ஒரு மன்னனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இருவருக்கும் சமமான அளவு கல்வி, கலைகள், ஆட்சி செய்யும் முறை என அனைத்தும் கற்று தரப்பட்டது. இருவரும் நன்கு பயிற்சி பெற்றனர். மன்னனுக்கு வயதாகி போனது, அடுத்த அரசனை அறிவிக்க வேண்டிய நிலை வந்தது. அதனால் அமைச்சரவையை கூட்டி சில திட்டங்கள் போடப்பட்டன. அதன்படி இருவருக்கும் பல கட்டங்களாக போட்டிகள் வைக்கப்பட்டது. இருவரும் சமமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். இதனால் இரண்டு மகன்களில் யாரை அடுத்த அரசனாக அறிவிப்பது என மன்னனுக்கு குழப்பமாக இருந்தது. இந்த குழப்பத்தை தீர்ப்பதற்காக அரசன் ஒரு ஞானியை பார்க்க போனார். அந்த ஞானி அரசனிடம், " நாளை உங்கள் மகன்களை அழைத்து வாருங்கள் " என்று சொன்னார். மறுநாள் இரண்டு பேரும் ஞானியின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருவரையும் வீட்டு திண்ணையில் உட்கார சொல்லிவிட்டு, ஒவ்வொரு ஆளாக போய், பக்கத்தில் இருக்கிற கிணற்றில் குளித்து விட்டு வாருங்கள் என அனுப்பினார். முதலில் ஒருவன் குளித்து விட்டு வந்ததும் அந்த இடத்தை போய் பார்த்து விட்டு வந்தார். பிறகு அடுத்தவனை குளிக்க சொல்லிவிட்டு, அவன் குளித்து முடித்ததும் அவன் குளித்த இடத்தை போய் பார்த்து விட்டு வந்தார். பிறகு இருவரையும் மன்னனிடம் கூட்டிட்டு போய், முதலில் குளித்தவனை அழைத்து, "இவனை அடுத்த அரசன் ஆக்குஙகள். இவன் நல்ல முறையில் ஆட்சி செய்வான்" என்றார். இவன் தான் அரியணை ஏற தகுதியானவன் என எப்படி கண்டுபிடித்தீர்கள் என அரசன் ஞானியிடம் கேட்க, "நான் இருவரையும் குளிக்க கிணறுக்கு அனுப்பினேன். முதலில் போனவன் கிணற்றில் நீர் இரைத்து குளித்து விட்டு , அடுத்து வருபவருக்கு பயன்படும் என்று மீண்டும் நீர் இரைத்து வாளியில் வைத்து விட்டு வந்தான். ஆனால் இரண்டாவதாக சென்றவன் அவன் மட்டும் குளித்து விட்டு , மீண்டும் தண்ணீர் பிடித்து விட்டு வைக்கவில்லை. இது அவன் பொது நலன் இல்லாதவன் என்பதை காட்டுகிறது. எனவே முதலாமவன் தான் அரியணை ஏற தகுதியானவன். " கிணற்றில் குளித்துவிட்டு தண்ணீர் பிடித்து வைத்தால் அரியணையா! இது என்ன சிறுபிள்ளைதனமாக இல்லையா. ? என்று அரசன்" கேட்க, " சின்ன சின்ன விஷயங்களில் கூட எவன் அடுத்தவர் நலனில் அக்கறை உள்ளவனாக இருக்கிறானோ, அவனை அரசனாக்கினால் தான் நாடும் நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள்" என்றார் ஞானி. ஞானியை வணங்கி அவர் சொன்னபடியே செய்தான் அரசன்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
-
வள்ளுவாின் குறளாய் ரெண்டு வாி இருக்கும் உதட்டை புடிச்சிருக்கு காது மடல் அருகே உதடுகள் நடத்தும் நாடகம் புடிச்சிருக்கு உன் மடிசாா் மடிப்புகள் ...
-
HEY ! கண்ணு குட்டி சொல்லுங்க மாமா குட்டி ! என்ன இந்த TIME LA CALL பண்ணியிருக்கிங்க ? உன் நெனப்பாவே இருக்குடி நாம இன்னொரு LONG DRIVE போலாமா? ...
No comments:
Post a Comment