Tuesday, January 7, 2025

ARC - 028 - தரமற்ற விஷயங்களை கொடுப்பவர்கள்




ஒரு சிறுவனுக்கு வாழைப்பழம் ஒன்று கிடைத்தது. தெரிந்தவர் அவனுக்கு அளித்து, 'சாப்பிடு' என்று கொடுத்தார். சிறுவன் பழத்தை வாங்கிக் கொண்டான். பழத்தைத் தொட்டுப் பார்த்ததுமே சற்று 'கொழ கொழ' வென்று இருந்ததால், அதை அவன் சாப்பிட விரும்பவில்லை. அந்தப் பழத்தை, அப்பாவிடம் கொடுத்தான். "நீ சாப்பிடு, உனக்குத்தானே கொடுத்தார்.?" என்றார் அவனுடைய அப்பா. எனக்கு இப்பொழுது வேண்டாம். நீங்கள் சாப்பிடுங்கள்" என்றான் சிறுவன். சிறுவனின் தந்தை பழத்தைப் பார்த்தார். பழம் சாப்பிடும் படியான நிலையில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டார். மனைவியை அழைத்தார். "இந்தப் பழத்தைச் சாப்பிடு. நானே சாப்பிடுவேன். ஆனால் எனக்கு பசியில்லை" என்று கூறி மனைவிக்கு அப்பழத்தை தானம் செய்தார். மனைவி பழத்தைச் சாப்பிடலாம் என்று தான் கையில் வாங்கிக் கொண்டாள். வாங்கிய பிறகுதான் பழம் மிகவும் பழுத்துவிட்டது என்பதை அறிந்தாள். தோலை உரித்துப் பார்த்தால் ஒரு வேளை அது அழுகிய பழமாகவும் இருக்கக் கூடும் என்று எண்ணினாள். அதனால் அவள் அப்பழத்தை உரிக்காமலே, இதை யாருக்கு கொடுக்கலாம் என்று யோசித்தாள். அப்போது வீட்டு வேலை செய்யும் வேலைக்காரப் பெண் வந்தாள். வேலைக்காரப் பெண்ணிடம்" இங்க வா, ரொம்ப களைப்பா இருக்கிறாயே, இந்தா இந்தப் பழத்தைச் சாப்பிடு" என்று கையில் இருந்த வாழைப்பழத்தை அவளிடம் தந்தாள். பழத்தைப் பெற்றுக்கொண்ட வேலைக்காரி, அதைத்தின்ன முடியாது என்பதை அறிந்து கொண்டாள். எஜமானி கொடுத்ததை வேண்டாம் என்று சொல்லத் தயக்கமாக இருந்ததால் கொடுத்ததை வாங்கிக் கொண்டாள். பிறகு வாசல் பக்கம் சென்றாள். பழத்தைத் தூக்கிப் போட்டுவிடலாம் என்ற எண்ணத்தில்தான் வாசற்பக்கம் வேலைக்கார பெண் வந்தாள். அப்போது தெருவில் பால்காரன் பசுமாட்டுடன் சென்றதைப் பார்த்தாள். அழுகிய பழத்தைத் தின்னமுடியாமல் தூக்கிப் போடுவதை விடவும், பசுவுக்கு அளித்தால் புண்ணியம் கிடைக்குமே என்று நினைத்தாள். பழத்தைக் கொண்டு போய் பால்காரனிடம் கொடுத்து, "பசுவுக்கு இதைக் கொடுத்துவிடு" என்றாள். பால்காரன் பழத்தை வாங்கினான். “ஏம்மா, அழுகிய இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் பசுவுக்கு ஒத்துக்கொள்ளாது” என்று கூறி குப்பைத் தொட்டியில் விட்டெறிந்தான். பழம் நல்ல நிலையில் இருந்தால் சிறுவனே அதைச் சாப்பிட்டிருப்பான். நன்றாக இல்லை என்று தெரிந்ததால் தான் சிறுவன் அப்பாவுக்கும், அப்பா அம்மாவுக்கும், அம்மா வேலைக்காரிக்கும், வேலைக்காரி பசுவுக்கும் தானம் செய்தார்கள். தனக்குத் தேவையற்றது என்று நினைப்பதை, தனக்கு உதவாது என்று தோன்றியதை, கேட்டு போனதை பிறருக்குக் கொடுப்பதற்குப் பெயர் தானமல்ல உதவியும் அல்ல அது உங்கள் மீதான மதிப்பை குறைக்கும் உங்கள் மேல் ஒரு வன்மத்தை அது உருவாக்கும். குப்பையான விஷயங்களை கொடுத்துவிட்டு பெரிய உதவி செய்வதாக நினைக்க கூடாது. தரமான விஷயங்களை கொடுப்பதால் மட்டுமே காலம் முழுவதும் வாழ்க்கையில் மனிதனுக்கு மதிப்பு கிடைக்கிறது. தரமற்ற விஷயங்கள் கடுப்பைதான் உருவாக்குகிறது.




No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...