Wednesday, July 31, 2024

MUSIC TALKS - HEY I LOVE YOU I LOVE YOU I LOVE YOU - ANDHI VEYIL MINJI VARUM POZHUTHU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 



ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது 

பசும்புல் பாய்கள் விரிக்கும் பனியில் பூக்கள் குளிக்கும்
இதயமே மதுவிலே நனையுதே
இதுதான் மாலை விருந்து மலரே நீயும் அருந்து
இரவிலே மயங்கலாம் நிலவிலே
காதோரம் மெல்ல கூறும் சேதி தேன் போலே பாயாதோ
நீராடும் வண்ணப் பூவும் நாளை பூ மஞ்சம் போடாதோ

துகிலோ மெல்ல விலகும் கரமோ தொட்டுப் பழகும்
சுகத்திலே கனவுகள் வளருதே 
முகிலோ வானில் மிதக்கும் மலையோ முத்தம் கொடுக்கும்
இயற்கையும் காதலால் மயங்குதே
தேனூறும் கன்னிப் பூவைச் சூடும் பூங்காத்தும் நான்தானே
போராடும் பள்ளிக்கூடம் தேடும் பூச்செண்டு நான்தானே


Sunday, July 28, 2024

GENERAL TALKS - போலியூஷனை மட்டும் எப்படியாவது எடுக்க வேண்டும்


ஒரு கட்டத்தில் ஒரு மாயாஜாலமான சக்தி உங்களுக்கு கிடைத்துவிட்டது‌. இந்த உலகத்தில் நீங்கள் விரும்பும் ஒரு மாற்றத்தை நீங்கள் உருவாக்கலாம் என்றால் நீங்கள் அறிவியல் மட்டும் தொழில்நுட்ப அடிப்படையில் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டியது விஷயம் பொல்யூஷன் எனப்படும் சுற்றுச்சூழல் மாறுபாட்டை அறவே நீக்குவது தான். பொல்யூஷன் மட்டும் நீக்கிவிட்டால் மரங்களுடைய எண்ணிக்கை அதிகமாகும் இந்த உலகத்தில் வெப்பமயமாதலால் உருவாகக்கூடிய பிரச்சனைகள் அனைத்துமே தவிர்க்கப்படும். கடல் வாழ் உயிரினங்களான கடற்பாசிகள் போன்ற விஷயங்கள்  பாதிக்கப்படும் இந்த உலகத்தில் இத்தகைய பாதிப்புகள் இல்லாமலே பண்ணி விடலாம் இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைப்பதால் இந்த உயிரினங்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படும்‌. கடல் மட்டம் உயர்ந்து கடலோடு ஒட்டி இருக்கும் நகரங்கள் கடலுக்குள் முழுகக்கூடிய அபாயங்கள் தவிர்க்கப்படும். இந்த உலகத்தில் மின்சாரத்துடைய தயாரிப்பும் மின் சாதனங்களுடைய பயன்படும் ஒரு விதமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். இத்தகைய அளவுக்கு தான் நிலக்கரி எரிக்கப்பட வேண்டும் இத்தகைய அளவுக்கு தான் ப்ரொடக்ஷன் பண்ண வேண்டும் என்று உலக அளவில் நிபந்தனைகள் உருவாக்கப்படும்‌. பொல்யூஷன் மட்டும் எடுத்து விட்டால் பிளாஸ்டிக் துகள்களுடைய கலப்பு உணவுகளில் இருக்காது. இப்படிப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் உணவுகளில் இல்லாமல் போவதால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் உருவாகும் ஆபத்து தடுக்கப்படும். பொருட்களின் மறுசுழற்சி மற்றும் பொருட்களின் மறு பயன்பாட்டை ஆதரிக்கும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கும். இந்த உலகத்தில் நிறைய மரங்கள் உருவாவதால் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய பூச்சிகள் பறவைகள் மற்றும் விலங்குகள் போன்ற அனைத்து உயிரினங்களும் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும். காடுகள் உடைய பராமரிப்புக்காக உலக அளவில் இரும்புகரம் கொண்ட ஒரு ஒரு கடினமான பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் இத்தகைய பாதுகாப்பு அமைப்பு காடுகள் மற்றும் காடுகள் சார்ந்த வளங்கள் சரியாக பயன்படுத்தப்பட்டு இந்த உலகத்துக்கு தேவையான போதுமான ஆக்சிஜன் எப்போதுமே கிடைக்குமாறு உறுதிப்படுத்தப்படும். இயற்கையாக மட்கும் குப்பைகளை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கலாச்சாரம் உருவாக்கப்படும். இயற்கையான மக்காத குப்பைகளை பயன்படுத்தக்கூடிய கலாச்சாரம் இந்த உலகத்தில் இருந்து அடியோடு நீக்கப்படும் இன்னுமே நிறைய விஷயங்கள் இந்த விஷயத்தில் இருக்கிறது. பொதுவாக பாசிட்டிவிட்டி என்பது பெரிய மாற்றங்களை எல்லாம் உருவாக்கி விடாது என்று சொல்வார்கள் இருந்தாலும் இன்றைய தேதிக்கு பாசிட்டிவிட்டி தான் மிகவும் சரியான மாற்றமாக இந்த உலகத்திற்கு தேவைப்படுகிறது. இந்த கருத்துக்களின் அடிப்படையில் இந்த உலகத்துக்கு தேவையான பாசிட்டிவிட்டி என்பது பொல்யூஷன் என்ற விஷயம் அறவே நீக்கப்படுவது தான். உங்கள் ஒரு மாயாஜாலமான மாற்றத்தை இந்த உலகத்தில் உருவாக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக எத்தகைய ஒரு நிரந்தர மாற்றத்தை உருவாக்கி விடுங்கள் என்பதுதான் இந்த வலைப்பூவின் சஜஷன். இந்த வலைப்பூவுக்கு பேராதரவு கொடுத்து இந்த வலைப்பூவை வெற்றியடைய செய்யுமாறு கம்பெனி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

GENERAL TALKS - யாருடைய மனதையும் கஷ்டப்படுத்தாமல் வாழமுடியுமா ?


இந்தக் கருத்தையும் இந்த வலை பூவில் நிறைய முறை நான் பதிவு செய்து விட்டேன். ஒரு விவசாய நிலத்தின் பயன்பாட்டுக்காக விளைச்சல் நன்மைக்காக பூச்சிக்கொல்லி மருந்துகள் அந்த விவசாய நிலத்தின் மீது தெளிக்கப்படுகின்றன. அடிப்படையில் இத்தகைய விஷயங்கள் பாவங்களை பார்க்காமல் பண்ணக்கூடிய செயல்கள் என்று சொல்லலாம். இது போன்ற ஒரு கட்டாயம் உங்களுடைய வாழ்க்கையிலும் நடப்பதற்கு அதிக நாட்கள் தேவைப்படாது. நம்முடைய வாழ்க்கையில் மனதை கஷ்டப்படுத்தக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் செய்யாமல் நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாக வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்தால் அந்த நம்பிக்கையை இப்போதே விட்டுவிடுங்கள். அடிப்படையில் சரியான உதவி சரியான நேரத்தில் உங்களுக்கு கிடைத்தல் மட்டும்தான் வெற்றியை அடைய முடியும் இத்தகைய சரியான உதவியை நீங்கள் கிடைக்க எப்போதுமே நேர்மையான வழியைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் வாழ்க்கையில் இல்லை. சரியான உதவியை நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் ஒரு சில நேரங்களில் பெரிய பாவங்களை நீங்கள் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும். கொஞ்சம் யோசித்து பார்த்துவிட்டு இதுக்கே பாவங்களை நீங்கள் செய்து விடுங்கள் ஏனென்றால் இந்த உலகத்துடைய போட்டி எந்த வகையிலும் உங்களுக்கு கடைசி வரையில் கருணை காட்டப் போவது கிடையாது. மற்றவர்கள் செய்யும் பாவங்கள் அதிகமாக கரையும்போது உங்களுடைய பாவங்களும் கொஞ்சமாக கரைந்து விடத் தான் போகிறது இப்படித்தான் வாழ்க்கை வேலை செய்கிறது. மனிதர்களுடைய மனதில் எப்போது வேண்டுமென்றாலும் மாற்றங்கள் உருவாகலாம். இன்றைக்கு தேதிக்கு உங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை நீங்கள் நம்பலாம் ஆனால் இவர்களுடைய மனது மட்டும் மாறிவிட்டால் உங்களை கண்டிப்பாக குத்தி போட்டு விடுவார்கள். நிறைய இடங்களில் பணம் போன்ற உயிரற்ற விஷயங்கள் தான் நமக்கு தேவையான ஆதரவை கொடுக்கிறது உயிருள்ள விஷயங்கள் நமக்கு ஆதரவை கொடுக்க மறுக்கிறது. இந்த உலகத்தில் பணம் இல்லாமல் வாழக்கூடிய மக்களுடைய கடினமான வாழ்க்கையை நீங்கள் கவனமாக உற்று நோக்கிப் பாருங்கள் இந்த வாழ்க்கையில் இருந்து நீங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள் எத்தகைய விஷயங்கள் தான் உங்களுடைய வெற்றியில் உங்களுக்கு தேவைப்பட வேண்டிய அறிவாக இருக்க கூடியது. இத்தகைய விஷயங்கள்தான் உண்மையான உலகத்தில் ஆதரவு என்றால் என்ன என்று உங்களுக்கு புரிந்து கொள்ள உதவியாக இருக்கக்கூடிய விஷயங்கள். இதனை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இன்னொருவருடைய கஷ்டத்தை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் இன்னொருவருடைய சந்தோஷத்தை நீங்கள் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. 

GENERAL TALKS - நம்பிக்கை வைக்க தெரியாமல் இருக்க வேண்டாம்


எல்லோருக்கும் எப்போதுமே ஒரு யோசனை இருக்கும் ! போதுமான மனிதர்கள் கொடுக்கும் ஆதரவு கிடைத்து விடாதா என்ன ? இப்படிப்பட்ட மனிதர்களுடைய ஆதரவு நமக்கு கிடைத்து இருந்தால் நாமும் வெற்றி அடைந்து விடுவோமே ? இப்படி ஒரு வித்தியாசமான ஒரு எண்ணம் நம்முடைய மனதுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. உண்மை என்னவென்றால் நாம் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களுக்கும் நிறைய மனிதர்களுடைய ஆதரவு இருக்க வேண்டும் என்று நம்பிக் கொண்டே இருக்கிறோம். குறிப்பாக ஒரு சில விஷயங்களில் மற்றவர்களுடைய ஆதரவு நமக்குத் தேவைதான் நான் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தாலுமே பெரும்பாலான விஷயங்களில் மற்ற தன்னுடைய ஆதரவு நமக்குத் தேவையில்லை நாம்தான் மற்றவருடைய ஆதரவு கிடைக்க வேண்டும் என்று காத்திருந்து காத்திருந்து காணாமல் நொந்து போகிறோம். ஒரு சில மனிதர்கள் கடைசிவரையில் தனக்கான விஷயங்களை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருப்பார்களே தவிர உங்களுக்கான ஆதரவை உங்களுக்கு கொடுக்கவே மாட்டார்கள். ஒரு சில மனிதர்களுக்கு ஆதரவு கொடுப்பது என்றால் என்னவென்றே தெரியாது. இந்த விஷயத்தாலே அவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் வந்து விட்டால் பதறியடித்துக்கொண்டு ஓடி விடுவார்கள். இந்த வகையில் தான் ஒரு முக்கியமான மனித கூட்டத்தை நாம் கவனிக்கிறோம் இவர்கள் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலானவர்கள் இவர்களை நாம் கண்டிஷனல் மனிதர்கள் என்கிறோம். பெரிய மனிதர்கள் தங்களுக்கு என்று கொஞ்சம் நிபந்தனைகளை வைத்திருப்பார்கள் அவர்களுடைய நிபந்தனைகளை பூர்த்தி செய்து அவர்களுக்காக கொஞ்சம் செல்களை செய்து கொடுத்தால் நம்முடைய நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து நமக்கான அந்த அளவுக்கான செயல்களை அவர்கள் செய்து கொடுப்பார்கள். பணத்தால் பரிவர்த்தனை பண்ணுவது போல இவர்கள் செயலால் பரிவர்த்தனையை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எந்த வகையான கொடுக்காமல் இருப்போம் மக்களுக்கு இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் உங்களுக்கு தோன்றும். இதனால்தான் இவர்களோடு பழகும் போது நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் அட்வைஸ் என்னவென்றால் இவர்களோடு பழகும் பழக்கங்களை தற்காலிகமாக வைத்துக் கொள்ளுங்கள் நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டாம். இவர்களை எப்போதுமே சார்ந்து இருக்க வேண்டாம் உங்களுடைய தேவைகளுக்கு எப்போதும் நீங்கள் உங்களையே சார்ந்து இருங்கள் அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டாம் குறிப்பாக இவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். இவர்கள் மேலே அதிகமான நம்பிக்கையும் வைத்து விடாதீர்கள். நம்பிக்கை என்பது ஒரு அளவுக்கு தான் இவர்களுடன் இருக்க வேண்டும். உங்களுக்கு நிறைய வருடங்களாக இவர்களை தெரியும் என்பதால் இவர்களை நிரந்தரமாக நம்ப வேண்டாம். இவர்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் சரி கண்டிப்பாக மாற மாட்டார்கள். உங்களுக்கு காரணம் இல்லாமல் எந்த விதமான கட்டாயமும் இல்லாமல் உங்களுக்கான ஆதரவை கொடுக்கக்கூடிய மனிதர்கள் மிகவும் அதிசயமாக தான் கிடைப்பார்கள் அப்படிப்பட்ட மனிதர்கள் உங்களுக்கு கிடைத்தால் அவர்களை கெட்டியாக உங்களோடு பிடித்துக் கொள்ளுங்கள். இவ்வாறான மனிதர்கள் உங்களுக்கு கிடைப்பது புதையல் கிடைப்பதற்கு சமமாகும். உங்களுடைய வாழ்க்கைக்கு இத்தகைய மனிதர்கள் நன்றாகவே பிரயோஜனமாக இருப்பார்கள். இந்த விஷயங்கள் கவனமாகவே நீங்கள் முடிவெடுங்கள். இந்த வலைப்பூவுக்கு நிறைய ஆதரவை கொடுத்து இந்த வலைப்பூவின் சந்தாதாரராக மாறி இந்த வலைப்பூவை பொருளாதார அளவில் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைத்த வலைப்பூவாக மாற்ற வேண்டும் என்று கம்பெனி சார்பாக பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

GENERAL TALKS - பேராசை மனதை உருக்கி கரைக்கும் ஒரு பாவ செயல்


பேராசைக்கு எப்போதுமே குறைவான நேரத்தில் மனதை மொத்தமாக கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் ஒரு அமானுஷ்யமான சக்தி இருக்கிறது. பேராசை மட்டும் நம்முடைய மனதுக்குள் வந்து விட்டால்  நம்முடைய புத்தியை மொத்தமாக இருளுக்குள் தள்ளிவிட்டு நம்முடைய அறிவின் கூர்மையை கடைசிவரையில் பயன்படுத்த முடியாத அளவுக்கு  மழுங்க செய்து விடும். இந்த பேராசை நிறைந்த நாட்களில் நீங்கள் எடுக்கக்கூடிய அனைத்து முடிவுகளும் 100% சரியானது என்று உங்களுடைய மனதுக்கு தோன்றுகிறது. இந்த அதிசயத்தக்க நிகழ்வு உங்களுடைய மனதை கட்டுப்பாடுக்குள் எடுத்துக் கொள்ள விடாதீர்கள். இங்கே நூறு சதவீதம் தவறான ஒரு முடிவை கூட பேராசை நூறு சதவீதம் சரியான ஒரு முடிவு என்றுதான் உங்களுடைய மனதை வற்புறுத்த பார்க்கும். இப்படியெல்லாம் பேராசையில் மாட்டிக் கொண்டு மனிதனுடைய ஆணவத்தின் உச்சகட்டத்திற்கு சென்று ஆடிக் கொண்டு இருந்தால் உங்களுக்கு கஷ்டம் என்று வரும்போது யாருமே உங்களை உதவ மாட்டார்கள். உங்களை பேராசை எனும் மொத்தமான ஒரு உருவமாகவே பார்க்க முடியுமே தவிர உங்களுக்குள் இருக்கும் அனைத்து நல்ல விஷயங்களும் கடலுக்குள் கரைந்து போன நாட்டு சர்க்கரை போல கரைந்து விடும்‌. அஸ்காவை குறிப்பிட விரும்பவில்லை அது உடல் நலத்துக்கு கெடுதல் நிறைந்தது. அதனால்தான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் உங்களுடைய பேராசை மிகவும் அதிகமாகி உங்களுடைய மனதை அது ஆட்கொண்டால் உங்களால் அந்த பேராசை இருக்கக்கூடிய விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஒரு சோகமும் உங்களுடைய மனதுக்குள் இருக்கும். என்னிடம் கோடி கணக்கில் பணம் இல்லையே என்று நிறைய பேர் வருத்தப்படுவார்கள்.  உண்மை என்னவென்றால் அவர்கள் கண்டிப்பாக மனதையும் உடலையும் பயன்படுத்தி தொடர்ந்து ஐந்து வருடம் கஷ்டப்பட்டால் ஒரு கோடி ரூபாய் மொத்தமாக சம்பாதிக்க முடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் அவர்களால் 10 முதல் 15 லட்சம் வரையிலான தொகையை அவர்கள் சம்பாதிக்க முடியும். நிறைய பேரால் இந்த அளவுக்கு பணத்தை கூட சம்பாதிக்க முடியாது. இருந்தாலும் தங்கள் பேராசை பட்ட விஷயம் தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற சோகத்தை தங்களுடைய மனதுக்குள் வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு குறைந்தது சுமாராக ஒரு நூறு ரூபாயாவது சம்பாதிக்காமல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். இந்த பேராசை ஒரு விதமான பாவம் என்று சொல்லப்படுகிறது. நமக்கு நாமே செய்து கொள்ளக் கூடிய ஒரு வகையான பாவம் தான் இந்த பேராசை. இது கண்டிப்பாக சயின்ஸ் அடிப்படையில் ஆராய்ச்சி பண்ணவேண்டிய ஒரு டாபிக் என்றே சொல்லலாம். இந்த விஷயங்களைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்களை இந்த வலையில் பேசலாம். இந்த பதிவை இவ்வாறே நான் முடித்துக் கொள்கிறேன். பேராசை பெருநஷ்டம் என்பதை விட பேராசை லாபமற்ற வாழ்க்கை என்று சொல்வது தான் மிகவும் சரியான செயல். மற்றபடி இந்த வலைப்பூவுக்கு நீங்கள் பேராதரவு கொடுத்து இந்த வலைப்பூவை நீங்கள் இணையதள உலகில் வெற்றியடைய செய்யுமாறு பணிவுடன் கம்பெனி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது‌. 

GENERAL TALKS - இந்த தற்காலிகமான செயலை செய்யும் கட்டாயம் இருக்கிறதே


இந்த உலகத்தில் கொடிய விஷயங்கள் இருப்பதை தடுக்க முடியாது என்றுதான் இந்த உலகம் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. இதனை மிகவும் நுட்பமாக கவனித்தால் கொடியவர்கள் எப்போதுமே தங்களுக்குரிய தேவைப்படக்கூடிய விஷயங்களை முழுமையாக செய்து கொண்டே தான் இருப்பார்கள்.  இந்தக் கொடியவர்களுக்கு இருக்கக்கூடிய சக்திகளை வைத்து உங்களை ஏமாற்றலாம் உங்களுக்கு துரோகம் செய்யலாம் உங்களை நம்பவைத்து முதுகில் குத்தலாம் உங்களை அச்சுறுத்தலாம் உங்களை பயமுறுத்தலாம் உங்களை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். இவர்களுக்கு இப்படி எல்லாம் சக்திகள் எப்படி கிடைக்கிறது ஒரே ஒரு காரணம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இப்படி சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் இருப்பதால்தான் எந்த வகையிலும் கெட்டவர்களை தடுக்கவே முடியாது என்று ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலை நம்முடைய சமுதாயத்தில் உருவாகிறது. கெட்டவர்களுடைய வாழ்க்கை எப்போதுமே நல்லவர்களுக்கு அதிகமான பாதிப்பை தான் உருவாக்குகிறது. இங்கே நல்லவர்கள் என்றால் நல்ல விஷயங்களை செய்தால் மட்டும்தான் நல்லவர்கள் என்று அர்த்தம் அல்ல கெட்ட விஷயங்களை முடிந்த வரையில் தவிர்ப்பவர்கள் கூட நல்லவர்கள் தான். இன்றைக்கு தேதி உங்களுக்கு இருக்கும் கஷ்டத்துக்கு கெட்டவர்களோடு சேர்ந்து அவர்களை ஆதரவு கொடுத்து அவர்களோடு சேர்ந்து வெற்றியை அடைந்து விடலாம் என்று உங்களுக்கு தோன்றலாம். எப்போதுமே கெட்டவர்களோடு தற்காலிகமாக பழகுவது தான் சரியான முறையாக இருக்கும். உங்களால் தவிர்க்கவே முடியாமல் கெட்டவர்களோடு இணைந்து வேலை பார்க்க வேண்டும் என்ற ஒரு நிலை வந்தால் தான் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும் முறையை நீங்கள் பயன்படுத்த வேண்டும். மற்றபடி இந்த கொடியவர்களுக்கு நிரந்தரமான ஆதரவு கொடுப்பது உங்களுக்கு எப்படி ஆனாலும் சரி ஒரு பெரிய பிரச்சினையை தான் கொண்டு வந்து சேர்க்கும். இது ஒரு வகையான ஒரு வழி பாதை ஆகும் இந்த பாதையில் நீங்கள் ஒரு கட்டத்துக்கு சென்று விட்டால் உங்களுடைய பழைய இடத்தை நீங்கள் கண்டிப்பாக மறந்தே ஆக வேண்டும். காரணம் என்னவென்றால் உங்களால் மறுபடியும் பின் வாங்க முடியாது. கொடிய விஷயங்கள் நிறைய இருக்கும் இந்த உலகத்தில் கெட்டவர்களோடு பழகி வெற்றியடைய செய்வது என்ற கான்செப்ட் ரொம்ப குழப்பமாக இருந்தாலும் சரியான முறையில் இந்த விஷயங்களுடைய நுட்பத்தை நீங்கள் கற்றுக் கொண்டால் உங்களுக்கு இந்த விஷயங்கள் கண்டிப்பாக உங்களுடைய போராட்டத்தில் உங்களுடைய வெற்றியை உறுதிப்படுத்த உதவியானதாக இருக்கும். இப்படி சட்டம் ஒழுங்கு சரியில்லாத நிலையில் கொடியோரை பகைத்து வாழ்வது மிகவும் கடினமானது ! கண்டிப்பாக இந்த பிரச்சனை மாறவேண்டும் !

GENERAL TALKS - பணத்தின் அடிப்படையில் வணிகம் கற்றல்


ஒரு சிறிய குறிப்பேட்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளை மட்டும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் அந்த ஒரு நாளில் நீங்கள் செலவு செய்த பணம் என்ன ? அந்த ஒரு நாள் நீங்கள் சம்பாதித்த பணம் என்ன ? அந்த ஒரு நாளில் நீங்கள் செய்த செயல்கள் என்னென்ன ? இந்த மூன்று விஷயங்களை நீங்கள் எழுதினாலே வியாபாரத்தின் அனைத்து கவனிக்க வேண்டிய விஷயங்களையும் நீங்கள் கற்றுக் கொண்டது போன்றதாகும். பொதுவாக வியாபாரத்தில் நிரந்தரமான வெற்றி அல்லது நிரந்தரமான தோல்வி என்று எதுவுமே கிடையாது ஆனால் ஒரு வியாபாரத்தை தொடங்கும் போது அந்த வியாபாரத்தில் முதல் மூன்று வருடங்கள் என்பது மிகவும் முக்கியமானது ! இந்த விஷயத்தை நான் ஏற்கனவே வேறொரு வலைப்பூவில் பதிவிட்டு இருக்கிறேன். ஒரு வியாபாரம் என்பது முதல் மூன்று வருடத்தில் தான் அந்த முதல் மூன்று வருடத்தில் கிடைக்கும் அனுபவத்தில் தான் மிகவும் அதிகமான விஷயங்களை அந்த வியாபாரத்தை செய்பவர்களுக்கு கற்றுக் கொடுக்கும். தொடர்ந்து மூன்று வருடமாக ஒரு வியாபாரத்தின் அனுபவத்தை நீங்கள் பெற்றுக் கொண்டால் இத்தகைய அனுபவம் பின்னாட்களில் நீங்கள் தொடங்கும் எந்த வகையான வியாபரங்களுக்கும் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இவைகள் அனைத்துமே சொல்லப்போனால் ஒரு அனுமானம் சார்ந்த கணக்கு தான். இந்த காலத்தில் எல்லாம் படிப்பு விஷயங்களை சுட்டித்தனமாக இருந்து தெளிவாக கற்றுக்கொண்டே முன்னேற வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் அவர்களுடைய சக்திகளை நிச்சயமாக ஒரு வருடத்திற்குள்ளேயே மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த வேகம் வியாபாரத்தில் அனுபவத்தால் கற்றுக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தை விரிவுபடுத்தும் தொழில் முறை வியாபாரிகளுக்கு கண்டிப்பாக சோகமான விஷயமாகத்தான் இருக்கிறது. தொழில்முறை வியாபாரிகளை விட புதிதாக முளைக்கும் இவர்கள் மிகவும் அதிகமாக சம்பாதித்து உள்ளே இறங்கியவுடன் உடனடியான வெற்றி என்று அடைந்து விடுகிறார்கள். இவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. எப்போதுமே வியாபாரத்தில் அனுபவம் மிக்க நபர்கள் ஒரு விஷயத்தில் பெரிய அளவிலான தோல்வி வரப்போகிறது என்றால் மிகவும் சாமர்த்தியமாக அந்த விஷயத்தை விட்டு வெளியே வந்து விடுவார்கள். நேற்று பொழிந்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான்களாக இருக்கும் இந்த இளமை திறன்மிக்க புதிய வியாபாரிகள் இத்தகைய மாபெரும் தோல்விகளை நிறைய நேரங்களில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் வரும். வியாபார உலகத்தின் இந்த புதிய தலைமுறைக்கும் அனுபவஸ்தர்களுக்கும் நடந்து கொண்டிருக்கும் இந்த போட்டியானது மிகவும் சுவாரசியமானது உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த போட்டியை இணையதளத்தின் மூலமாக கொஞ்சம் கவனித்து பாருங்களேன். நான் எதனால் இந்த போட்டி சுவாரசியமானது என்று சொல்கிறேனென்று உங்களுக்கு இந்த போட்டியில் கலந்துகொண்டு கவனிக்கும்போது தான் புரியும். 

GENERAL TALKS - இடமும் பொருளும் ஏவலும் வாழ்க்கையும்


இந்த உலகத்தில் எந்த ஒரு செயலை செய்யும் போதும் இடம் பொருள் ஏவல் என்ற இந்த மூன்று விஷயங்கள் மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் இந்த உலகத்தின் மிகச்சிறந்த மருத்துவராக இருக்கலாம் உங்களுக்கென்று ஒரு மருத்துவமனை கிடைத்தால்தான் உங்களுடைய வேலைகளை நீங்கள் பார்க்க முடியும் அதேபோல நீங்களும் இந்த உலகத்தின் மிகப்பெரிய பொறியாளராக இருக்கலாம் உங்களுக்கென்று சரியான வேலை அமைந்தால்தான் உங்களுடைய பொறியியல் துறையில் இருக்கும் திறமையை உங்களால் காட்ட முடியும். இந்த உலகத்தில் எப்போது நாம் மரணத்தை அடைகிறோமோ அப்போதே இந்த உலகத்தில் நாம் சேர்த்து வைத்த அனைத்து விஷயங்களும் இழக்கிறோம். நாம் நிறைய விஷயங்களை சேர்த்து வைக்கிறோம் ஆனால் சேர்த்த விஷயங்களை எப்படி பயன்படுத்துவது என்பது கடைசி வரைக்கும் நமக்கு தெரியாமலே போகிறது. ஒரு மனிதன் அவனுக்கு பணத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய புதிய வீட்டுக்கு மின்சாதன பொருட்களை வாங்குகிறான் ஆனால் மின்சார கனெக்சனை வாங்கவில்லை. இன்னொரு மனிதன் அவனுக்கு கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு அவனுடைய புதிய வீட்டுக்கு மின்சார கனெக்சனை வாங்கிக் கொண்டு விடுகிறான் ஆனால் மின்சார பயன்பாட்டால் இயங்கும் மின்சாதன பொருட்களை எதையுமே அவன் வாங்குவதே இல்லை. இது போன்ற ஒரு அறியாமையால் மூழ்கியிருக்கும் மக்கள் இருக்கும் ஒரு உலகத்திலே தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் உங்களுக்கான இடம் என்னவென்று தெரிந்து அந்த இடத்தில் நீங்கள் செல்ல வேண்டும் உங்களுக்கான பொருள் என்னவென்று தெரிந்து அந்த பொருட்களை நீங்கள் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் உங்களுக்கான ஏவல் முறை என்பதை தெரிந்து கொண்டு மிகவும் சரியாக பேசவும் பழகவும் வேண்டும். இன்றைக்கு தேதிக்கு நீங்கள் இடம் பொருள் எவ்வளவு கற்றுக் கொள்ள நினைத்தாலும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் கற்றுக் கொள்ள உங்களுக்கு பல ஆண்டுகள் தேவைப்படலாம். இருந்தாலும் இந்த வலைப்பூவில் இருந்து உங்களுக்கு கொடுக்கும் பதிவு எனவென்றால் இன்றைக்கு தேதிக்கு நீங்கள் இடம் பொருள் ஏவல் என்றால் என்ன என்று நீங்கள் உங்களுடைய சொந்த முயற்சிகளில் கவனமாக கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஆபத்தான கட்டங்களில் யார் உதவியாக இல்லை என்றாலும் சரி நீங்கள் கற்றுக் கொண்ட இந்த இடம் பொருள் ஏவல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு கண்டிப்பாக உதவி செய்யும். உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கு தேவையான கருவிகளை கடைசிவரையிலும் கொடுக்காமல் உங்களை ஏமாற்றத் தான் மக்கள் நினைப்பார்கள் ஆனால் இந்த இடம் பொருள் ஏவல் கான்ஸெப்ட்டை நீங்கள் கற்றுக் கொண்டாலும் உங்களுக்கு தேவையான விஷயம் என்னவாக இருந்தாலும் அந்த விஷயத்தை அடைவதற்கான கருவிகளை உங்களுக்கு இலவசமாகவே இந்த விஷயங்கள் கொடுத்து விடுகிறது. இன்னும் எதனால் காத்திருக்க வேண்டும் கவனமாக செயல்படுங்கள் இந்த போராட்டத்தை யாராலும் ஜெயிக்க முடியாது என்றாலும் நீங்கள் ஜெயித்து இந்த உலகத்தின் வரலாற்றை எழுதும் கௌரவத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த உலகத்தின் வரலாற்றை எழுதும் கௌரவத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். மேற்கொண்டு வேறு என்ன சொல்வது ? இந்த வலைப்பூவுக்கு பெரும் ஆதரவை கொடுத்து இந்த வலை பூவை உலக அளவில் மிகவும் சம்பாதிக்க கூடிய வாய்ப்பு ஆக மாற்ற தங்களால் முடியும் என்பதால் பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

GENERAL TALKS - சரியாக தென்பட்டாலும் இது தவறானது !


இந்த உலகத்தில் இன்றைய காலத்து போட்டியானது என்ன செய்துள்ளது ? தங்களுடைய வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் மேலும் அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி போராடுவதில்தான் மக்களுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறது. இந்த கலாச்சாரம் மேலோட்டமாக பார்ப்பதற்கு சரியான ஒரு கலாச்சாரம் போல இருந்தாலும் அடிப்படையில் தவறான கலாச்சாரம். பொதுவாக மிகவும் சிறந்த அனைத்து விஷயங்களை விடவும் மேலான ஒரு நிர்வாகம் அனைத்து மக்களுக்கும் தேவைப்படுகிறது. இந்த நிர்வாகத்தின் அடிப்படையில் ரேஷன் கொடுக்கப்பட்டுதான் இந்த உலகத்தின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். எல்லோருக்கும் என்ன வேண்டுமோ அது அவர்களுக்கு கிடைக்க வேண்டும். குறிப்பாக சட்டம் ஒழுங்கு மிகவும் சரியாக இருக்க வேண்டும். ஒரு பணக்காரன் என்பதால் அவனுடைய செய்யும் தவறுகள் துச்சமாக கருதி மன்னிக்கப்படக்கூடாது. ஒரு ஏழை என்பதால் அவர்கள் செய்யக்கூடிய தவறுகளுக்கு பரிதாபம் காட்டப்படக்கூடாது. அதே சமயம் தவறே செய்யாத ஒரு மனிதரை தவறு செய்தார் என்று போலியான குற்றங்களை சுமத்த அனுமதிக்க கூடாது. இந்த உலகம் நிறைய உயிர்களை உருவாக்கி அந்த உயிர்களுக்கு தேவையான சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுத்துள்ளது. இந்த மொத்த உயிர்களில் எந்தெந்த உயிர் தனக்கான பலத்தை அதிகரித்துக் கொண்டு இருக்கிறதோ அந்தந்த உயிர் மட்டும்தான் தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள இருக்கும் போராட்டத்தில் கடைசி வரையில் நின்று ஜெயித்துக் காட்டுகிறது. இதுதானே இந்த உலகத்தின் அடிப்படையான விதியாகும். உயிரோடு இருக்கும் எல்லா உயிர்களுக்கும் நடந்து கொண்டிருக்கும் இந்த மிகப்பெரிய யுத்தத்தில் எந்த விதமான நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் கிடையாது எந்தவிதமான நெறிகளையும் இந்த யுத்தம் கடைபிடிக்க வேண்டும் என்று அவசியப்படுத்துவது கிடையாது. நான் எப்போதுமே வாழ்க்கை எதனால் இப்படி இருக்கிறது என்று ஒரு கேள்வியை எனக்குள்ளே கேட்டுக் கொண்டே இருப்பேன் ஆனால் இந்த கேள்வி அர்த்தமற்றது.  இந்த உலகத்தில் நாளும் ஒரு மாற்றம் வந்து கொண்டே தான் இருக்கிறது நீங்கள் ஒருவேளை இந்த கேள்விக்கு பதிலை கண்டுபிடித்தாலும் இந்த கேள்விக்கான பதில் இன்னும் ஒரு வருடத்தில் மாறிவிடும். அப்படி என்றால் கடந்த வருடத்தில் இந்த கேள்விக்கான பதிலை நீங்கள் கண்டுபிடித்து இருந்தால் அந்த பதில் எந்த வருடத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு சுத்தமாக பொருந்தாததாக தான் இருக்கும். இப்படி எல்லாம் முட்டாள்தமான கேள்விகளை கேட்டுக்கொண்டு வாழ்க்கையை வீணாக்க வேண்டாம். இந்த உலகத்துடைய போராட்டத்தில் உங்களுக்கு எதிர்ப்பவர்களை அடித்து சாத்துங்கள். உங்களுக்கான இடத்தை உங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டே கடைசி வரையில் உங்களுக்கு இடத்துக்காக உங்களுடைய சந்தோஷத்துக்காக நீங்கள் போராடிக் கொண்டே இருங்கள். இதுதான் இன்றைய தேதிக்கு இந்த வலைப்பூ கருத்து ! 

GENERAL TALKS - வியாபாரம் என்பதே விதிமுறையற்ற போராட்டம்தான் !



பெரும்பாலான மக்களும் வியாபாரத்தில் இறங்கும் போது வியாபாரம் என்றால் என்னவென்றே தெரியாமல் இறங்குகிறார்கள். நீங்கள் ஒரு தூண்டிலுடன் குளத்துக்கு செல்கிறீர்கள் அந்த தூண்டிலை யாருடைய போட்டியும் இல்லாமல் தனி ஒரு மனிதனாக குளத்தில் விடுகிறீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையாக காத்திருக்கிறீர்கள் மீன் வந்து சிக்குகிறது அந்த மீனை இலாவகமாக கையில் எடுத்துக் கொள்கிறீர்கள். இதுதான் வியாபார உலகமா என்று கேட்டால் இது வியாபார உலகம் இல்லை. வியாபார உலகம் என்பது நேரடியான ஒரு போரை போன்றது இங்கு யார் வேண்டுமென்றாலும் யாரை வேண்டுமென்றாலும் கத்தியால் குத்தலாம். இந்த உலகத்தில் வியாபாரம் செய்பவர்கள் எடுப்பதுதான் முடிவு.  வியாபாரம் செய்பவர்கள் சொல்வதுதான் சட்டம். இந்த வியாபார உலகத்தில் இருக்கக்கூடிய போட்டியை யாருமே கவனிப்பதே இல்லை. இங்கே பணத்தை சம்பாதிப்பது மட்டுமல்ல அந்த பணத்தை பாதுகாக்க வைப்பது கூட நீங்கள் உயிரை பணயம் வைத்து போராடக் கூடிய ஒரு முயற்சி தான். குறிப்பாக வியாபார உலகத்தில் இருக்கக்கூடிய வேகமும் போராட்டமும் உங்களுடைய மனதையும் உடல் நலத்தையும் கண்டிப்பாக பாதிக்கக் கூடியது. விறுவிறுப்பான ஒரு வியாபாரம் ஆனது உங்களுடைய மனதுக்குள் பைட் ஆர் ஃபைளைட் ரெஸ்பான்ஸ் என்று சொல்லக்கூடிய ஒரு இரசாயன மாற்றம் உருவாக்கி உங்களை போராட வேண்டும் அல்லது பறந்தே செல்ல வேண்டும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இவ்வாறாக உங்களுடைய உடலுக்குள்ளே அதிகரிக்கும் கார்ட்டிசால் என்ற ரசாயன மாற்றம் உங்களுடைய உயிரைக் கொல்லும் இதய நோய்களையும் உயர்வான இரத்த அழுத்தத்தையும் உங்களுக்கு உருவாக்கலாம் இருந்தாலும் இதுதான் உங்களுடைய வியாபார உலகம். உங்களுடைய நண்பர்கள் என்று இங்கு யாருமே கிடையாது உங்களுடைய எதிரிகள் என்று இங்கே எல்லோருமே இருப்பார்கள். இதனால்தான் மிகவும் தெளிவாக சொல்கிறேன் வியாபாரம் என்பது ஒரு போர். இது எக்கனாமிக்ஸ் என்ற ஒரு மிகப்பெரிய உலகத்தின் ஆட்சியில் யார் யாரெல்லாம் பணத்தோடு இருக்கிறார்கள் என்று தேர்ந்தெடுக்க கூடிய ஒரு போர். எகனாமிக்ஸ்ஸின் உலகத்தில் நடக்கக்கூடிய இந்த போரை நீங்கள் நிஜமாகவே வெற்றி அடைய வேண்டும் என்றால் அதுவும் சாவதற்குள் வெற்றியை அடைய வேண்டும் என்றால் உங்களிடம் சிறப்பாக போர் திட்டம் இருக்க வேண்டும் அதனை சரியாகவும் நீங்கள் செய்து காட்ட வேண்டும். வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் எழுதும் புத்தகம் தான் வரலாறு. வியாபாரத்தில் ஜெயிப்பது என்பது ஸ்போர்ஸில் ஜெயிப்பதை விட பல லட்சம் மடங்கு கடினமானது. இப்போது எல்லாம் ஒரு கலாச்சாரம் தொடங்கிவிட்டது தங்களுக்கு பிடித்த நடிகர்கள் ஜெயித்துவிட்டால் தாங்களே ஜெயிப்பதாக நினைக்கிறார்கள். இது எப்படிப்பட்டது என்றால் தங்களுக்கு எதிராக உள்ள தங்களை விட பெரிய போட்டி கம்பெனி ஜெயித்து விட்டால் அது நாமே ஜெயித்ததற்கு சமம் என்று நினைத்துக் கொள்வது போல தான். இந்த மாதிரியான முட்டாள்தனமான தடைகளை விட்டுவிட்டு வியாபாரம் என்றால் என்னவென்று அடிப்படையில் இருந்து கற்றுக்கொண்டு கொஞ்சமாவது முன்னேற பாருங்கள். மூளையற்ற மனிதனாக இருந்து விடாதீர்கள் என்பதுதான் இன்றைய நாளில் வலைப்பூவில் நம்முடைய கருத்து. இந்த வலைப்பூவின் பதிவுகளுக்கு பேராதரவு கொடுத்து வெற்றி முடிவு செய்யுமாறு தங்களிடம் கம்பெனி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

GENERAL TALKS - வெகுளித்தனமான மனதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளல் !


இன்றைய தேதிக்கு மக்கள் வாட்ஸ் அப்பில் நடக்கும் ஒரு சின்ன டெக்ஸ்டை கூட அப்படியே கண்களை மூடிக்கொண்டு நம்பும் கலாச்சாரத்துக்கு மாறி விட்டார்கள். இந்த விஷயம் யாருக்கு சாதகமாக இருக்கிறதோ இல்லையோ ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. இன்றைக்கு தேதிக்கு சூரிய ஒளியில் இருந்து சக்தியை எடுக்கக்கூடிய  சோலார் பேனல்களாக இருக்கட்டும் அல்லது வானை தொடும் உயரத்துக்கு நடப்படக்கூடிய அந்த மின்சார உற்பத்தி காற்றாலைகளாக இருக்கட்டும் இவைகளை தயாரிப்பதால் உருவாகக்கூடிய கார்பன்-டை-ஆக்சைடு அளவு இவைகளால் பயன்படுத்தப்பட்டு குறையப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவை விட அதிகம் என்ற உண்மை மக்களில் எத்தனை பேருக்கு தெரியும் இருந்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பான மின்சார தயாரிப்பு சாதனங்களை இப்படி கஷ்டப்பட்டு தயாரித்து கார்பன் டையாக்சைடு-ன் லெவலை வளிமண்டலத்தில் குறைக்கிறேன் என்று கம்பெனிகள் சொல்லும் எல்லா விஷயங்களும் பொய்தான் அல்லவா ?. ஜல்லிக்கட்டு பிரச்சினை போது இயற்கையாக வளரக்கூடிய மாடுகளின் வளங்களை அழித்து செயற்கையாக வளர்க்கக்கூடிய மாடுகள் கொடுக்கும் பாலை மட்டும்தான் உலகமே பயன்படுத்த வேண்டும் என்று மக்களை பெரிய அளவில் அச்சுறுத்தக்கூடிய அளவுக்கு துணிவுடன் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் எப்படி இத்தகைய காரியங்களில்எ எந்த தைரியத்தில் இறங்குகிறது  ? இவை அனைத்துமே கொள்ளையடித்து அவர்கள் சேர்த்த பணம் கொடுக்கும் தைரியம் தான். ஒரு நாளின் மூன்று வேலைக்கும் தங்கத் தட்டிலும் தங்க கரண்டிலும் சாப்பிடக்கூடிய இவர்களுக்கு சராசரி மக்களுடைய வாழ்க்கையில் படம் கஷ்டங்கள் எப்படித்தான் புரிய போகும் ? தாங்கள் பயன்படுத்திய பின்னால் பொருட்களை குப்பையில் தூக்கிப் போடுவது போல இவர்களால் எந்த பயன்பாடும் இல்லை என்று ஏழை மக்களை இவர்கள் அலட்சியமாக பார்க்கக்கூடிய அந்த பார்வை எத்தனை பேருக்கு பரிச்சயமானது ? இந்த அலட்சியமான பார்வையை யார் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் ? பணம் இருப்பதற்காக இப்படி சராசரி மக்களுடைய வாழ்க்கையை அடித்துத்தான் சம்பாதிக்க வேண்டுமா ? இவர்களை நோய்களை உருவாக்குவார்களாம் இவர்களே அந்த நோய்களுக்கான மருந்துகளையும் விற்பனை செய்வார்களாம். இவர்கள் பண்ணும் எல்லா விஷயங்களும் பட்டப்பகலில் மக்களுடைய கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொள்ளையடிக்கும் பட்டப்பகல் கொள்ளையாக தான் இருக்கிறது. சட்டத்தில் எலி செல்லும் அளவுக்கு சிறிய சிறிய ஓட்டைகளை கண்டுபிடித்து கொண்டு இவர்கள் மிகவும் தெனாவெட்டாக இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். ஒருநாள் இல்லையென்றால் ஒரு நாள் இந்த கம்பெனிகளுடைய ஆட்டம் நிச்சயமாக முடிவுக்கு வரும் என்றுதான் நம்புகிறேன். ஒரு விருப்ப பதிவு என்று நீங்கள் நினைத்தால் நிச்சயமாக இது ஒரு விருப்ப பதிவுதான். இந்த சமுதாயத்தில் இவர்களுடைய கட்டுப்பாட்டை அறவே நீக்க வேண்டும் இல்லையென்றால் இவர்கள் இந்த சமுதாயத்தை தங்களுக்காக வேலை பார்க்கும் அடிமை கூட்டமாக மாற்றவும் தயங்க மாட்டார்கள் !

GENERAL TALKS - பிரச்சனைகளை சரிசெய்யும்போது தவறுகள் நடைபெறுவது சகஜம் !


ஒரு மனிதன் அவனுடைய தனிப்பட்ட மனநிலையில் மாற்றத்தை கொண்டு வருவதால் நிச்சயமாக யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு சாதனையை அடைய முடியும். இருந்தாலும் இப்படி மாற்றத்தை கொண்டு வருவது என்ன சாதாரண விஷயமா ? இதனால்தான் நம்முடைய தனிப்பட்ட மனநிலையில் மாற்றத்தை கொண்டு வருவதால் மற்றவர்களுடைய தனிப்பட்ட மனநிலையிலும் எப்படி மாற்றத்தை கொண்டு வருவது என்பதையும் மற்றவர்களை எப்படி வேலை வாங்குவது என்பதையும் சேர்த்து வைத்து நாம் கற்றுக் கொள்கிறோம் ! இது நிச்சயமாக நன்மை பயக்கும் விஷயம்தானே. இருந்தாலும் இந்த விஷயத்தில் ஒரு முக்கியமான பிரச்சனை இருக்கிறது. நம்முடைய தனிப்பட்ட மனதில் மாற்றங்களை கொண்டு வந்து ஒருவேளை நாம் எதிர்பார்ப்பது போல எல்லாவற்றையும் அடைந்து விட்டாலும் நம்முடைய தனிப்பட்ட மனநிலை எப்போதும் அதனுடைய பழைய தோல்விகரமான நிலைக்கு மாறத்தான் பார்க்கும். இத்தகைய மனநிலை மாற்றங்களால் கிடைக்கும் வெற்றி தற்காலிகமானது மேலும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் ஆகும்.   இதனை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நம்முடைய தனிப்பட்ட மன நிலையில் மாற்றங்களை கொண்டு வருவதே ஒரு மிகப்பெரிய கடினமான காரியம் என்று ஒரு பக்கம் இருந்தாலும் அப்படி கொண்டு வந்தாலும் அத்தகைய மாற்றங்களை வாழ்க்கையில் நிலைக்க வைப்பது என்பத்து கடினத்திலும் கடினமான விஷயம். இருந்தாலும் இந்த உயிரும் இந்த வாழ்க்கையும் ஒரே ஒருமுறை தானே கிடைக்கும். மிஞ்சிப் போனாலும் 80 ஆண்டுகள் வாழக்கூடிய இந்த வாழ்க்கையில் இந்த விஷயத்தை நடைமுறைப்படுத்தி பார்ப்பதில் தவறு என்ன இருக்கிறது ? ஒரு பிரச்சனை நம்முடைய வாழ்க்கையில் வந்து விட்டால் அதனை சரி செய்யக்கூடிய முயற்சிகள் எடுக்கும்போது சின்ன தவறுகள் முதல் பெரிய தவறுகள் வரைக்கும் அனைத்து வகை தவறுகளும் நடைபெறுவது சகஜம். இருந்தாலும் நாம் பிரச்சனைகளை சரி செய்ய எடுத்துக் கொண்டு இருக்கும் இந்த நடவடிக்கை கொஞ்சம் தவறாகத்தான் முடியும் என்றாலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது இன்னும் மோசமான விஷயம் தானே ? பெரும்பாலான நேரங்களில் மனிதன் தன்னுடைய கெபாசிட்டி என்னவென்பதையே கொஞ்ச நேரத்துக்கு மறந்து விடுகிறான் . இந்த உலகத்தில் ஆரோக்கியமாக ஒவ்வொரு வருடத்தை கடப்பதும் மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயமாகும். ஒரு நாளில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய மனிதன் மேற்கொண்டு ஒரு வருடம் தன்னுடைய உயிரை அதிகம் முயற்சி எடுத்து ஒரு வழியாக 365 நாட்கள் உயிரை உள்ளங்கையில் பிடித்து காப்பாற்றிக் கொண்டு அடுத்த வருடத்தை தொடுவதால் தான் இந்த பிறந்தநாள் விழா கொண்டாடும் கலாச்சாரமே நம்முடைய மனித வாழ்க்கையில் இருக்கிறது. இதனால் இந்த பதிவின் மூலமாக சொல்லப்படுவது என்னவென்றால் நம்மால் முடிந்த செயல்களை எப்போதுமே துணிந்து செய்ய வேண்டும்,  பின் நாட்களில் தவறாக போகும் என்றாலும் செயல்கள் எதுவுமே செய்யாமல் இருப்பது அதனை விடவும் தவறான விஷயமாகும். இதுதான் இன்றைய நாளில் பதிவு. இந்த வலைப்பூவை அதிகமான வியூக்களை கொடுத்து பேராதரவுடன் வெற்றி அடைய செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

GENERAL TALKS - விதி எப்போதும் நேர்மையற்ற ஆட்களை சப்போர்ட் பண்ணுகிறதா ?


இன்றைக்கு தேதி வரைக்கும் விதியுடைய மிகப்பெரிய ஆசை என்னவென்றால் நான் இந்த போராட்டத்தில் தோற்று போய் பின்வாங்கியே ஆக வேண்டும் என்பதுதான்.இருந்தாலுமே விதி உடைய இந்த மிகப்பெரிய பேராசை கண்டிப்பாக நிறைவேறாது. இதுவரைக்கும் பட்ட கஷ்டங்களுக்கான கோபம் கண்டிப்பாக என்னுள்ளே இருக்கிறது இந்த கஷ்டங்களுக்கான கோபம் தான் எனக்கு தேவையான வெற்றியை ஈட்டி தரும் என்று நம்புகிறேன். இந்த உலகத்தில் கொஞ்சம் பேருக்கு வெற்றியடைவதற்கான தகுதியே இருக்காது ஆனால் அவர்கள் எல்லோருமே வெற்றி கிடைப்பதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் விதியின் நண்பர்களாக இருப்பார்கள். இவ்வாறு வெற்றியடைபவர்களை வைத்துதான் கஷ்டப்படுபவர்களை இன்னும் அதிகமாக கஷ்டப்பட வைக்கிறது இந்த பொல்லாத விதியானது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ?. இத்தகைய மோசமான செயல்களை நாம் எப்படியேனும் தடுத்தாகவே வேண்டும். இன்றைக்கு தேதிக்கு கார்ப்பரேட் கம்பெனிகளையே எடுத்துக் கொள்ளுங்களேன். மக்களுடைய சராசரி பிரச்சனைகளை இன்னும் அதிகப்படுத்த கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களுடைய லாப நோக்கத்துக்காக மட்டும் யோசித்து பணத்துக்கு மட்டுமே ஆசைப்பட்டு இதுவரைக்கும் குறைவான பணத்துக்கே கஷ்டப்படும் மக்களை இன்னும் பணத்துக்கு கஷ்டப்படும் மக்களாக மாற்றி அவர்களுடைய கஷ்டங்களில் இவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். இது ஒரு வகை கலாச்சாரம் என்றால் இதே மாதிரியான கலாச்சாரத்தை தான் எல்லோருமே ஃபாலோ பண்ண நினைக்கிறார்கள். இந்த வகையில் இன்றைய கூட ஒரு செய்தியை கேள்விப்பட்டேன். ஒரு முக்கியமான பாடப்பிரிவிலிருந்து அம்பேத்கர் பண்ணிய நல்ல விஷயங்கள், கடந்த காலத்தில் நடந்த ஜாதி கொடுமைகள் மேலும் அவைகளில் இருந்து மக்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்ற வரலாறு குறிப்புகள் , எப்படி மக்களுக்குள் ஒற்றுமையை கொண்டு வருதற்காக பெரிய மனிதர்கள் போராடினார்கள், இந்தியாவில் இருக்கும் நிறைய மொழிகள் உடைய கலாச்சாரங்கள், மதங்களுக்குள்ளே நிலவுகின்ற ஒற்றுமை, அனைத்து மக்களையும் சமாதானமாக பாவிக்கும் நம்முடைய நாட்டின் இறையாண்மை கொள்கை, என்று நிறைய விஷயங்களை எடுத்து விட்டு சமஸ்கிருத சோகங்களையும் (மன்னிக்கவும் சுலோகங்களையும்) இல்லாத சரஸ்வதி நதியையும் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், திராவிடர்கள் தான் வந்தேறிகள் என்றும் ஆரியர்கள் தான் ஆட்சியில் காலாகாலமாக இருந்தவர்கள் என்றும் குழந்தைகளுக்கு பொய்யாக சொல்லிக் கொடுக்கும் நோக்கத்தோடு பாடப்புத்தகங்களில் கூட மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான கேவலமான வேலைகள் பண்ணும் ஆட்களுக்கு ஆதரவாக விதி இறங்குவதால்தான் விதியை யாராலும் அவ்வளவாக ஜெயிக்க முடியவில்லை. இந்த விஷயங்கள் அனைத்துக்கும் பழி வாங்கியே ஆக வேண்டும். இந்த உலகத்தின் அனைத்து குற்றங்களும் தடுக்கப்பட வேண்டும் இதுதான் என்னுடைய ஆசை. 

Friday, July 26, 2024

GENERAL TALKS - ADI LATCHAVATHIYE ENNAI ASATHURA RADHIYE RATCHASIYO DHEVATHAIYO RENDUM SERNDHA PENNO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 
லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 
இராட்சஸியோ தேவதையோ இரண்டும் சேர்ந்த பெண்ணோ 
அடை மழையோ அனல் வெயிலோ ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஓடுறீயே தொட்டவுடன் ஓடுறீயே
தொட்டாச்சிணுங்கி பெண்தானோ தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி !
அடி லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 
லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 

பூவரச இலையிலே பீப்பீ செஞ்சு ஊதினோம்
பள்ளிக்கூட பாடம் மறந்து பட்டாம்பூச்சி தேடினோம்
தண்ணிப்பாம்பு வரப்பில் வர தலை தெறிக்க ஓடினோம்
பனங்காயின் வண்டியில் பசு மாட்டு தொழுவத்தை 
சுற்றி வந்து பம்பாய்க்கு போனதாக சொல்லினோம் 
அடடா அந்நாள் வசந்தம் அதுதானா வசந்தம் 
மீண்டும் அந்த காலம் வந்து மழலையாக மாற்றுமா

அடி லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 
லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 

காவேரி நதியிலே தூண்டில்கள் போட்டதும்
கண்ணே உன் தூண்டில் முள்ளில் குட்டி தவளை விழுந்ததும் 
கை கொட்டி கேலி செய்த ஞாபகங்கள் மறக்குமா

கட்டவண்டி மையினால் கட்ட பொம்மன் மீசையை 
கண்ணே நீ வரைந்து விட்டு ராஜராஜன் என்றதும்
அடடா அந்நாள் வசந்தம் அதுதானா வசந்தம் 
காலம் கடந்து போன பின்னும் காதல் கடந்து போகுமா !


லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 
லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 
இராட்சஸியோ தேவதையோ இரண்டும் சேர்ந்த பெண்ணோ 
அடை மழையோ அனல் வெயிலோ ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஓடுறீயே தொட்டவுடன் ஓடுறீயே
தொட்டாச்சிணுங்கி பெண்தானோ தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி !
லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 
லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 

MUSIC TALKS - ADIKKADI MUDI KALAIVADHIL AVADHARITHAAI NEE ANUDHINAM ENNAI THOLAITHIDA VAZHI VAGUTHAAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




அடிக்கடி முடி கலைவதில் அபகரித்தாய்
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் 
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்

தனிமைகள் இன்று ரசிக்கிறேன் தரை இறங்கிட மறுக்கிறேன்
இலை நுனியினில் வசிக்கிறேன் முதன் முதலாய் தொலைகிறேன்
விரல் கோர்த்து கோர்த்து அட நடக்கையில் 
வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன் 
உடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன்
எடை தீர்ந்த போதும் அட கனக்கிறேன் 
மெல்ல மெலிகிறேன் கொஞ்சம் உறைகிறேன் ஏன்

அடிக்கடி முடி கலைவதில் அபகரித்தாய்
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் 
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்

தனி மரம் வசிப்பதுபோலே ஏனோ இன்று 
புது வித கலகங்கள் கூடும் வாழ்வில் இங்கு
கனவுகள் இன்று படிக்கிறேன் 
கடல் புறங்களில் திரிகிறேன் 
இமை விசிறியில் பறக்கிறேன் 
எதை எதையோ வியக்கிறேன்

காதல் வந்த பின்னால் தவித்திடும் பதட்டம் 
தோளில் சாய்ந்து கொண்டு
மெல்ல நினைப்பதை மறந்திட நான்

அடிக்கடி முடி கலைவதில் அபகரித்தாய்
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் 
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்

உன் புகைப்படம் கொடுக்கின்ற மனம்
பிடிக்க உன் அருகினில் வசித்திட மனம் துடிக்க
தூக்கம் எல்லாம் அட தூக்கம் கொள்ள !
வார்த்தை இல்லை என் போக்கை சொல்ல !
காதல் எல்லாம் நம்மை காதல் கொள்ள 
என்னை கண்டேன் நான் வெட்கம் கொள்ள 
ஏதோ சொல்லி என்னை கிண்டல் செய்வாய் 
யாரும் இன்றி அதை எனக்குள்ளே ரசிப்பேன் !

அடிக்கடி முடி கலைவதில் அபகரித்தாய்
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் 
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்

GENERAL TALKS - பிரபஞ்சத்தின் சக்தியாளரை கண்டிப்பாக பழிவாங்க வேண்டும் !


இங்கே எனக்கு என்ன கஷ்டமாக இருக்கிறது. இப்படி நான் கஷ்டப்பட காரணம் என்னவென்றால் ஒரு விடை தெரியாத வினாதான் ? எதுக்காக நான் சப்போர்ட் பண்ணுவார் என்று நினைக்கும் பிரபஞ்சத்தின் சக்தியாளர் என்னை இப்படி கேவலமாக நடத்தி தூக்கி எறிந்து நடத்த வேண்டும். நடப்பவை எல்லாமே மிகவும் தவறாக நடந்துகொண்டு இருக்கிறது. நம்பியவர்கள் எல்லோரும் என்னை தாக்குகிறார்கள். என்னுடைய வாழ்க்கை அவ்வளவுதான் என்று என்னை வெறுக்கிறார்கள். இவ்வளவு கஷ்டங்களை கொடுத்தால் நான் செத்துப்போய் விடுவேன் என்று தெரிந்தும் என்னை இப்படி ஏமாற்றுகிறார்கள். நம்பிக்கை கொடுத்து நம்ப செய்து பின்னாட்களில் துரு பிடித்த இரும்பு கத்தியால் முதுகில் குத்துகிறார்கள் என்றால் கண்டிப்பாக நான் கோபப்பட்டு இவர்களை தீர்த்துக்கட்டியே ஆகவேண்டும் ! கோபப்படாமல் பொறுமையோடு மன்னிப்பது என்பது மிகவும் முட்டாள்தனமான செயல்பாடு ஆகும். இத்தனை கஷ்டங்களையும் நான் பொறுத்துக்கொண்டு இருந்தது எதனால் என்று பிரபஞ்ச சக்தியாக இருக்கும் காலத்துக்கு புரியவில்லையென்று எனக்கு தோன்றுகிறது. நான் இவ்வளவு பொறுமையாக இருக்க காரணம் என்றாவது ஒருநாள் வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கையில்தான் ஆனால் காலம் கடந்து வயது முதிர்ந்த நாட்கள் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணவில்லை. எல்லோருமே முக்கியமானவர்களாக இருந்தால் மட்டும்தான் இந்த உலகத்தின் கொடூரமான தாக்குதல்களில் இருந்து உயிரையாவது உள்ளங்கையில் பிடித்துக்கொண்டு தப்பிக்க முடியும் என்று தெரிந்துகொண்டு வேலையை பார்த்துக்கொண்டு சக்தியற்ற மக்கள் இருக்கிறார்கள் எனும்போது நான் மட்டுமே மாற்றங்களை உருவாக்குவார் என்று நம்பிக்கொண்டு இருந்தால் அதுவே பெரிய முட்டாள்தனம்தான். இதனை விடவும் கடினமான சூழ்நிலைகளை நான் சந்தித்து இருக்கிறேன். ஆனால் மனதுக்கு கஷ்டமாக இருப்பது அப்போது அந்த காலத்தில் என்னுடைய உயிரை காப்பாற்ற எனக்கு இருந்த சக்தியும் பணவசதியும் இப்போது இல்லை என்பதுதான். இது ஒருவிதமான நம்பிக்கை துரோக சதியாக இருக்கிறது. எதிர்காலத்தில் என்னுடைய சக்திகள் பிரபஞ்சத்தின் சக்தியாளரை விடவும் அதிகமாகப்போகிறது என்பதும் அதனால்தான் என்னால் வெற்றிகளை அடையமுடியாமல் காலம் என்னை தடுக்கிறது என்பதும்தான் என்னுடைய கணிப்பு. நடந்துகொண்டு இருக்கும் சம்பவங்களை நன்றாக ஆராய்ந்த பின்னால்தான் இத்தகைய கணிப்பை என்னால் கணிக்க முடிகிறது. இந்த பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு தீர்வானது நேருக்கு நேராக சண்டையிட்டு வலியை கொடுத்து தோற்கடித்து பழிவாங்குவதுதான் என்பதால் இனிமேல் கவனமாக இருக்க வேண்டும்‌. தொலைந்துபோன என்னுடைய கௌரவத்தையும் மரியாதையையும் நான்தான் மீட்டமைக்க வேண்டும். 

GENERAL TALKS - சந்தாதாரராக மாறுமாறு கம்பெனி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது !





நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் நாட்களை நகர்த்துவதற்கு தேவையான சக்தி என்னிடம் தேய்ந்து கொண்டே இருக்கின்றது. பெரும்பாலான நேரங்களில் என்னுடைய மனதுக்கு தோன்றுவது என்னவென்றால் இப்படியே வாழ்க்கை சென்றுக்கொண்டு இருந்தால் என்னுடைய கனவு தனியார் நிறுவனத்தை எப்போதுமே உருவாக்க முடியாது என்பதுதான். நிச்சயமாக நான் நினைத்தவாறு கனவு நிறுவனத்தை உருவாக்கும் பட்சத்தில் என்னால் மிகப்பெரிய சாதனைகளை செய்ய முடியும். இருந்தாலும் விதியின் கணிப்பு என்னுடைய நேரடியான மோதலுக்கு நேர் எதிராக உள்ளது. விதி தன்னுடைய கவசங்களை நம்பி என்னை சாகடிக்கும் நோக்கத்துடன் இப்போது பலமாக சண்டை போடுகிறது ஆனால் நான் வெறும் கையில் விதியை போல ஒரு பலம் பொருந்திய எதிரியோடு சண்டை போடுகிறேன். என்னுடைய வெற்றிக்கு தேவையான கருவிகளும் போதுமான ஆதரவும் எப்போதும் எனக்கு கிடைப்பதே இல்லை. பெரும்பாலான நேரங்களில் கனவு நிறுவனத்தை உருவாக்க முயற்சிக்கும் அனைவருக்கும் நான் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தையும் சக்தியையும் நம்பிக்கையையும் மக்களிடம் சேர்த்துக் கொண்டே வாருங்கள். சரியான நேரத்தில் பணத்தினால் கிடைக்கக்கூடிய சக்திகளும் தேவையான நம்பிக்கையால் கிடைக்கக்கூடிய ஆதரவும் உங்களுக்கு துணையாக இருக்கும். இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டில் ? ஒரு பணக்கார நிறுவனத்தின் தலைவர் ஒரு ஒரு சராசரி மக்களின் தலையிலும் அவருடைய தனிப்பட்ட செலவுகளை சேவைகளின் கட்டண அதிகரிப்பு என்ற வகையில் பொதுமக்கள் தலையில் இடியை இறக்குவது போல இறக்குகிறார் இப்படியான மின்னலைப் போல இறங்கும் அதிர்ச்சியை தாக்குபிடிக்கும் முன்னதாகவே இன்னும் பணத்தையும் கட்டணத்தையும் ஏற்றுக் கொண்டே இருக்கிறார். தனியார் நிறுவனங்கள் பைனான்ஸ் என்ற வகையில் பணத்தை கொடுத்து சராசரி மக்களுடைய வாழ்வாதாரத்தை எந்த அளவுக்கு பாதிக்கிறார்கள் என்பதை நான் சொல்லவா வேண்டும். மேலும் சட்டம் ஒழுங்கு குறைந்து கொண்டே போகும்போது  இப்படிப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சக்திகள் மிக மிக அதிகமாக  மாறும்போது உலக நாடுகளில் எல்லாம் அதிகாரத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ளே எடுத்துக் கொள்ள முயற்சிக்குமோ அதேபோலத்தான் இத்தகைய நிறுவனங்களும் அதிகாரத்தை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ள முயற்சிக்கும் என்பது ஆட்சிகளை செய்யும் இந்த உலகத்தின் அரசியலுக்கு தெரியாமலா போகிறது ? நடப்பது எதுவுமே நன்மைக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் மக்களே !  இந்த விஷயங்களை கவனிக்காமல் விட்டால் சராசரியாக மனிதர்களுக்கு தேவைப்படக்கூடிய காய்கறிகள் தானியங்கள் போன்ற உணவு வகைகளையும் கூட இவர்கள் விலை உயர்த்தி விடுவார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் கைகட்டி நிற்பதை பார்க்கும் போது தான் மனதுக்கு வருத்தமாக உள்ளது. இதுதான் இந்த வலைப்பூவின் இன்றைய கருத்து இந்த வலைப்பூவுக்கு சந்தாதாரராக மாறுவதன் மூலமாக இந்த வலைப்பூவை பேராதரவு கொடுத்து நிறைய சம்பாதிக்க வைக்குமாறு கம்பெனி சார்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

GENERAL TALKS - போதுமான விஷயங்கள் நம்மிடம் இருக்க வேண்டும் !


நிறைய நேரங்களில் போதுமான பணம் மட்டும் நம்முடைய வாழ்க்கையில் கிடைத்துவிட்டால் நம்மால் ஒரு முக்கியமான சாதனையை செய்ய முடிய வேண்டும். அத்தகைய முக்கியமான சாதனை என்னவென்றால் நம்முடைய உடலையும் நம்முடைய மனதையும் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டு உடலும் மனதும் மிகவும் சரியாக நம்மோடு சேர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். இதையே சேர்ந்து செயல்படும் கலை என்று சொல்வார்கள் ! இன்றைக்கு தேதிக்கு நிறைய பேர் வியாபார உலகத்தில் இருக்கிறார்கள் ஆனால் நிறைய பேரால் அவர்களுடைய வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை அவர்களுக்காக செலவு செய்ய முடியவில்லை. இதனால்தான் சொல்கிறேன் இத்தகைய செயல்முறையை அமைப்பது மிகவும் சுலபமானது அல்ல. காரணம் என்னவென்றால் வியாபாரத்திற்காக நிறைய பணத்தை செலவு செய்து அதைக் கொண்டு மேற்கொண்டு அதிகமாக வரவை எடுத்து பணத்துடைய கொள்ளளவை அதிகரித்தாலும் நம்முடைய உடல்நிலை அத்தகைய பணத்தை சம்பாதிப்பதற்குள் கெட்டுவிடுகிறது. நம்முடைய உடம்பும் நம்முடைய மனதும் கண்டிப்பாக சரியான நிலையில் இருக்க வேண்டும் அப்படி சரியான நிலையில் இருக்கவில்லை என்றால் நம்மால் எந்த விஷயத்தையும் செய்ய முடியாது.  இது எப்படிப்பட்டது என்றால் நம்மை நாமே மலிவாக எண்ணிக் கொண்டு விடுவோம். ஒரு எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டும் என்றால் நிறைய கடன் வாங்கிய ஒரு மனிதர் அந்த கடனை தினசரி பட்டியாக கட்டும் போது கடன் நசலை திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் அவரைப் போல வருத்தப்பட ஒருவரை நீங்கள் பார்க்கவே முடியாது. ஒரு ஒருமுறை கடலுக்கான வட்டியை கட்டும் போதும் அவர் அவரை மிகவும் தாழ்வாக நினைத்துக் கொண்டிருக்கிறார். கடனைக் கொடுத்தவர் அவரைவிட உயர்ந்தவராக மாறுகிறார் இதுவும் ஒரு வகையான அடிமைத்தனம் தான். இதனால் நான் சொல்லவரும் விஷயம் என்னவென்றால் நம்முடைய உடலும் மனதும் சரியாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு யாரெல்லாம் எந்த வகையான கடன் பட்டவர்களும் இருக்கக் கூடாது. உங்களால் 100 பக்கத்துக்கு உள்ள ஒரு நாட்குறிப்பை எழுத வேண்டும் என்றால் அந்த நாட்குறிப்பை மொத்தமாக எழுதி முடிப்பதற்கு உங்களுக்கு மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் தேவைப்படலாம். இந்த வகையில் நீங்கள் செய்யக்கூடிய வேலை உங்களுடைய உடல் நலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது உங்களுடைய உடல் நலம் நன்றாக இருந்தால் நீங்கள் இந்த வேலையை செய்வீர்கள் உங்களுடைய நல்லவன் உடல் நலம் நன்றாக இல்லை .என்றால் உங்களால் இந்த வேலையை செய்ய முடியாது. இருந்தாலும் கடல்கள் என்பது உங்களுடைய உடல் நலத்தை மட்டும் சார்ந்த விஷயம் அல்ல கடன்களை அடைப்பதற்கு நீங்கள் நிறையவே கஷ்டப்பட வேண்டும். உடல் நலம் நன்றாக இருந்தால் மட்டும் கண்களை அடைப்பதை ஒரு செயலை போல உங்களால் செய்து விட முடியாது. இதனால் இந்த வலைப்பூவில் இருந்து மக்களுக்கு கொடுக்கப்படும் ஒரு பொதுவான அட்வைஸ் என்னவென்றால் உங்களுடைய உடலையும் உங்களுடைய மனதையும் சரியான நிலையில் வைத்திருங்கள் தவறான நிலையில் வைத்திருக்க வேண்டாம் தவறான நிலையில் வைத்திருந்தால் உங்களை நீங்களே கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக் கொள்ளும் பரிதாபகரமான நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இவ்வாறு உடைக்கப்பட்டு உங்கள் மனது உடைந்து போனால் உடல் சோர்வு அடைந்தால் உங்களை அந்த நிலையில் இருந்து உங்களுடைய ஆரோக்கியமான நிலையை மறுபடியும் மீட்டமைப்பது கடினமானது. நீங்கள் நோயாளியை போல ஒரு வாழ்க்கை வாழ வேண்டாம் அதனால் இப்போதே முன்னெச்சரிக்கையாக இருங்கள்.  உங்களுடைய நலத்தின் மேல் அக்கறை இல்லாமல் இருந்து பின்னாட்களில் வலிகள் மட்டுமே நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழும் கட்டாயத்துக்கு நீங்கள் தள்ளப்படக்கூடாது என்பதற்காக தான் இந்த வலைப்பூ பதிவை நான் போடுகிறேன். போதுமான விஷயங்கள் நம்மிடம் இல்லாமல் ஜெயிப்பது மிகவும் கடினமானது !



























CINEMA TALKS - SURAA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




இந்த படம் தளபதி விஜய் நடித்து வெளிவந்த ஒரு கமேர்ஷியல் மாஸ் திரைப்படம். சன் பிக்ச்சர்ஸ்ஸின் மேஜர் வெளியீடு என்றாலும் கதை களத்தில் அதிகமாக ஒர்க் பண்ணி இருக்க வேண்டிய ஒரு திரைப்படம் என்றே சொல்லலாம்.  இந்தப் படத்தில் கதை என்ற பெரிதாக எதுவும் இல்லை என்றாலும் பாடல் காட்சிகள் மேலும் விஜயின் சுவாரசியமான நடிப்பு திறன் இந்த படத்தைக் காப்பாற்றி உள்ளது. கடலோரத்தில் வாழும் மீனவர்களுடைய வாழ்க்கையில் வாழ்வியலை சொல்லும் இந்த திரைப்படமானது சீரியசான பிரச்சினைகள் ஒரு பக்கம் கொண்டு சென்று கொண்டிருக்கும்போது கமர்சியல் படங்களுக்கே ஏற்ற காமெடி ஆக்சன் ரொமான்ஸ் போன்ற விஷயங்களை நன்றாக அளவுக்கு அதிகமாக சர்க்கரையை போல கலந்துவிட்டது. மணிஷர்மா இசை அமைத்த தெலுங்கு திரைப்படத்தின் பயன்படுத்தப்பட்ட பாடல் காட்சிகளை மறுபடியும் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் படல் காட்சிகளில் மிகவும் சுவாரசியமான புதிய விஷயங்கள் என்று எதுவும் இல்லை ஆனால் காட்சி அமைப்பு என்ற வகையில் பாடல் காட்சிகளுக்கு நன்றாகவே காட்சி அமைப்பு கொடுத்துள்ளார்கள். நடிப்பு பிரமாதமாக இருக்கிறது இயக்கமும் பிரமாதமாக இருக்கிறது இருந்தாலும் கதையில் நன்றாக வேலை பார்த்திருக்க வேண்டும் குறிப்பாக இந்த படத்திற்கு சில வருடங்கள் முன்னால் வெளிவந்த அயன் திரைப்படத்தை பாருங்களேன் ! அயன் திரைப்படத்தை வந்ததுக்கு பின்னால் தமிழ் சினிமாவில் கதை எப்படி எழுத வேண்டும் என்று எழுத்துடைய முக்கியத்துவம் என்னவென்றும் நிறைய படங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். கதை சுவாரசியமாக இல்லை அதனால் திரைப்படம் சுவாரசியமாக இல்லை அதனால் திரைக்கதை சுவாரசியமாக இல்லை என்பது தான் இந்த படத்தின் டிசப்பன்மெண்டான ரிசப்ஷனுக்கு காரணம் என்று சொல்லலாம். வேட்டைக்காரன் போன்ற படங்களை பார்க்கும்போது அடுத்து என்ன நடக்கும் என்ற கமர்சியல் படங்களுக்கே உரிய சஸ்பென்ஸ் அந்த படத்தில் இருக்குமாறு கதையை நகர்த்தி இருப்பார்கள் ஆனால் சுறா படத்தில் அத்தகைய சஸ்பென்ஸ் இல்லாமல் போனதுக்கு காரணம் என்ன என்று இன்றுவரை புரியவில்லை.

CINEMA TALKS - VADAKKUPPATTI RAMASAMY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



வடக்குப்பட்டி ராமசாமி - கடவுள் மீது நம்பிக்கை இருக்கலாம் ஆனால் கடவுளை கண்மூடித்தனமாக நம்ப கூடாது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம். 1970களின் காலகட்டத்தில் ஒரு கிராமத்தில் கடவுளின் சக்திகளை அறிந்து கொண்ட ஒரு கடவுள் அருள் நிறைந்த இளைஞனாக வலம் வரும் ராமசாமி மக்களை நம்ப வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கடவுளின் பெயரால் பணத்தை சம்பாதித்துக் கொண்டே இருக்கிறார் உள்ளூர் தாசில்தாரால் மடக்கப்பட்ட ராமசாமி ஒரு கட்டத்தில் அரசாங்கத்தால் கோயில் மற்றும் கோயில் சார்ந்த நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்ற கட்டாயம் இருக்கும்போது எப்படி சிறப்பாக யோசித்து சின்ன சின்ன யாருமே எதிர்பாராத புத்திசாலித்தனம் நிறைந்த திட்டங்களை செய்து கொஞ்சம் கொஞ்சமாக அவரை நம்பிக் கொண்டிருக்கும் உள்ளூர் கிராமத்து மக்களுடைய மனதை மாற்றி கோயில் நிலங்களை அரசாங்கம் எடுத்துக் கொள்வதை தடுக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் சுருக்கமான கதைக்களமாக இருக்கிறது. சும்மா சொல்ல கூடாது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காமெடி காட்சிகள் வேறு லெவல். மேலும் கடந்த காலத்தின் கடந்த காலத்தின் கிராமத்து வாழ்க்கையையும் மக்களின் வாழ்வியலையும் மிகவும் கலகலப்பாக சொல்லி இருக்கும் இது போன்ற படங்கள் இனிமேல் வருவது கடினம். முண்டாசுப்பட்டி என்ற படத்துக்குப் பின்னால் இது போன்ற கிராமத்து படங்களை தமிழ் சினிமாவில் பார்க்கவே முடிவதில்லை என்று ஒரு ஆச்சரியம் இருக்கும்போது இப்போது இந்த படம் வெளிவந்து அந்த திரைப்படங்களின் புதுமை தன்மையை மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ஏற்றுள்ளது என்றே சொல்லலாம் படத்துடைய காட்சி அவர் அவருக்கு மிகவும் பிரமாதமாக உள்ளது இந்த படத்துக்கு நிறைய ப்ரொடக்ஷன் வேல்யூ கிடைத்திருப்பதால் இந்த படத்திலேயே கதையை மிகவும் தெளிவாக எடுத்துச் சொல்ல போதுமான பொருளாதார வசதிகள் இந்த படத்தில் அமைக்கப்பட்டு கொடுத்திருப்பது மிகவும் சிறப்பான விஷயம் என்று சொல்லலாம் மேலும் சப்போர்ட்டிங் கேரக்டராக வரக்கூடிய தாசில்தார் கதாபாத்திரம் கூல் சுரேஷ் மாப்பிள்ளை பாத்திரம் இவைகள் எல்லாம் இந்த படத்தின் ஹைலைட் காமெடிக்கு பஞ்சம் இல்லாத இந்த படத்தில் கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் பிரமாதமாக செய்து இருக்கலாம் ஆனால் இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் கிளைமாக்ஸ் போதுமான அளவுக்கு இருக்கிறது. மொத்தத்தில் வடக்குப்பட்டி ராமசாமி ஒரு கிராமத்தின் பின்னணியில் கலகலப்பான என்டர்டைன்மென்ட் காட்சிகள் நிறைந்த ஒரு காமெடி திரைப்படம் என்று கூட சொல்லலாம்


GENERAL TALKS - காலம் நேரம் அமையாததால் புரிந்துகொண்ட விஷயங்கள் !



ஒரு தனியார் நிறுவனத்தை உருவாக்குவதற்கான என்னுடைய முயற்சிகள் மற்றவர்களுடைய முயற்சிகளுக்கு சற்றும் குறைந்தது அல்ல. போதுமான பணத்துக்காக நான் நிறைய இடங்களில் முயற்சி செய்தாலும் அனைத்து இடங்களிலும் எனக்கு கிடைப்பது ஏமாற்றமே ! இந்த உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களும் ஸ்பேஸ் என்று அழைக்கப்படும் விழி டைம் என்று அழைக்கப்படும் காலம் மற்றும் என்விரான்மென்ட் என்று அழைக்கப்படும் சூழ்நிலையால்தான் கட்டுப்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட இந்த மனிதர்களுடைய வாழ்க்கையில் எப்படி இருள் நிறைந்த சூழ்நிலைகள் வருகிறது. இந்த இருள் ஒருமுறை மனிதனுடைய வாழ்க்கையில் வந்து விட்டால் இந்த இருளில் இருந்து மனிதன் வெளியே வருவதே மிகவும் கடினம். இருள் மனித வாழ்க்கையை பாதிக்க மட்டுமே உருவாகிறது. இந்த இருளினால் மனிதனுக்கு எந்த விதமான நன்மையும் கிடைப்பதில்லை. மாறாக மனிதன் தீமையின் பாதையில் தள்ளப்படுகிறான் மனிதன் அவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்கு தகுதியற்றவனாக அவனை நினைக்கிறான். மனிதன் அவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை இத்தகைய நினைப்பால் மட்டுமே கைவிடுகிறான். உண்மையை சொல்ல போனால் எந்த விதமான முயற்சியும் செய்யாத மனிதனுக்கு கூட ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கொஞ்சமாவது தகுதி இருக்கிறது. இருந்தாலும் ஒரு மனிதன் இந்த இருளில் மாட்டிக் கொண்டிருக்கும் போது மனிதன் அவனுடைய கௌரவத்தையும் மரியாதையும் இழந்து விடுகிறான். தன்னைத் தகுதியற்றவனாகவே நினைத்துக் கொண்டிருக்கிறான். இந்த இருள் மிகவும் சாதாரணமாக முடிந்துவிடப் போவதும் இல்லை இந்த இருள் மனிதர்களுக்குள்ளே கெட்ட எண்ணங்களை அதிகமாக விதைத்து கொண்டு வளர்த்துக் கொண்டே இருக்கிறது கெட்ட இனங்கள் வேலி முள்ளை போல மண்ணின் சத்துக்களையும் தண்ணீரையும் உறிஞ்சி மற்ற மரங்களை வளர விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறது. மனிதன் சிறப்பான உணவை நமக்கு உருவாக்கிக் கொடுக்கும் பூமியைப் போல வாழாமல் கசப்பான தண்ணீரை மட்டுமே கொடுக்கக்கூடிய கடல் நீரை போல வாழ்ந்து விட்டு அவனுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்கிறான். அடிப்படையில் வெறுப்பால் உருவான இந்த கடல் அவனுடைய வாழ்க்கையில் இருக்கும் மற்றவர்களுக்கும் இதே போன்ற வாழ்க்கை முறையை பயன்படுத்த வேண்டும் என்று கிளாஸ் எடுத்துவிட்டு தான் சென்று விடுகிறது. இப்படிப்பட்ட கெட்ட எண்ணங்கள் நிறைந்த இருளுக்குள் நான் நிறைய முறை மாட்டிக் கொண்டு உள்ளேன் ஆனால் ஒருவரும் முறையும் நான் கஷ்டப்பட்டு வெளியே வந்துள்ளேன். இந்த முறையும் நான் கஷ்டப்பட்டு வெளியே வந்து விடுவேன் என்று என்னை நானே நம்புகிறேன். இவ்வளவுதான் இப்போது என்னால் சொல்ல முடியும். இது இன்றைய நாளுக்கான என்னுடைய வலைப்பூ கருத்து பதிவு !

CINEMA TALKS - ELEMENTAL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !





இந்த படம் மற்ற படங்களை போல கதையே இல்லாமல் வெளிவரும் கலாச்சாரத்தில் இருந்து விலகி சிறப்பான கதைக்களம் கொண்டு வெளிவந்து இருப்பதால் இந்த படம் அனைத்து வகையான விமர்சனங்களிடம் தப்பி விடுகிறது. பிக்ஸார் நிறுவனத்திடம் இருந்து நிறைய நாட்கள் எதிர்பார்த்ததற்கு ஒரு தரமான படைப்பு தான் இந்த படம். தண்ணீரில் சக்தியால் உயிர் வாழும் குடும்பத்தை சேர்ந்த ஒரு காதலன் நெருப்பின் சக்தியால் உயிர்வாழும் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிக்கிறான். இதுவரையில் வரலாற்றில் யாருமே இப்படி குடும்பம் மாற்றி காதலித்தது இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களுடைய காதல் வளர்ச்சி அடைகிறது. காதலனின் வீட்டில் காதலுக்கு போதுமான ஆதரவு இருந்தாலும் காதலியின் வீட்டில் அவளுடைய தந்தை சொல்லை கண்டிப்பாக அவள் மீற மாட்டாள் என்பதால் எப்படி தந்தையை சமாதானப்படுத்தி தன்னுடைய காதலனை கரம் பிடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் கற்பனை திறனும் அனிமேஷன் காட்சிகளும் கண்டிப்பாக வேற லெவலில் உள்ளது. தமிழ்மொழி டப்பிங் பார்க்கவில்லை என்றாலும் இன்டர்நேஷனல் ஆடியன்ஸ் இன் ரசனைக்கு ஏற்றவாறு இந்த படத்தை எடுத்துள்ளார்கள். மேலும் கதைக்களம் ஒருவரியாக இருந்தாலும் திரைக்கதையில் சொதப்பி விடவில்லை . கிளைமாக்ஸ் காட்சிகள் நீங்கள் எதிர்பார்த்ததுதான் என்றாலும் படத்தின் கதைக்களத்தோடு கச்சிதமாக பொருந்துகிறது. புதிய வண்ணமயமான டிசைன் ஸ்டைல் பாணியால் நகரும் கதாப்பத்திரங்களின் தன்மைகளைக் கொண்ட விசுவல் காட்சிகள் நிறைந்திருக்கும் இத்தகைய அனிமேஷன் ஸ்டைல் மிகவும் நுட்பமானது என்பதாலும் அடிக்கடி இது போன்ற 90 களின் ஹாலிவுட் ரொமான்டிக் காமெடி படங்களை நினைவுபடுத்தும் அனிமேஷன் படங்களை பார்க்க முடியாது என்பதாலும் இந்த படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்க்கலாம். இந்த படம் மேலும் நீங்கள் குடும்பத்தோடு பார்க்கும் அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

GENERAL TALKS - மார்வெல் போலி ஃபேமினிசாத்தால் அடையும் பாதிப்பு !


மிஸ் மார்வெல் தொடரின் வெற்றிக்கான காரணம் அது நன்றாக கதைக்களம் கொடுத்தது மட்டுமல்ல. சிறப்பான எழுத்துத் திறனும் அந்த தொடருக்கான வெற்றியின் காரணமாக அமைந்தது. இந்த தொடரின் கதை மற்றும் பிளாக் விடோ படத்தின் கதை இவைகளை தவிர்த்து பின்னதாக கொடுக்கப்படும் இந்த மொக்கையான மார்வலின் பெமினிசம் பேசும் கதைகளில் கொஞ்சமும் எழுத்து திறன் என்று இருப்பதாக காணப்படுவதே இல்லை உதாரணத்துக்கு பிளாக் பாந்தர் வகாண்டா போரேவர் என்ற திரைப்படத்தை பாருங்களேன் மொத்தமாக மூன்றுக்கும் மேற்பட்ட பெண் கதாபாத்திரங்கள் இருந்தாலும் சக்திகளை வைத்துக்கொண்டு சண்டை போடுவதைத் தவிர்த்து கதை என்றும் கேரக்ட்டர் டெவலப்மென்ட் என்றும் பெரிதாக ஒன்றும் இல்லை.  இன்னொரு பக்கம் மார்வெல் திரையுலகத்தின் மிகப்பெரிய மொக்கை என்று இன்ஹியூமன்ஸ் என்ற ஒரு நெடுந்தொடரை  சொல்லலாம் என்றால் அதைவிட மொக்கையான விஷயம் தி மார்வெல்ஸ் என்ற வகையில் வெளியிடப்பட்ட ஒரு மொக்கையான திரைப்படம். இந்த படத்தை தியேட்டரில் பார்த்தால் தூங்கி விடுவார்கள். நிறைய திறன்மிக்க கதாநாயகர்களை வைத்துக் கொண்டு இவர்கள் ஒன்றுமே செய்யவில்லை பொம்மையைப் போல வெறும் பொம்மையை வைத்துக்கொண்டு குழந்தை விளையாடுவதை போல கதாநாயகர்களின் நடிப்பு திறன்களை வைத்துக்கொண்டு இயக்குனர் விளையாடி உள்ளார் இந்தப் படத்தை வெளியிட்ட இயக்குனர் ஒரு பெண் இயக்குனர் என்பதாலும் மேலும் பெண்களுக்கான உரிமைகள் இருக்கிறது என்று மனதுக்குள் கற்பனை பண்ணிக்கொண்டு மற்ற மார்வேல் படங்களை நான் பார்த்ததே இல்லை என்றும் குறிப்பாக அவெஞ்சர்ஸ் போன்ற திரைப்படங்களில் என்ன நடந்தது ஏது நடந்தது என்பதை பற்றி எல்லாம் எனக்கு கவலையே இல்லை என்றும் சொல்லி இருக்கிறார் இந்த இயக்குனர்.  நான் எழுதுகிறேன் இது ஒரு பெண் எழுதிய எழுத்து அதனால் இதை திரையில் வரவேண்டும் வந்தே ஆகவேண்டும் என்று புரொடியூசர் காசை நாசம் பண்ணியே காசு பார்த்த இயக்குனர் இவர்தான். இந்த தோல்விக்கு பின்னராகவாவது பேமினிசதை காட்டி ஓகே போடுவதை தவிர்த்து டெட்புல் மற்றும் வுல்வெரின் திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் நிறைய மார்வெல் படங்களை மொக்கை போடாத நல்ல படமாக வெளியிடுவார்கள் என்று நம்புகிறோம். 

GENERAL TALKS - சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்னதான் ஆச்சு ! - 1



இப்போது டிசி திரையுலக திரைப்படங்கள் கடையை சாத்திக்கொண்டு கிளம்பிவிட்டது. நிறைய நாட்களாக மார்வெல் படங்களோடு போட்டியில் இருந்தாலும் தரமான படங்களை கொடுத்தலும் கடைசியாக வெளிவந்த சஷாம் திரைப்படங்களோ அல்லது அக்வா மேன் திரைப்படங்களோ போதுமான அளவுக்கு பணம் சம்பாதித்து கொடுக்கவில்லையே ? மேலும் புதிய முயற்சியாக வெளியிடப்பட்ட ப்ளூ பீட்டில் என்ற திரைப்படம் அதுவும் ஒரு வகையில் நன்றாக இருந்தாலும் வசூல் சாதனை படைக்கவில்லையே ?  இங்கே துறையில் முன்னோடியாக இருக்கும் இவர்கள் எத்தனை வருடங்களாக படங்கள் வெளியிடப்பட்டாலும் ஜாக்ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக் திரைப்படத்தின் தரத்தினை இணைக்க முடியாததால் இந்தத் திரைப்பட வரிசை போதுமான ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் காலியானது என்றே சொல்லலாம். இருந்தாலும் மார்வெல் படங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை என்ன ? பெமினிசம் ! ஒரு அளவோடு இருக்க வேண்டும் என்று சொல்லாமல் இப்போது எல்லாம் படங்களில் இருக்கும் பெமினிசம் ஒரு வகையான விஷத்தன்மையான பெமினிசம் என்றே சொல்லலாம் கடைசியாக வெளிவந்த அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தில் அவெஞ்சர்ஸ் அடுத்த நொறுக்கப்பட்டு ஆதரவு இல்லாமல் கிடைக்கும்போது கேப்டன் மார்வெலின் பயங்கரமான சக்தி அட்டாக்களால் அவெஞ்சர்ஸ் அமைப்பே  பரிதாபகரமாக காப்பாற்றப்படும்படி காட்சிகளை அமைக்கப்பட்டு இருக்கும்போதே மனதுக்கு உறுத்தலாக இருந்தது ! இது இந்த ஒரு படத்துக்கு மட்டும்தானே என்று அப்போது கொடுக்கப்பட்ட இந்த மொக்கை காட்சியின் டாக்ஸிக் பெமினிசம் பெண்கள் ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பை தான் அடைந்தது. இருந்தாலும் பிளாக் விடோ படத்தை தவிர்த்து பின்னால் வெளிவந்த வேறு எந்த படத்திலும் பெமினிசம் தான் காட்டிக் கொண்டிருக்கிறார்களே தவிர்த்து பொழுதுபோக்கு விஷயங்களில் கவனமே செலுத்தாமல் சலிப்பு தட்டி விடுகிறார்கள் ! இந்த பெமினிஷன் விஷயங்களில் ஒரு விதிவிலக்கான ஒரு வெப் சீரிஸ் என்றால் அதுதான் மிஸ் மார்வெல்‌ பிஸ்மார்களை பொறுத்த வரைக்கும் கதாநாயகியின் மற்றும் சப்போர்ட்டிங் கேரக்டர்களின் க்யூட்டான நடிப்பு அந்தத் தொடரை காப்பாற்றி விட்டது என்று சொல்லலாம். இருந்தாலும் மார்வெல் திரை உலகம் இன்னும் நிறைய விஷயங்களை இந்த டொக்ஸிக் ஃபேமினிஸத்துக்கு தாரைவார்த்துவிட்டது. 



CINEMA TALKS - GUARDIANS OF THE GALAXY VOL.3 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



பொதுவாக கார்டியன்ஸ் ஆப் த கேலக்ஸி எப்போதுமே சட்டை மடித்துக் கொண்டு சண்டைக்கு வரும் அமைப்பு என்பதாலும் போதுமான பிளான்கள் இல்லாமல் தான் களத்தில் இறங்குவார்கள் என்பதாலும் இந்த படத்தில் இந்த வில்லனை எப்படி ஜெயிக்கப் போகிறார்கள் என்பதை கடைசி வரைக்கும் கிளைமாக்ஸ் வரையில் நன்றாகவே கொண்டு போயிருக்கிறார்கள். மற்றபடி கிறிஸ்துமஸ் காட்சிகள் நிறைந்த ஒரு தனித்த டெலிவிஷன் திரைப்பட நாடகம் இருந்தாலும் இந்த படத்துக்கு எந்த வகையிலும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்த படத்தில் குறை என்று சொல்ல வேண்டும் என்றால் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி அமைப்பை பற்றி சொல்ல வேண்டிய இந்த கதை மொத்தமாக ராக்கெட் ரக்கூன் என்ற சப்போர்ட்டிங் கேரக்டருடைய வாழ்க்கையை பற்றியே சொல்லிக்கொண்டு இருப்பதுதான். பொதுவாக மார்வேல் படங்கள் நன்றாக திரைக்கதை வேலைப்படுகளை செய்வதுதான் இருந்தாலும் சென்ற ஆண்டின் வெளியீட்டு படங்களை பார்க்கும்போது தரமான வில்லன்கள் சரியாக கிடைக்கவில்லை என்றாலும் இந்த படத்திற்கான வில்லன் மிகவும் சரியான வில்லத்தனத்தில் இருக்கிறார். எந்த அளவுக்கு என்றால் தனக்கு மனதுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக ஒரு பிளானட்டையே மொத்தமாக அழிக்கும் அளவிற்கு சிறப்பான சக்தி வாய்ந்த புத்திசாலித்தனமான வில்லனாக இருக்கிறார் . சென்ற படங்களின் இடம்பெற்ற கார்டியன் சாவத்த கேலக்ஸி படத்தின் நகைச்சுவையான காட்சிகளையும் திரைக்கதை அமைப்பையும் கொஞ்சம் மிஸ் பண்ணினாலும் படத்துக்கு இந்த காட்சிகள் சீரியஸாக இருந்தால் தான் தனியாக இருக்கிறது. டாக்டர் ரேஞ்ச் மல்டிவர்ஸ் ஆப் மேடனெஸ் என்ற படத்தின் திரைப்படத்திற்கு  பின்னால் நிறைய படங்கள் வந்திருந்தாலும் கிட்டத்தட்ட மார்வெல் திரைப்படத்திற்கு தேவையான தரத்துக்கு ஒரு படம் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளும்படியான இந்த படம் தான்.

GENERAL TALKS - பிரிவினை ஆர்ப்பாட்டமும் அவர்களின் பிற்போக்கு புத்தியும் !


சமீபத்தில் இணையத்தை அலசும்போது அமெரிக்க நாட்டின் கருப்பு இன மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகளை குறித்த நிறைய காணொளிகளை என்னால் பார்க்க முடிந்தது. இன்று வரைக்கும் கூட இந்த நிறைவேறி பிடித்த வெள்ளை நிறத்து மக்கள் கருப்பு இனத்து மக்களை இப்படி உள்மனதில் இருந்து நிரந்தரமாக வெறுக்கிறார்களா என்று வருத்தமாக உள்ளது. சாதி மதம், பேதம் இனம் என்று நிறைய விஷயங்களில் நம்முடைய மனிதர்கள் அடுத்தவர்களையும் பிரித்துக் கொண்டே இருக்கிறார்கள். பழிவாங்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு ஒரு முடிவே இல்லை என்றும் வெறுப்பு எப்போதுமே நீக்கப்பட வேண்டும் விருப்பம் இருந்து கொண்டே இருந்தால் அந்த வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாய் கொண்டே இருக்கும் . இந்த குறும்படங்களின் வழியாக கருப்பு இன மக்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை  புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு கருப்பு இன இளைஞர் அவருக்காக ஒரு புதிய பெரிய பட்ஜெட் காரை சொந்த காசை போட்டு வாங்குகிறார் ஆனால் அங்கு இருக்கும் வெள்ளை நிற சேல்ஸ்மேன் அவர் அங்கே அந்த காரை வாங்கி விட்டார் என்று அவருக்கு தெரியப்படுத்தி புரிய வைக்கும் முன்னரே அவரைப் பேச விடாமல் தடுத்து அந்த கார் வாங்கிய மனிதரை கருப்பின திருடன் என்று சொல்லி அவமானப்படுத்துகிறான். ஒரே கருப்பின தொழிலதிபர் பெண்மணி ரெஸ்டாரன்ட்டின் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுகிறாள். மேலும் சாப்பாடுகளை பார்சல் வாங்கவும் அனுமதி மறுத்தப்படுகிறாள். கடைசியாக பார்சல் வாங்கிய பின்னாலும் பார்சலுக்கான பணத்தை கொடுத்த பின்னாலும் அந்த பணத்தை அவள் கொடுக்கவே இல்லை என்றும் இரவு சாப்பாட்டுக்கு ஹோட்டல் சாப்பாட்டை திருடி சென்று விட்டாள் என்றும் அவள் மீது பொய் குற்றம் சுமத்தி குற்றவாளி என்று  பட்டம் கட்டி சிறையில் தள்ளப் பார்க்கிறார்கள். மேலும் அவளை ஒரு தனி அறையில் அடைத்து அவளுடைய ஹான்ட் பேக் பையில் ஹோட்டலில் டேபிள்லில் இருக்கும் ஸ்பூன்களை போட்டு இவைகளை இவள்தான் திருடினாள் என்றும் பட்டம் கட்ட பார்க்கிறார்கள். வெள்ளை இனத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி கருப்பு இனத்தை சேர்ந்த இளைஞரை காரணமே இல்லாமல் கண்மூடித்தனமாக தாறுமாறாக தாக்குகிறார் அந்த காவல்துறை அதிகாரியோடு வந்த இன்னும் மூணு வெள்ளை நிறவெறி நிறைந்த அதிகாரிகளும்  அந்த இளைஞரின் கைகளை பின்னால் கட்டி வைத்து அவரை அரெஸ்ட் செய்து செய்யாத தப்புக்கு சிறையில் அடைக்க பார்க்கிறார்கள். மிகவும் சிறப்பாக தனியார் நிறுவனத்திற்கு ப்ராஜெக்ட் களை பண்ணிக்கொண்டு இருந்தாலும் கருப்பு இனத்தை சேர்ந்த அந்த இளைஞர் வெள்ளை இனத்தை சேர்ந்த மேனேஜரால் மிகவும் தவறாக நடத்தப்படுகிறார் மேலும் அவரை வேலையை விட்டு அனுப்பி விடுவேன் என்று மிரட்டவும் செய்கிறார் இந்த வெள்ளை நிறத்தை மேனேஜர் இப்படி எல்லாம் நிறைவேறிக்கு எதிரான நிறைய குறும்படங்களை என்னால் பார்க்க முடிந்தது. ஜப்பான் போடுற வாகனங்களில் கஷ்டப்படும் போது ஒருவருக்கொருவர் எந்த விதமான பாரபட்சமும் பேதமும் பார்க்காமல் சேர்ந்து முன்னேறுவதால் தான் உடைய உடைய அந்த நாடு மறுபடியும் மறுபடியும் இரும்பு சுவர் கொண்டு எழுந்து நிற்கிறது இதுவே அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் அது வெறுப்பை மட்டுமே கொட்டும் நாடு ஆப்பிரிக்க பழங்குடியினர் நிலத்தை ஆட்டைய போட்டு தான் அந்த நாட்டையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுடைய நிறவெறி இன்னும் எத்தனை பேரை தான் காவாங்க போகிறதோ என்பதுதான் இப்போது என்னுடைய கேள்வி ! 



Thursday, July 25, 2024

GENERAL TALKS - கௌரவமான வாழ்க்கையை அடைய முடியுமா ?


இங்கே நாளுக்கு நாள் சட்டம் மற்றும் ஒழுங்கு சீரழிந்து கொண்டு இருப்பதை நம்மால் தெளிவாக உணர முடிகிறது . இன்றைக்கு தேதிக்கு கிடைத்து இருக்கும் தகவல் என்னவென்றால் போதை பொருள் செடிகளை நடவும் குறைந்த அளவில் போதை பொருட்களை பயன்படுத்தவும் அனுமதி வழங்குகிறது ஒரு பணக்கார நாட்டின் அரசாங்கம் . இப்படி எல்லோருமே உணவு பொருட்களை விவசாயம் பண்ணுவதை விட்டுவிட்டு போதை பொருட்களை மட்டும் விவசாயம் பண்ண ஆரம்பித்தால் சாப்பாட்டுக்கு என்ன  பண்ணுவார்கள் ? கொஞ்சமாவது மண்டையில் மசாலா இருந்தால் இப்படி எல்லாம் யோசிப்பார்கள் ? சரியான மாங்காய் மடையர்களாக இருக்கும் இந்த முட்டாள்கள் அதிகாரத்தில் இருக்க காரணம் என்ன ? எதனால் படித்த பண்பான மனிதர்கள் , சாமர்த்தியமாக யோசிக்கும் மனிதர்கள் உலக அரசியலில் இல்லை ! எல்லோருமே வேஸ்ட் தானா ? இந்த வகையில் சம்பாதிப்பது உள்ளூர் காவல் துறையால் தட்டிக்கேட்கப்படாமல் போனால் தப்பான தொழில் பண்ணுபவர்களுக்கு நிறைய பணம் கொடுத்து அவர்களை ஒரு குட்டி மாஃபியாவாக மாற்றிவிடுகிறது என்பதே நிதர்சனமான உண்மை !  இவர்கள் மக்களுக்கு போதை விஷயங்களை வழங்கி பெரிய ஆட்களாக ஆனதும் உள்ளுர் பாதுகாப்பு துறைக்கு லஞ்சம் கொடுத்து சந்தோஷமாக நெட்வொர்க்கை விரிவுபடுத்தி குறைந்தது பத்து வருடங்களில் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இடம்பெறும் ஸ்பெக்ட்டர் என்ற கொலைகார அமைப்பை போல ஒரு பெரிய நெட்வொர்க்கை உருவாக்கிவிடுவார்கள் மக்களே. இந்த போஸ்ட் ஒரு விழிபபுணர்வு உருவாக்க மட்டுமே. காவல்துறை அதிகாரிகளை இதுபோன்று போதையில் பணத்தை பார்க்கும்  நாசவேலை செய்யும் ஆட்களுக்கு ஆதரவு கொடுக்க வைத்தால் இவர்கள் கிட்டத்தட்ட அந்த அந்த ஏரியாக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ரவுடிகளக மாறிவிடும் அபாயம் உள்ளது.  இவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டிய சக்திகளே கைகளை கட்டிக்கொண்டு பணத்தால் வாயடைத்து நிற்பதுதான் பரிதாபமாக இருக்கிறது. குறிப்பாக சாலையில் இரண்டு பேரை பணக்கார இளைஞர்கள் ஆக்ஸிடென்ட் பண்ணி காலி பண்ணிவிட்டு தண்டனை கொடுக்கப்படாமல் விடுதலை பண்ணுவதை பார்க்கும்போதே மனதே உடைந்துவிட்டது , மனிதத்தன்மை இந்த உலகத்தில் உயிர் பெறும் என்ற கருத்துகளும் உடைந்துவிட்டது. மனித தன்மை சட்டம் ஒழுங்கு காலியாகும்போது கண்டிப்பாக காலியாகிவிடும் மக்களே. சொல்லப்போனால் மனிதர்களுடைய உயிருக்கே ஆபத்தை உருவாகும் அபாயங்கள் இதுபோன்று சட்ட ஒழுங்கு சீர்கேட்டால் உருவாகும் மக்களே.  கார் விபத்து பண்ணிய அந்த இளைஞர்களுக்கு என்னமோ லீவு லெட்டர் எழுதி கொடுங்கள் என்பதை போல மன்னிப்பு லெட்டர் மட்டும் எழுதி கொடுத்தால் போதுமானது என்று விடுதலை பண்ணியது ஒரு கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு என்றால் ஏழைகளாக பிறந்த மக்கள் வேறு எப்படித்தான் அவர்களுடைய உயிர்களை காப்பாற்றிக்கொள்ள முடியும் ? யோசித்து பாருங்கள் மக்களே ! முடிவை எடுங்கள் . கௌரவமான வாழ்க்கை வேண்டும் என்றால் கஷ்டப்பட்டுத்தான் ஆகவேண்டும். 

CINEMA TALKS - MISSING LINK - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



இந்த படம் ஒரு ஸ்டாப்மோஷன் அனிமேஷன் திரைப்படம். ஒரு வைல்டு லைஃப் அட்வேஞ்சர் சாதனையாளர் நம்ம பூமியில் மிகவும் அரிதாக உயிர் வாழும் க்ரீயேச்சர்களை கண்டறிந்து அவைகளின் அரிதான ஃபோட்டோகிராப்களை எடுத்து சாதனைகளை படைப்பதை கொண்டு தொடங்குகிறது. இந்த முறை சவால் எல்லாம் விட்டு கண்டறிந்து ஒரு கிரேயேச்சர் யார் என்றால் ஒரு ஆதிகால மனிதன் ஆனால் மனிதர்களோடு பேசி பழகியதால் நன்றாக பேசி பழகும் புத்திசாலியான மனிதர். இந்த மலைவாழ் மனிதரை இவரை போலவே உயரமான மனிதர்கள் எங்கே மறைந்து வாழ்கின்றனர் என்று கண்டறிந்து அவர்களோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று நட்பு முறையில்  உதவி பண்ணுவதுதான் இந்த படத்தின் கதைக்களமாக இருக்கிறது. ஸ்டாப் மோஷன் கிராபிக்ஸ் இந்த படத்தில் வேற லெவலில் செய்து இருக்கிறார்கள். ஒரு ஒரு சின்ன சின்ன நுட்பமான பின்னணி காட்சிகள் கூட மிகவும் அழகாக பிரகாசிக்கிறது. கதையோ கதைகளின் காட்சிகளின் நகர்த்தலோ எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது. திரைக்கதை மெதுவாக நகர்கிறது. இந்த படத்தின் தயாரிப்பு செலவு மற்றும் மார்கெட்டிங் செலவு மிக மிக அதிகம் என்பதால் ஒரு பிரச்சனை மேலும் ஸ்டாப் மோஷன் காட்சிகளில் எப்போதும் நிறைய செலவுகள் இருக்கிறது என்பதால் ஒருமுறை காட்சியை எடுத்துவிட்டு மறுபடியும் எடிட்டிங் போட்டு கத்தரித்துவிட முடியாது. சினிமா தயாரிப்பு என்பது எப்போதுமே கடினமான ஒரு விஷயம். இந்த படம் டிசைனிங் தயாரிப்பில் புகழ்பெற்ற நிறுவனத்தில் இருந்து மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம். அனிமேஷன் காட்சிகளின் தத்துரூபத்தன்மை என்னவோ நம்ப முடியாத அன்காணி வாழி எஃபெக்ட் என்ற விஷயத்தை உருவாக்கியது என்றாலும் இந்த வகையில் இந்த படம் மிகவும் கஷ்டமான புராஜக்ட். இந்த படம் வெளிவந்த காலங்களில் நிறைய போட்டியில் இருக்கும் படங்கள் எல்லாம் வெற்றி அடையும்போது இந்த படமும் தோற்கடிக்கப்பட்டுகிறது. கதையில் இன்னுமே வொர்க பண்ணி இருக்கலாம் மேலும் கிளைமேகஸ் இன்னுமே பெரிய அளவில் எடுத்து இருக்கலாம் என்று எனக்கு ஒரு தனிப்பட்ட கருத்து உள்ளது ஆனால் இந்த மாதிரியான ஸ்டாப்மோஷன் படங்களில் நினைத்த காட்சிகளை அப்படியே திரையில் கொண்டுவந்துவிட முடியாது.  இந்த விஷயத்தை பற்றி இன்னொரு பதிவில் விரிவாக பார்க்கலாம். மற்றபடி இந்த படம் குடும்பத்தோடு பார்க்கும் அளவுக்கு உள்ளது. கண்டிப்பாக பாருங்கள்.

MUSIC TALKS - MALARGALE MALARGALE MALARA VENDAAM URANGIDUNGAL AVASARAM EDHUVUME INDRU ILLAI OIVEDUNGAL - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்வெடுங்கள்
தென்றல் தோழனை அழைத்து வந்து
தினம் விருந்து கொடுத்து விட்டு
வம்பு செய்தீர்கள் சுவைத்து கொண்டு
சிரித்து முறைத்து விருப்பம் போல வாழு
மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்வெடுங்கள்

ஆடைகள் சுமைதாண்டி 
அதை முழுதும் நீக்கி விட்டு குளித்தேன்
யாரேனும் பார்ப்பார்கள்
என்று கவலை ஏதும் இன்றி கழித்தேன்
குழந்தை என மீண்டும் மாறும் ஆசை
எல்லோருக்கும் இருக்கிறதே
சிறந்த சில நொடிகள் வாழ்ந்து விட்டேன்
என் உள்ளம் சொல்கிறதே
அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே
அட இங்கு பணி பெண்கள் யாருமில்லையே
இந்த விடுதலைக்கு இணை இன்று ஏதுமில்லயே
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்வெடுங்கள்

நீரோடு ஒரு காதல் கடல் அலையில்
கால் நனைய நடப்பேன்
ஆகாயம் என்னை பார்க்க மணல் வெளியில்
நாள் முழுதும் கிடப்பேன்
புதிய பல பறவை கூட்டம் வானில் 
பறந்து போகிறதே
சிறகு சில உதிர்த்து நீயும் வா வா
என்றேதான் அழைக்கிறதே
முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே
அசடுகள் வழிந்திட ஆண்கள் இல்லையே
காலம் நேரம் கடந்த ஞான நிலை

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்வெடுங்கள்

GENERAL TALKS - திரைப்படங்கள் காலியாக காரணம் என்ன ?


எப்போதுமே திரைத்துறை நன்றாக இருந்ததே இல்லை. திரைப்பட துறையை சப்போர்ட் பண்ணும் யாராக இருந்தாலும் அந்த துறையில் குற்றங்கள்தான் மொத்தமாக இந்த காலத்தில் அதிகமாகி இருப்பதை நீங்கள் பார்க்கலாம் ! குறிப்பாக தி பாய்ஸ் மற்றும் கேம் ஆஃப் த்ரான்ஸ் போன்ற தொடர்கள் நிறைய கிளாமர் கன்டேன்ட்களை கொடுத்து மக்களை மாஸ் மனநிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது. மார்டின் ஸ்கார்ஸிஸ் ஆவேஞ்சேர்ஸ் படங்கள் எல்லாம் படங்களே இல்லை என்று சொல்கிறார் ! இன்னொரு பக்கம் தமிழ் படங்களிலில் விஜிலன்டிஸம் எல்லாம் நடைமுறையில் நடக்காத ஒரு கற்பனைதான் என்று விவரிக்கிறார் ! சமீபத்தில் சினிமா தியேட்டர்கள் வசூல் இல்லாமல் மூடப்படுகிறது. வெளிநாட்டு ஃபிக்ஷன் வொர்க்குகள் நல்ல ஆடம்பரமாக நிறைய பணத்தை செலவு பண்ணி எடுப்பதால் அவைகள் சூப்பர் ஹிட் ஆவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. மக்களுடைய பொழுதுபோக்குக்கு பெஸ்ட் என்னவோ அதனைத்தான் இவர்கள் கொடுக்கிறார்கள் ! பெஸ்ட்டான விஷயமே மக்களுக்கு கிடைக்கிறது என்பதால் மக்கள் சாதாரணமாக சின்ன பட்ஜெட் அல்லது புதிய வகை கதைகளை கவனிக்க தவறி விடுகிறார்கள். உதாரணத்துக்கு என்ன படத்தை சொல்லலாம் ? திரையின் மறுபக்கம் என்று ஒரு ஷார்ட் பிலிம் குவாலிடியில் எடுத்த தமிழ் படத்தை சொல்லலாம் ! இந்த படம் போல ப்ரொடக்ஷன் பட்ஜெட்டில் சின்னதாக ஒரு சின்ன சிம்பிள் கதையை சொல்லும் படங்கள் கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டும் ஆனால் பெரிய பட்ஜெட் படங்களிலின் வண்ணங்களில் காணாமல் போய்விடுகிறது ! சூ மந்திரகாளி என்று ஒரு படம் 2021 ல் வெளிவந்தது (படத்தை பார்த்தால் 2011 ல் வெளிவந்த படம் போல இருக்கும் அது வேறு விஷயம் ! படம் நன்றாகத்தான் இருக்கிறது இருந்தாலும் பெரிய வெற்றியை கொடுக்க முடிவது இல்லையே ? இந்த விஷயத்தை கண்டிப்பாக மக்கள் கவனமாக யோசிக்க வேண்டும். நம்ம ஊரு படங்களுக்கு நாம்தான் ஆதரவு கொடுக்க வேண்டும் !

MUSIC TALKS - KANNAN VARUM VELAI ANDHI MAALAI NAAN KAATHIRUNDHEN CHINNA CHINNA MAYAKKAM CHINNA THAYAKKAM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


கண்ணன் வரும வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் 
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள் இறக்கை விரிக்கும் இரண்டு விழிகள் கூடுபாயும் குறும்புக்காரன் அவனே !
கண்ணன் வரும வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் 
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்

வான்கோழி கொள்ளும் ஆசை ஆடி தோற்பது 
தைமாசம் கொள்ளும் ஆசை கூடிப் பாா்ப்பது
தோ் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சோ்வது 
ஓா் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூறவா இங்கு எனது ஆசையை ? 
தோழனே வந்து உளறு மீதியை 
கோடி கோடி ஆசை தீரும் மாலை !

கண்ணன் வரும வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் 
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்

பூவாசம் தென்றலோடு சேர வேணுமே 
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் மெளனமே
தாய்ப்பாசம் பத்துமாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்சபாரம் காதல் ஏந்துமே
நீண்டநாள் கண்ட கனவு தீரவே 
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே

கண்ணன் வரும வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் 
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள் இறக்கை விரிக்கும் இரண்டு விழிகள் கூடுபாயும் குறும்புக்காரன் அவனே !
கண்ணன் வரும வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் 
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்

MUSIC TALKS - EPPO NEE ENNAI PAARPA EPPODAA EN PECHAI KEPPA EPPO NAAN PESA KETTA PAIYAA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



எப்போ நீ என்னை பார்ப்பே ? எப்போ என் பேச்ச கேட்பே ?
எப்போ நான் பேச ? கெட்டப்பையா ?
எப்போடா கோவம் குறையும் ! எப்போடா பாசம் தெரியும்
எப்போ நான் பேச ? கெட்டப்பையா ?


எப்போ நீ என்னை பார்ப்பே ? எப்போ என் பேச்ச கேட்பே ?
எப்போ நான் பேச ? கெட்டப்பையா ?
எப்போடா கோவம் குறையும் ! எப்போடா பாசம் தெரியும்
எப்போ நான் பேச ? கெட்டப்பையா ?


நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாறுறென்
ஒரு செல்ல நாயாய் உந்தன் முன்னே வாலாட்டுறேன்
உன் செயலை எல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன்
என்னை ஒரு முறை நீயும் திரும்பி பார்ப்பாயா ?


கண்ணை கட்டிக் கொண்டு உன் பின்னால்
காலம் முழுவதும் வருவேனே
உந்தன் பாதையில் பயம் இல்லை நீ வா !


மலையை சுமக்கிற பலம் உனக்கு
மலரை ரசிக்கிற மனம் உனக்கு
இனிமேல் எப்போதும் நீ எனக்கு நீ வா !


உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதேடா
உன் கோபம் கூட நியாயம் என்று ரசித்தேனேடா
நீ தீயாய் இரு எனை திரியாய் தொடு
நான் ஒளி பெற்றே வாழ்வேனடா !
அட என்னை தவிர எல்லா பெரும் ஆணாய் ஆனாலும்
நான் உனக்கு மட்டும் சொந்தம் என்பேன் என்ன ஆனாலும்
நீ இல்லை என்ற சொல்லே வேண்டாம்டா !


எரிமலை கண்கள் இரண்டு பனிமழை இதயம் ஒன்று
உன்னிடம் கண்டேன் கெட்டப்பையா !
பூமியில் ஆம்பளை என்று உன்னை தான் சொல்வேன் இன்று
வேறென்ன சொல்ல கெட்டப்பையா !


உன்னாலே அச்சம் இன்றி நான் வாழுறேன்
உன் கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்
இந்த பூமி பந்தை தாண்டிப் போக முடியாதுடா !
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதுடா !
என் நிலவரம் உனக்கு புரியவில்லையா ?
---

MUSIC TALKS - NEE ILLAI ENDRAAL VAAZHKAIYUM ILLAI VAANAVILLE UN MUGAM PAARTHU SOORIYAN SIRITHU VAAZHVATHINGE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே 
உன் முகம் பாா்த்து சூாியன் சிாித்து எழுந்ததிங்கே
ஓ காதல் என்றாலும் அவ்வாா்த்தை பொல்லாது
அவ்வாா்த்தை போல் என்னை கூா்வாளும் கொல்லாது 

நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே 
உன் முகம் பாா்த்து சூாியன் சிாித்து எழுந்ததிங்கே
ஓ காதல் என்றாலும் அவ்வாா்த்தை பொல்லாது
அவ்வாா்த்தை போல் என்னை கூா்வாளும் கொல்லாது 
நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே 

நடு ராத்திாியில் சிறு பூத்திாியில் ஒளி நடனமாடும் பொழுது
ஒரு ஏடும் இல்லாமல் எழுத்தும் இல்லாமல் பாடல் நூறு எழுது
என் மௌனம் அதை சொல்லும் சொல்லும்
உன் உள்ளம் அதை வெல்லும் வெல்லும் 
நடு சாமம் அது செல்லும் செல்லும் 
மலா் வானம் நம்மை கொல்லும் கொல்லும்
உன் ஆவல் பொல்லாது அடி அம்மாடி என்றும்
அது காவல் கொள்ளாது

நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே 
உன் முகம் பாா்த்து சூாியன் சிாித்து எழுந்ததிங்கே
அன்பே அன்பே உன் ஆடையென்று 
என்னை ஏற்றால் என்ன உன்னிடையில் இன்று 

நான் ஊா் மயங்கும் பல ஓவியத்தை என் கைகள் கொண்டு வரைந்தேன் 
உயிா் காதலனே உன் சித்திரத்தை என் கண்கள் கொண்டு வரைந்தேன்
உன்னை போலே ஒரு ஓவியத்தை ஹுசைன் கூட இங்கு வரைந்ததில்லை
உன்னை பாா்த்தால் அவன் மூச்சுமுட்டும் மழைபோல உடல் வோ்த்துகொட்டும்
இந்த காதல் வந்தாலே அந்த ஹாிச்சந்திரன் கூட பல பொய்கள் சொல்வானே

நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே 
உன் முகம் பாா்த்து சூாியன் சிாித்து எழுந்ததிங்கே
ஓ காதல் என்றாலும் அவ்வாா்த்தை பொல்லாது
அவ்வாா்த்தை போல் என்னை கூா்வாளும் கொல்லாது 
அன்பே அன்பே உன் ஆடையென்று 
என்னை ஏற்றால் என்ன உன்னிடையில் இன்று 

MUSIC TALKS - KANAA KANGIREN KANAA KAANGIREN KANNALANE ORE PANDHALIL ORE MEDAIYIL IRUVARUME - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



கனா காண்கிறேன் 
கனா காண்கிறேன் 
கண்ணாளனே
ஒரே பந்தலில் 
ஒரே மேடையில் 
இருவருமே

கனா காண்கிறேன் 
கனா காண்கிறேன் 
கண்ணாளனே
ஒரே பந்தலில் 
ஒரே மேடையில் 
இருவருமே

மண்ணை தொட்டாடும் 
சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் 
தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் 
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்

தினம் தினமும் வாசம் கொண்டாடும் 
பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத 
கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும் 
கணவன் திருமடியில் மலர்வேன்

கனா காண்கிறேன் 
கனா காண்கிறேன் 
கண்ணாளனே
ஒரே பந்தலில் 
ஒரே மேடையில் 
இருவருமே
இருவருமே இருவருமே இருவருமே


என் தோழிகளும் உன் தோழர்களும் 
ஹேய்யோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்
நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ 
ஆகா அது இன்ப துன்பம்
நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்

தஞ்சாவூர் மேளம் கொட்ட 
தமிழ்நாடே வாழ்த்து சொல்ல 
சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம் 
செட்டிநாட்டு சமையல் வாசம்
நியூயார்க்கை தாண்டி கூட 
மூக்கை துளைக்கும்


கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

நம் பள்ளியறை நம் செல்ல அறை 
அன்பே அதில் பூக்கள் உண்டு
பூவாடையின்றி வேறாடைகள் இல்லை
ஆண் என்பதும் பெண் என்பதும் 
ஹையோ இனி அர்த்தமாகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை

மார்போடு பின்னிக்கொண்டு 
மணிமுத்தம் எண்ணிக்கொண்டு
மடியோடு வீடுகட்டி காதல் செய்யுவேன்
உடல்கொண்ட ஆசை அல்ல 
உயிர்கொண்ட ஆசை எந்தன்
உயிர்போகும் முன்னால் 
வாழ்வை வெற்றி கொள்ளுதே

கனா காண்கிறேன் 
கனா காண்கிறேன் 
கண்ணாளனே
ஒரே பந்தலில் 
ஒரே மேடையில் 
இருவருமே

கனா காண்கிறேன் 
கனா காண்கிறேன் 
கண்ணாளனே
ஒரே பந்தலில் 
ஒரே மேடையில் 
இருவருமே

மண்ணை தொட்டாடும் 
சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் 
தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் 
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்

தினம் தினமும் வாசம் கொண்டாடும் 
பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத 
கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும் 
கணவன் திருமடியில் மலர்வேன்

MUSIC TALKS - RAJA MANDHIRI RAAGA MANJARI (ULLA KONJAM MADAKKI THATTU - MADAKKI THATTU ) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


டேய் தம்பி! அந்த ஐஸ்வாட்டர் எடுத்துக்கொடு
இந்த பூமிக்கு முதல் வணக்கம் ரசிகமகா ஜனங்களுக்கும் வணக்கங்கள் !


சமயம் ஏழாக சாயந்தரம் நீராக 
குளிர்ந்த காத்து சிலிர்த்து சிறகடிக்குதே !
ஒரு பக்கம் மனசில தாஸ் மாமா மறுபக்கம் 
நேர்மையுள்ள இளவரசன் மேல ஒரு ஆசைதாம்மா
இந்த ரெமொலா டான்சில் பார்ட்டி 
என்றும் அழியாததே இன்னும் மினுக்க வைக்கலாமா ?
ஹேய் ! ரமொலா இந்த புள்ளைக்கும் சேலை கட்டி விடலாம்ல !


ராஜமந்திரி ராகமஞ்சரி  அம்மை பேயரு அறியாத யாரும் இல்லையே !
கலைக்கார ஃபேமிலி தானே 
கச்சேரி பார்த்தா தூக்கம் கலையும் இன்று ராத்திரி
சோக்கு லேடி சொப்பன சுந்தரி  
நீ பார்க்கும் பார்வை நூறுகோடி மல்லி மெத்தடி
என் மூச்சு காத்து பத்திக்கிச்சுடி
உன்ன பார்த்ததுல டீரு டிடிடி  
தூண்டிலான வளைவுகுள்ள தொட்டா சுத்தி
துப்பாக்கிய வெடிக்க வைக்கும் உந்தன் பக்தி
ஆண் ஜாதி எல்லாம் மயக்கிப்புட்டா
ஹான் .. உள்ள கொஞ்சம் மடக்கி தட்டு 
கொஞ்சம் உள்ள மடக்கி தட்டு
மடக்க தட்டு ம மம ம ம மம மடக்க தட்டு 
மடக்க தட்டு ம மம ம ம மம மடக்க தட்டு 
மடக்க தட்டு ம மம ம ம மம மடக்க தட்டு 
மடக்க தட்டு ம மம ம ம மம மடக்க தட்டு 

அவள மட்டும் அவளுக்கு மட்டும் அவளுக்கு பொன்னி அரிசியா?
ஆனா எனக்கு மட்டமான சன்னை அரிசியா?
ஆடுகளா நூறுகளாக லட்சங்களா பெருகிப்போக
எத்தனை இருக்கு அத்தனையும் ஊசியாகி கருகி போச்சே !
அட அவளுக்கு தங்கத்தோடுதான்
ஆனா எனக்கு கட்டம் போட்ட காட்டன் சேலையா?
தங்கத்தோடு அவ காதில தகதகனு மின்னி போக
என்ட்ட இருக்கும் சேலை மட்டும் சுருங்கி போயி கிழிஞ்சு போச்சே
என் ரசிகை ராஜமந்திரி இந்த தாஸ் மாமா என் மேல ரொம்ப ஆசைதான் 
என் ரசிகை ராஜமந்திரி இந்த தாஸ் மாமா எப்பவுமே என் மாமன் தான்


கொஞ்சம் உள்ள மடக்கி தட்டு
மடக்க தட்டு ம மம ம ம மம மடக்க தட்டு 
மடக்க தட்டு ம மம ம ம மம மடக்க தட்டு 
மடக்க தட்டு ம மம ம ம மம மடக்க தட்டு 
மடக்க தட்டு ம மம ம ம மம மடக்க தட்டு 
மடக்க தட்டு ம மம ம ம மம மடக்க தட்டு 
மடக்க தட்டு ம மம ம ம மம மடக்க தட்டு 

சோ சோ சோ சோக்கு லேடி சொப்பன சுந்தரி
நீ பார்க்கும் பார்வை மல்லி மெத்தைடி
என் மூச்சு காத்து பத்திக்கிச்சுடி !
மனசுக்குள்ளே டீரு டி டிடிடி டிடிடி

என்ன பார்க்கறீங்க அவன் அவன் சோகத்துக்கு அவன்தான் LYRIC WRITER-U !
எழுதுங்க ! மடிச்சு போட்டுடுங்க !

மடக்க தட்டு ம மம ம ம மம மடக்க தட்டு 
மடக்க தட்டு ம மம ம ம மம மடக்க தட்டு 
மடக்க தட்டு ம மம ம ம மம மடக்க தட்டு 
ஹான் .. கொஞ்சம் மடக்கி தட்டு !
மடக்கி தட்டு ! மடக்கி தட்டு ! மடக்கி தட்டு ! மடக்கி தட்டு !

(இந்த பாடலின் வரிகள் கொஞ்சம் இன்-அக்யூரேட்டாக உள்ளது ! மறுபயன்பாட்டுக்கு கவனமாக பயன்படுத்தவும் 

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...