Sunday, January 12, 2025

GENERAL TALKS - வேல்யூ இருக்கும் நண்பர்கள் வேண்டும்


 இங்கே எந்த ஒரு மனிதனை எடுத்துக்கொண்டாலும் வெறும் 5 பெர்ஸன்ட் வேல்யூதான் LOOKS - ல இருந்து கிடைக்கும் மீதி 95 பெர்ஸன்ட் வேல்யூ நாம் செய்யும் TASK களில் இருந்து மட்டும்தான் கிடைக்கும் - நம்ம நண்பன் எனக்காக இது கூட பண்ண மாட்ட இல்லையா என்று கேட்டால் லூசுத்தனமாக போய் அவனுக்கு தேவையான காரியங்களை பண்ண கூடாது. நம்மை பயன்படுத்த நினைப்பவன் நம்முடைய நண்பன் இல்லை. நிறைய வெற்றிகள் அடையும்போது நிறைய நண்பர்கள் நமக்கு கிடைப்பார்கள். நம்மை பயன்படுத்திக்க நினைக்கும் இந்த பன்னாடைகளிடம் பலியாக கூடாது. இவர்கள் சக்கை பிழிந்து சாறு எடுத்து சாப்பிடுவதாக நம்முடைய உடல் உழைப்பை இலவசமாக வாங்கி பயன்படுத்திவிட்டு சந்தோஷமாக இருப்பார்கள். நாம் நம்முடைய சுய நலத்தில் கவனம் செலுத்த வேண்டுமா ? சுய நலம் என்பது அவ்வளவு தவறான விஷயம் அல்ல. நம்மை நாம் நலமாக பார்த்துக்கொள்ள தவறிவிட்டு அடுத்தவர்களுக்காக அலைவது வேஸ்ட் ! - தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவன் - கண்டுகொள்வாய் அவனை ஞான தங்கமே - அவன் கடவுளில் பாதியடி ஞானத்தங்கமே என்ற பாடல் வரிகளை போல தொண்டு செய்ய கூடாது. பணமோ , பொருளோ , ஆதாயமோ இல்லாமல் விஷயங்களை செய்வது நம்முடைய மனதுக்குள்ளே மதிப்பு வைத்து இருப்பவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்று நினைத்துக்கொண்டு இருப்போம் இவைகள் எல்லாம்தான் சாதிக்கொடுமைக்கு காரணமாக அமைந்தது இல்லையா ? - நண்பன் என்று சொல்லி மேலே கொண்டுவந்த ஒருவன் நமக்கு துரோகம் இழைத்து வாழ்க்கையை நாசம் செய்து சிரிப்பான். கண்களுக்கு முன்னதாக சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து ஸீன் போடுவான். இது எல்லாம் உங்களுக்கு புரியவில்லை என்றால் இதுபோன்று ஒரு விஷமமான நண்பனை பெற்று பாருங்கள் அப்போது உங்களுக்கு புரியும் ! இந்த சமுதாயத்தில் வெற்றியை அடைவது வீடியோ கேம் விளையாடுவது போன்றது. இதுபோன்ற விஷமிகளை வாழ்க்கைக்குள் விட்டால் நம்மை கீ போர்டு பட்டன்னை கூட தொடவிடமாட்டார்கள். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...