Monday, January 13, 2025

ARC - 065 - கை கொட்டி சிரிப்பார்கள் , ஊரே சிரிப்பார்கள்

 




இங்கே எப்போதும் சாத்துக்குடி கம்பெனியை நம்பவே கூடாது. சாத்துக்குடி கம்பெனியின் கஷ்டங்கள் என்னவென்றால் நீங்கள் இந்த கம்பெனியில் கம்ப்யூட்டர் துடைக்கும் துணியை வாங்கினால் கூட உங்களுக்கு 2000 ரூபாய் செலவு வைத்துவிடும். இந்த கம்பெனியிஸ் சி.பி.யூ வாங்கினால் அதனை நகர்த்த பொருத்தப்படும் நான்கு சக்கரங்கள் 80000/- க்கு விற்கப்படுகிறது. மேஜிக் எலி - சுட்டியை வாங்கினால் உங்களுக்கு சார்ஜ் பண்ணும் போர்ட் எலிக்கு அடியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கம்பெனியில் ஃபோன் வாங்கினால் சார்ஜர் கிடையாது. இந்த கம்பெனியில் எந்த சாதனம் வாங்கினாலும் ஒரு வருஷத்துக்கு மேலே அதுவே புட்டுக்கும் உங்களுக்கு வாரேன்டி எல்லாம் கிடையாது. திரை திடீரென்று பச்சையாக மாறி ஃபோன் ரிப்பேர் ஆகும். நீங்கள் இவர்களின் சர்வீஸ் சேவை சென்ட்டருக்கு எடுத்து சென்றால் உங்களை மனுஷனாகவே மதிக்க மாட்டான். மேலும் அவர்களும் உங்கள் சாதனத்தை சரி செய்து கொடுக்க மாட்டார்கள். உங்களிடம் காசு பிடுங்கத்தான் பார்ப்பார்கள். இருந்தாலும் சாத்துக்குடிதான் நம்பர் 1 ல் இருக்கிறது. இதில் இருந்து நீங்கள் புரிந்துகொள்ளும் விஷயம் கெட்டவர்களைத்தான் எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால் நேர்மையாக வேலை பார்ப்பவர்களை யாருக்கும் பிடிக்கவும் பிடிக்காது. யாருமே அவரை நம்பவும் மாட்டார்கள். கெட்டவர்களை மட்டும் தலைமையில் கொண்டு சென்று அழகு பார்ப்பார்கள். இவர்களிடம் வேண்டுமென்றே ஏமாந்து இவர்களுக்கு நாங்கள் அடிமை ஆடுகள் என்பதை நிரூபித்துக்கொண்டே இருப்பதால் என்ன பிரயோஜனம். உண்மையாக இருப்பவர்களை கொஞ்சமாவது மதித்து நடக்கலாமே !  கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்று தலையெழுத்தாக மண்டையில் பதிக்கப்பட்டு விட்டதா என்ன ?


No comments:

ARC - 072 - பார்வையாலே முடிவுகள் எடுப்பது !

ஒரு காலத்தில் செத்துப்போன ஒருவன் நரகத்துக்கு அனுப்பப்பட்டான். நரகத்தில் மூன்றுவிதமான தண்டனை முறைகள் இருந்தன. மூன்றையும் பார்த்துவிட்டு எந்த ...