Wednesday, January 8, 2025

GENERAL TALKS - கேடயங்களும் போர்வாள்களும்


இங்கே யாராக இருந்தாலும் ஒரு அளவோடு மட்டும்தான் பழகவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. மனம் ஒரு நிலையான நிலையில் இல்லை. நம்முடைய பிரச்சனையை சரிசெய்ய உதவி செய்யும் உண்மையான நண்பர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். நாம் கொடுக்கும் கடின உழைப்புக்கான பண வரவு மிகவும் குறைவாக இருக்கிறது. இதுவும் ஒரு பிரச்சனை. நம்முடைய உழைப்புக்கான சரியான மதிப்பு கிடைக்கும் இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். வருபவை வரட்டும் , இருப்பவைகள் இருக்கட்டும் , போகும் விஷயங்கள் போகட்டும் என்று வாழ்க்கை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள்ளே இல்லை என்பதைத்தான் நாம் உண்மையான எதார்த்தம் என்று புரிந்துகொள்ள மறுக்கிறோம். கவலைப்படாமல் காலத்தை நகர்த்த வேண்டும். நம்முடைய சந்தோஷங்கள் வெளி பார்வைக்கு மட்டும்தான் இருக்கிறது.  இங்கே யாருக்குமே நெருக்கமாக இருக்க கூடாது. நெருக்கமாக இல்லாமல் வேலையை சரியாக முடிப்பவர்கள் மட்டும்தான் ஜெயிக்கிறார்கள். தப்பான நேரங்களில் தப்பான விஷயங்களை நமக்கு எதிராக பேசுபவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். வெற்றி அடைந்தால் காலுக்கு கீழே விழுவார்கள். ஒரு பாம்பை நசுக்குவது போல யோசிக்காமல் நசுக்கிவிட வேண்டும். மனதுக்கு நிறைவாக சாப்பாடும் தங்க கோவில் போல ஒரு வீடும் இருந்தால் போதும் வாழும்போதே கடவுள் போல சந்தோஷமாக வாழலாம். இங்கே கொஞ்சம் பேர் விஷக்கடி பிடித்த வேட்டை நாய்களாகவும் இருப்பார்கள் இவர்களும் நம்பத்தகுந்த ஆட்கள் அல்ல. கடினமான வாழ்க்கையின் பாதையில் இதுபோன்ற ஆட்களை சந்தித்தால் இவர்களை ஒரு அளவோடு வைத்துக்கொள்ள வேண்டும். இவர்களுக்கு நாக்கை அடக்க தெரியாது. நாணயமாக இருக்கவும் தெரியாது. கடைந்தெடுத்த நஞ்சு பாத்திரங்களாக இவர்கள் இருப்பார்கள். நிஜமான உறவுகள் பலம் வாய்ந்த போர்வாளையும் கேடயத்தையும் போல இருப்பார்கள். இவர்கள் நம்முடைய வலிமையாக இருப்பார்கள். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...