Tuesday, January 7, 2025

ARC - 026 - தேவைகளை அறிந்து உதவி செய்தல் !




ஒருமுறை சீடன் ஒருவன் வறுமையில் பாதிக்கப்பட்டு கஷ்டத்தில் இருக்கும் ஒருவனுக்கு உபதேசம் செய்தான். ஆனால், அவன் அதை கேட்கவில்லை. உடனே, அந்த சீடனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. நேராக குருவிடம் சென்றான். “குருவே! தாங்கள் உபதேசம் சொன்னால் மக்கள் உடனே ஏற்றுக்கொள்கிறார்கள். நான் ஒரு ஏழ்மையான பாவப்பட்ட மனிதனுக்கு உபதேசம் சொன்னேன். ஆனால், அவன் அதை கேட்கவில்லை; அதன்படி நடந்துகொள்ளவும் இல்லை” என்று கூறி குறைபட்டுக் கொண்டான். குரு பதில் ஏதும் சொல்லவில்லை. அந்த மனிதனை தன்னிடம் அழைத்து வருமாறு மட்டும் சீடனிடம் கூறினார். மறுநாள் அந்த ஏழ்மையானவனோடு குருவிடம் வந்து சேர்ந்தான் சீடன். ஏழ்மை யானவனை மேலும் கீழும் பார்த்தார் குரு. போதுமான சத்துக்கள் இல்லாமல் வேளா வேளைக்கு கொஞ்சமும் உணவு இல்லாமல் பசிக்கொடுமையால் எலும்பும் தோலுமாக இருந்தான் அந்த ஏழ்மையானவன். அவனுக்கு சுவை மிகுந்த உணவை கொடுத்து உட்கொள்ள செய்த குரு கொஞ்சம் செல்வத்தையும் கொடுத்து “இனி வீட்டுக்குச் செல்!” என்றார். சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. உபதேசம் செய்வார் என்று பார்த்தால், சாப்பாடு போட்டு அனுப்புகிறாரே என்று யோசித்தான்.  அப்போது குரு சொன்னார்… “இப்போது அவனுக்குத் தேவை உபதேசம் அல்ல. அவனது பசியை போக்க தேவையான உணவுதான். அந்த உணவுதான் இப்போது அவனுக்கு உபதேசம்” என்றார். ஒருவருக்கு என்ன தேவையோ அதனை பொறுத்து பொருளாக உதவி செய்யாமல் அட்வைஸ் பண்ணி கடுப்பு ஏத்தும் உங்களின் நெருக்கமான ஆட்களுக்கு இந்த கதை சமர்ப்பணம். 



No comments:

ARC - 063 -