அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள் தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடை மேடைகள் எல்லாம் இல்லை. யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசு கிடையாது. “யானையின் எடையை எப்படி அறிவது?” என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். இருந்தாலும் அரண்மனையில் யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், “நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்” என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர். அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ”அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை!” என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர். எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான். எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும். இந்த விஷயம்தான் ஒரு படிப்பை படிப்பதன் அடிப்படையான விஷயம். இங்கே இளைஞர்களுக்கு படிப்பின் அருமை கண்டிப்பாக புரிய வேண்டும். இந்த மாதிரியாக இளைய தலைமுறைக்கு படிப்பை சொல்லிக்கொடுத்தால் மட்டும்தான் சிறப்பான எதிர்காலத்தை நம்மால் உருவாக்க முடியும்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
-
வள்ளுவாின் குறளாய் ரெண்டு வாி இருக்கும் உதட்டை புடிச்சிருக்கு காது மடல் அருகே உதடுகள் நடத்தும் நாடகம் புடிச்சிருக்கு உன் மடிசாா் மடிப்புகள் ...
-
HEY ! கண்ணு குட்டி சொல்லுங்க மாமா குட்டி ! என்ன இந்த TIME LA CALL பண்ணியிருக்கிங்க ? உன் நெனப்பாவே இருக்குடி நாம இன்னொரு LONG DRIVE போலாமா? ...
No comments:
Post a Comment