செவ்வாய், 7 ஜனவரி, 2025

ARC - 033 - நாட்டின் சிறந்த மனிதர்கள் !




சாலையில் ஒரு காரில் ஒருவர் நிம்மதியாக தன் மனைவி, அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார். இருந்தாலும் நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று, அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ், அவரிடம் “குட் ஈவ்னிங் சார்”. என்று சொன்னதும் அவர் “குட் ஈவ்னிங், ஏதாவது பிச்சனையா?” என்று கேட்டார்.  போலிஸ், “நாங்கள், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். " அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10, 000 ரூபாய்க்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்”. அவர் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், “இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்” என்று சொன்னார். போலிஸ் ஒரு மாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி “சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் ஏதோ குடிச்சிட்டு போதையில் உளறுகிறார்” என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா கடைசியாக சொன்னார், “நான் அப்பவே சொன்னேனே கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்”. என்றார். இப்படித்தான் தற்போதையை சூழலில் சாமர்த்தியமாக கொள்ளை அடித்து சொத்து சேர்ப்பவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைமையை அடைந்து பாராட்டுக்களை பெறுகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக உயிரை கொடுத்து வேலை பார்க்கும் உண்மையான தொழிலாளர்கள் நாட்டை உயர்த்தினாலும் கடைசிவரை கண்டுகொள்ளப்படாமல் பாராட்டப்படாமல் நேர்மைக்கு மதிப்பு கொடுக்கப்படாமல் அலட்சியமான அதிகார வர்க்கத்தால் வரலாற்றில் இருந்தே மறைந்து போகிறார்கள். இதுதான் பரிதாபம். பணக்காரனின் கோடிக்கணக்கான கடன்கள் தள்ளுபடியாம் , ஏழைகளின் குடியிருக்கும் வீடு கூட ஃபைனான்ஸ் ஆட்களால் கொள்ளையடிக்கப்படலாமாம், கேட்டால் இதுதான் நாட்டின் உண்மையான சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து பாராட்டுவதாம் ! 


கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...