பூ பூவாய் புன்னகைக்கும் இவள் எங்கள் வீட்டு புது கவிதை
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை இவள் எங்கள் கை குழந்தை
புல்வெளிகளில் நீ போனால் வெண்பனித்துளி கால் கீறும்
நம் இதயங்கள் நான்கோடும் இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே
எங்கள் இல்லத்திலே இன்ப நாடகம்தான்
இங்கே தேவையில்லை தொலைக்காட்சி
எங்கள் உள்ளத்திலே தினம் பூ மழைதான்
நாங்கள் செல்வதில்லை மலர் காட்சி
மழை வந்தால் அதில் நனைவோம்
அன்னை துவட்டும் சுகமும் கிடைக்க
வெயில் வந்தால் அதில் அலைவோம்
தந்தை அதட்டும் இனிமை ரசிக்க
கால்கொண்ட ரோஜா துளி துளி வந்து
தூணுக்கு பின்னால் நின்று சிரிக்கிறதே
தாய் கட்டுகின்ற நூல் சேலையிலே யார்
கோட்டை என்று அடம்பிடிப்போம்
மொட்டைமாடியிலே ஒரு தட்டினிலே
நெய் சோறு வெச்சு உயிர் ருசித்தோம்
ஒரே ஒரே மின் விசிறி அதன் அடியில் தூங்கி கிடப்போம்
இன்னும் இன்னும் தந்தை தோளில் சிறு குழந்தையாகி இருப்போம்
பூமியில் சொர்க்கம் உள்ளதென்று சொன்னால்
வேறெங்கும் இல்லை அது எங்கள் இல்லமே
No comments:
Post a Comment