1. நம்ம வாழ்க்கைத்தரம் அதிகமாக அதிகமாக நாம் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் நேரம் குறைகிறது. ஸ்மார்ட் ஃபோன் தேவைதான் இருந்தாலும் வாழ்க்கைத்தரம்தான் அத்தியாவசியமான ஒரு விஷயம். ஆகவே வாழ்க்கைத்தரத்தில் கவனம் செலுத்தினால் ஃபோன் பயன்பாட்டை நன்றாகவே குறைக்க முடியும்.
2. நெருப்பு மேல் நடக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் இந்த நெருப்பு எரியும் அனைத்து இடங்களும் இனிமேல் எனக்கு சொந்தம் என்று நடந்து காட்ட வேண்டும்.
3. ஒரு மனிதன் தேவையில்லாமல் பேச கூடாது. தேவையில்லாமல் பேசுவது நேரத்தை வேஸ்ட் செய்யும். அவனுடைய செயல்கள்தான் அவனுக்காக பேசவேண்டும்.
4. ஜெயிக்கும்போது தான்தான் எல்லாமே என்ற ஆணவத்தை குறைக்க வேண்டும். தோற்கும்பொது நடக்கும் சூழ்நிலைகளால் உருவாகும் எண்ணங்களை குறைக்க வேண்டும். இப்படி செய்தால் சிறப்பான வாழ்க்கையை உருவாக்கலாம்.
5. சாப்பாடு , தூக்கம் , இருப்பிடம் , குழந்தைகள் , மனைவி என்று எல்லா தேவைகளுக்கும் நம்முடைய வங்கி கணக்கு மட்டும்தான் கைகொடுக்கும். இங்கே பெற்ற தந்தை தாய் உட்பட எந்த உறவுகளும் நிலையானது அல்ல. ஒரு வயதுக்கு மேலே உங்களை வாழ்க்கையை நன்றாக வாழவேண்டும் என்ற காரணத்துக்காக பயன்படுத்தும் கருவியாகவே பார்ப்பார்கள்.
No comments:
Post a Comment