Tuesday, January 7, 2025

ARC - 029 - வெளியுலக மாற்றங்களும் வேலையில் கவனமும்


ஒரு சிறுவன் டெலிபோன் பூத்துக்கு சென்று ஒரு எண்ணை டயல் செய்தான். கடையின் உரிமையாளர் கவனித்து உரையாடலைக் கேட்டார். பையன் : " மேடம் உங்கள் வீட்டின் தோட்ட வேலையை எனக்குக் கொடுக்க முடியுமா?" பெண் : (தொலைபேசி இணைப்பின் மறுமுனையில்) "எங்கள் வீட்டில் தோட்ட வேலைக்கு ஒருவர் இருக்கிறார். அவர் தோட்டத்தை நன்றாக பராமரிக்கிறார்." பையன் : "மேடம், இப்போது உங்கள் வீட்டில் வேலை செய்பவரை விட பாதி சம்பளத்தில் நான் வேலைக்கு வருகிறேன். எனக்கு அந்த வேலையை தர முடியுமா." பெண் : "தற்போது அவர் தோட்டத்தை பராமரிக்கும் வேலை மிகவும் திருப்திகரமாக இருக்கிறது." பையன் : (அதிக விடாமுயற்சியுடன்) "மேடம் , நான் உங்கள் வீட்டின் நான் வீட்டு வேலையும் இலவசமாக ... பெண் : "இல்லை. நன்றி வேறு இடத்தில் வேலைக்கு முயற்சி செய்யுங்கள்!" முகத்தில் புன்னகையுடன், சிறுவன் ரிசீவரை வைத்தான். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கடையின் உரிமையாளர், சிறுவனிடம் சென்றார். கடையின் உரிமையாளர்: “தம்பி எனது கடைக்கு வேலைக்கு வருகிறாயா?" ”பையன் : “இல்லை நன்றி ஐயா! கடை உரிமையாளர் : "ஆனால் வேலை கேட்டுக் கொண்டிருந்தாயே! வேற வேலை கிடைக்கும் வரை என்னிடத்தில் செய்யலாமே?" பையன் : இல்லை ஐயா, நான் ஏற்கனவே இருக்கும் வேலையில் எனது செயல்திறனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பேசிக் கொண்டிருந்த அந்த பெண்மணி வீட்டில் தோட்ட வேலை செய்பவன் நான்தான்! - ஒரு வேலை செய்து அதன் மூலமாக பணத்தை சம்பாதித்தால் மட்டும் போதாது. காலத்துக்கு ஏற்றவாறு வேலையில் உருவாகும் மாற்றங்களையும் ஒரு பொதுவான கவனத்தை செலுத்தி கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். இன்றைக்கு உங்களை கொண்டாடும் சமூகம் நாளைக்கு உங்களை கைகழுவிவிட்டு  வேறு வேலையை பார்க்கலாம். சமூகத்தை பற்றிய மதிப்பீடு இருப்பவர்களே வாழ்க்கையில் நிலைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். நேற்று நாளை போல இன்றைய நாள் இருக்கும் என்று எதிர்பார்ப்பவர்கள் காலத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க இயலாமல் பின்தங்கிவிடுகிறார்கள் என்பதே நிதர்சனம். 



No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...