Wednesday, January 1, 2025

ARC - 022 - தேவையற்ற சவால்களை விடக்கூடாது


ஒரு பெரிய இசை வித்தகர் இருந்தார். அவர் வயலினை எடுத்து வாசித்தால். பாலைவனத்தில்கூட மழை பெய்யும். ஒரு முறை அவர் ஒரு சர்க்கஸ் கூடாரத்துக்குப் போயிருந்தார். அங்கே ஒரு சர்க்கஸ் கலைஞர் வயலின் வாசிக்க, கரடி டான்ஸ் ஆடியது, சர்க்கஸ் பார்க்க வந்திருந்தவர்கள் ஒட்டு மொத்தமாக எழுப்பிய கரகோக்ஷம் கூடாரத்தையே அதிர வைத்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நமது வயலின் வித்தகர். அந்த சர்க்கஸ் கலைஞரை அணுகி. நன்கு பழக்கப்பட்ட கரடியை மட்டும்தான் உன் வயலின் இசைக்கு ஏற்ப உன்னால் டான்ஸ் ஆட வைக்க முடியும். ஆனால், என் வயலின் இசை. எந்த மிருகத்தையும் நடனமாட வைக்கும் என்று கூறினார். சர்க்கஸ் கலைஞர் அதைப் பேத்தல் என்று மறுக்க இருவருக்கும் இடையே பேச்சு வளர்ந்து, அங்கே ஒரு போட்டியே ஆரம்பமானது. வயலின் வித்வானின் எதிரில் சர்க்கஸ் கலைஞர், முதலில் ஒரு சிங்கத்தை அனுப்பினார். வித்வானின் வயலின் இசை கேட்டுச் சிங்கம் சுற்றிச் சுழன்று ஆடத் தொடங்கியது. சர்க்கஸ் கலைஞர், அடுத்த ஒரு சிறுத்தையை அனுப்பினார். அதுவும் வித்வானின் வயலின் இசைக்குத் தன்னை மறந்து ஆடியது. சர்க்கஸ் கலைஞர் அடுத்து ஒரு புலியை அனுப்பினார் வயலின் வித்வான் சற்றும் பதறhமல் வயலினை வாசிக்கத் தொடங்கினார். ஆனால், அந்தப் பாழும் புலி, வயலின் இசைக்கு மயங்கவில்லை, மாறாக அது வித்வானை நோக்கி ரத்த வெறியோடு நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்தது, பதறிப்போன பார்வையாளர்கள் கூட்டம் சிதறி ஓடியது. நமது வித்வானும் தனது வயலினைக் காற்றிலே வீசிவிட்டு கடைசி நிமிடத்தில் தலைதெறிக்க ஓடி, அதிர்ஷ்டவசமாக அந்தப் புலியிடம் இருந்து தப்பித்துக் கொண்டார். புலி, பயிற்சியாளர்களால் சாமார்த்தியமாக மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டது, மரண பயத்திலிருந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட வயலின் வித்வான், சர்க்கஸ் கலைஞரிடம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார் என்றாலும், தனது இசை அந்தப் புலியைக் கட்டுப் படுத்தாது தனக்குப் பெரிய புதிராகவே இருப்பதாக அவர் சொல்ல சர்க்கஸ் கலைஞர் சிரித்தபடியே கூறினார். காரணம் ரொம்ப எளிமையானது, அது செவிட்டுப் புலி அதுமட்டுமல்ல, பிறவியிலேயே அதற்குக் காது துவாரமும். ஏன், காது மடல்களே கூடக் கிடையாது. வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் கூட புலிக்குக் காது இல்லை என்பதைச் சில விநாடிகளுக்குள் கவனித்து தப்பிக்க முயன்று ஓடியது. ஆனால், உங்கள் வாசிப்பின் மீது வைத்த அபார நம்பிக்கையால், நீங்கள் கடைசி நிமிடம் வரை கண் திறந்து புலியைச் சரியாகப் பார்க்கத் தவறிவிட்டீர்கள் என்றார். தேவையே இல்லாமல் சவால்களை சந்திக்க முற்பட கூடாது. 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...