திங்கள், 13 ஜனவரி, 2025

GENERAL TALKS - ஆசை ஆசை இப்பொழுது

 




ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர். அவர்கள் இறக்கும் முன் உங்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன? என்று கேட்கப்பட்டது.

முதல் கைதியின் ஆசை:
நல்ல பெண், நல்ல சாப்பாடு, நல்ல மது, அந்த நாட்டின் புகழ் பெற்ற தலைவரின் சமாதிக்கு, அருகில் புதைக்கப்பட வேண்டும், என்றன், அவனது மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.

இரண்டாவது கைதியின் ஆசை;
நல்ல பெண், நல்ல உணவு, அந்த நாட்டின் புகழ் பெற்ற இன்னொரு தலைவரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். என்று கூறினான். அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றிவைக்கப்பட்டன.

மூன்றாவது கைதியின் ஆசைகள்:

தனது முதல் ஆசையாக மாம்பழம் வேண்டும் என்று, கேட்டான். அப்போது மாம்பழ, சீசன் இல்லை, எனவே.. தூக்கு தண்டனை. ஆறு மாதகாலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆறு மாதகாலத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து, .

இரண்டாவது ஆசை என்ன? என்று, கேட்டனர்! செர்ரிப் பழம் வேண்டும் என்று பதில் வந்தது. அப்போது, செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும், தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

இப்பொழுது மூன்றாவது ஆசை என்னவென்று KETTATHUKKU! அவன் சொன்னான், “என் உடல் தற்போதைய அதிபரின், சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும் என்று,!!!”

அதிகாரிகள் அதிர்ந்து விட்டனர்,.. நீ “என்ன சொல்கிறாய்? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார!”

கைதி அமைதியாகச் சொன்னான்" அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்“ என்று!





கருத்துகள் இல்லை:

TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது

  நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...