் படம் இந்த படம்.
     


SECRET HEADQUARTERS - நிறைய டெக்னோ ஃபிக்ஷன் களை இன்ஸ்பிரேஷன் ஆக கொண்டு ஒரு சூப்பர் ஹீரோ ஃபேமிலி படம் பார்க்க வேண்டும் என்றால் பழைய ஸ்பை கிட்ஸ் படத்தை போன்று இன்னொரு படம் உங்களுக்காக இந்த படம். பள்ளிக்கூடம் செல்லும் பையனான சார்லிக்கு அவனுடைய அப்பா வேலை விஷயமாக வெளியே இருப்பதால் மனதுக்குள் வருத்தம் இருக்கிறது. இருந்தாலும் நண்பர்களுடன் எப்போதும் போல பொழுதுகள் செல்வதால் பெரிதாக சார்லி கண்டுகொள்வது இல்லை. ஆனால் அவனுடைய அப்பா ஜாக் ஒரு பெரிய டெக்னாலஜி சக்திகளை உடைய சூப்பர் ஹீரோ. இந்த சின்ன பையன்கள் தெரியாமல் அவருடைய அப்பா சக்திகளுக்காக பயன்படுத்தும் ஏலியன் டெக்னோலஜியை விளையாட்டாக பயன்படுத்தி இருப்பதால் வில்லன்களிடம் வசமாக மாட்டிக்கொள்கிறார்கள். இப்போது அப்பா அவருடைய பையனையும் நண்பர்களையும் எப்படி காப்பாற்றினார் என்பதுதான் இந்த படத்தின் கதை. ஓவன் வில்சன் மற்றும் மைக்கேல் பெனா பிரமாதமான நடிப்பை கொடுத்துள்ளதால் ஒரு நல்ல சிம்பிள் ஃபேமிலி படமாக உள்ளது. அதுக்குன்னு அவெஞ்சர்ஸ் அளவுக்கு எல்லாம் இந்த படத்தில் எதிர்பார்க்க வேண்டாம் இந்த படம் அந்த லெவல்க்கு எல்லாம் இருக்காது !! ஆனால் ANTMAN 3 அளவுக்கு சொதப்பல் CASE இல்லை . MICHEAL PENA இல்லாமல் அந்த படத்தை காப்பாத்த முடியாது !!  

கருத்துகள் இல்லை:

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #18

  இந்த காலத்து அரசியல்வாதிகள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள், பிரிந்து இருக்கும் சின்ன சின்ன கூட்டங்களை ஆட்சி செய்து அதிகாரத்தில் கொண...