Wednesday, January 1, 2025

ARC - 014 - மனதின் ஞானமும் காலத்தின் நுணுக்கமும்

 


ஒரு ஊரில் ஞானம் பெற்ற ஞானி ஒருவர் ஒரு மாலை வேளையில் ஒரு கிராமத்துப் பக்கம் சென்று கொண்டிருந்தார். ஒரு குழந்தை எரிந்து கொண்டிருந்த கை விளக்கோடு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ஞானி குழந்தையை நிறுத்திக் கேட்டார்,”இந்த விளக்கின் ஒளி எங்கிருந்து வந்தது? நீ தானே விளக்கேற்றினாய்?” குழந்தை பதில் அளித்தது,”நான்தான் விளக்கேற்றினேன். ஆனால் ஒளி எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது. ”பின் அந்தக் குழந்தை விளக்கைத் தனது வாயால் ஊதி அணைத்தது. அது ஞானியிடம், ”இப்போது உங்கள் முன்னர் தான் ஒளி மறைந்து விட்டது. இப்போது சொல்லுங்கள், ஒளி எங்கே சென்றது? இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னால் நான் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கிறேன். ”என்று கேட்டது. திகைத்துப் போன ஞானி அக்குழந்தையின் காலில் விழுந்தார். இனி யாரிடமும் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்பதில்லை என்று உறுதி அளித்தார். அக்குழந்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஒளி சென்ற இடம் தனக்குத் தெரியாது என்றார். தான் பதில் அளிக்க முடியாத கேள்வியைப் பிறரிடம் கேட்பது முட்டாள்தனம் என்பதனை உணர்ந்தார். பின் அவர் கூறினார்,”விளக்கை விடு. அதற்கு மேலாக எனக்கு ஒரு நல்ல பாடத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறாய். என் விளக்கில் (உடல்) ஒளி வருவது எங்கிருந்து என்று எனக்குத் தெரியாது. அது எங்கு மறையும் என்பதும் தெரியாது. என் விளக்கைப் பற்றி முதலில் நான் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். பின் இந்த மண் விளக்கின் ஒளியைத் தேடுகிறேன் ” - காலத்தை யாராலும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்கு ஞானமே கிடைத்தாலும் உங்களால் காலத்தையும் காலம் தரும் நுணுக்கமான அனுபவங்களையும் ஜெயிக்க முடியாது. சட்டென்று உங்களுடைய ஆணவம் உங்களுடைய அறிவை தடுக்க முயற்சி செய்யும்போது நீங்கள்தான் ஆணவத்தை அறவே நீக்க வேண்டும். இதுவும் வாழ்க்கையில் முக்கியமான ஒரு கடமை. 

No comments:

ARC - 023 - மலிவாக நடந்துகொள்ளும் மனிதர்கள் !

  ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி என்று ஒருவர் சென்று இருந்தார்! கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டுவருமாறு சொன்னான். இங்கே காபி பொடியும்...