Tuesday, January 7, 2025

ARC - 054 - தெரியாதவர்களோடு தற்பெருமை பேசுபவர்கள்






நமது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு அடிப்படையான விஷயங்களை கற்றுக்கொண்டு வாழ்பவர்கள் எப்போதுமே நன்றாக இருக்கிறார்கள். ஒரு தத்துவஞானி ஆற்றைக் கடப்பதற்காகப் படகில் ஏறினார். படகுக்காரனைப் பார்த்து, ”உனக்குப் பூகோளம் தெரீயுமா?” என்று கேட்டார். “எனக்குப் படகு ஓட்டத்தான் தெரியும், பூகோளம் எல்லாம் தெரியாது” என்றான் படகுக்காரன். வாழ்க்கை ஒரு ரூபாய் என்றால், அதில் கால் ரூபாயை நீ இழந்துவிட்டதாக அர்த்தம் என்றார் தத்துவஞானி. சற்றுத் தூரம் போனவுடன், “சரித்திரம் தெரியுமா” என்று கேட்டார். ”அதுவும் எனக்குத் தெரியாது” என்றான் படகுக்காரன். “அரை ரூபாயை இழந்துவிட்டாய்” என்றார் அவர். பிறகு அவனைப் பார்த்து, “விஞ்ஞானம் தெரியுமா?” எனக் கேட்டார். “அதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது அய்யா, எனக்கு படகு ஓட்ட மட்டும் தான் தெரியும்” என்றான் படகுக்காரன். “முக்கால் ரூபாயை இழந்துவிட்டாய்” என்றார், அவர். அப்பொழுது திடீரென்று ஆற்றில் சுழல் ஏற்பட்டு படகு கவிழும் நிலை ஏற்பட்டது. “சாமி, உங்களுக்கு நீந்தத் தெரியுமா?” என்று படகுக்காரன் கேட்டான். “தெரியாது” என்றார் அந்த தத்துவ ஞானி. “இப்பொழுது உங்கள் உயிரை அல்லவா நீங்கள், இழக்கப் போகிறீர்கள்”, எனக் கூறிய படகுக்காரன் நீரில் குதித்துக் கரை சேர்ந்தான். தத்துவஞானியோ நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிர் துறந்தார். நீதி: தத்துவம் உயிரைக் காப்பாத்தாது…! - இங்கே நிறைய பேர் வாழ்க்கையின் அடிப்படைகளை கஷ்டப்பட்டு தெரிந்துகொள்ள போராடுவது இல்லை. சமைக்கவே தெரியாதாம் ஆனால் சமையலில் குறைகளை சொல்வார்களாம். இது எல்லாம் எந்த வகையில் நியாயமானது. 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...