Tuesday, January 7, 2025

GENERAL TALKS - கடந்த கால உதவிகளை சொல்லிக்காட்ட கூடாது !



குரு ஒருவர் தன் சீடர்கள் சிலருடன் பேசியபடி, ஆற்றின் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென குரு கால் வழுக்கி, நிலைதடுமாறி ஆற்றில் விழப்போனார். அப்போது அருகிலிருந்த ஒரு சீடன், "சட்”டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து, அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான். அவன் அவரைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், ஆற்றில் விழுந்த அவர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பார். குருவும் மற்ற சீடர்களும் காப்பாற்றிய சீடனுக்கு. நன்றி தெரிவித்தனர். இதனால் அந்த சீடனுக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது. பார்ப்பவர்களிடமெல்லாம், "ஆற்றில் விழ இருந்த குருவை நான்தான் காப்பாற்றினேன். இல்லாவிட்டால், இந்நேரம் குரு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருப்பார்” என்று கூறத் தொடங்கினான். இந்த விஷயம் குருவின் காதுக்கு எட்டியது. ஆனாலும் பொறுமையைக் கடைப்பிடித்தார். மறுநாள் குரு அதே சீடர்களை அழைத்துக் கொண்டு, அதே ஆற்றின் கரையோரம் நடந்து சென்றார். அன்று சம்பவம் நடந்த இடம் வந்ததும், முன்பு தன்னைக் காப்பாற்றிய சீடனிடம், ""என்னை ஆற்றில் தள்ளிவிடு! " என்றார். அந்த சீடன் திகைத்தான். ""ம்! தள்ளு! " என்றார் குரு. அது வேண்டாம் குருவே! " என்றான் சீடன். "இது குருவின் உத்தரவு. கேட்டு நடப்பது உன் கடமை, ம்ஞ் என்னை ஆற்றில் தள்ளு! " என்றார் கோபமாக. மிரண்டுபோன சீடன் அவரை ஆற்றில் தள்ளி விட்டான். மற்ற சீடர்கள் என்ன நடக்கப் போகிறதோ? என்று திகிலுடன் பார்த்தனர். ஆற்றில் விழுந்த குரு. எந்தவித பதட்டமும் படாமல், அமைதியாக நீந்திச் சென்று மறுகரையைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார். அதைப் பார்த்த சீடர்கள் அனைவரும் திகைத்தனர். குரு கரை மேலே ஏறி வந்தார். தள்ளிவிட்ட சீடனைப் பார்த்தார். "இப்போதும் நீதான் என்னைக் காப்பாற்றினாயா?" என்று கேட்டார். அந்த சீடன் தலை குனிந்தான். ""ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயல். ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும், அந்த மனிதன் ஒரு நாளும் சான்றோளாக முடியாது! " என்றார் குரு.தற்பெருமை கொண்ட சீடன், குருவிடம் மன்னிப்புக் கேட்டு, தற்பெருமை எண்ணத்தைக் கைவிட்டான். நீங்கள் ஒருவருக்கு மிகப்பெரிய உதவி செய்து இருந்தாலும் அவர்களால் சமாளித்துக்கொள்ள முடியும் என்பதால் இந்த வகையான உதவி என்று இல்லாமல் எந்த வகையான உதவியாக இருந்தாலும் சொல்லிக்கத்தாமல் இருப்பது நல்லது. 

No comments:

ARC - 063 -