Wednesday, January 8, 2025

ARC - 057 - பணம் கொடுக்காமல் வேலை வாங்குதல்


 


ஒரு கிராமத்து சந்தை மிகவும் பிரபலமானது. அங்கே பெரும்பாலும் கழுதை குதிரை போன்ற கால்நடைகளின் வியாபாரம் மிகவும் நன்றாக நடக்கும். ஒருவன் சந்தை கூடும் ஒவ்வொரு சமயத்திலும் ஒரு நல்ல கழுதையைக் கொண்டு வருவார். அதை மிகவும் மலிவான விலைக்கு விற்றுவிட்டு வீடு திரும்புவார். அதே சந்தைக்கு ஒரு பணக்காரன் ஏராளமான கழுதைகளை ஓட்டிக் கொண்டு வருவான். மிக அதிகமான விலைக்கு கழுதைகளை விற்பனை செய்துவிட்டுத் திரும்புவான். ஆனால் அவனோ அளவுக்கு அதிகமான விலைக்கு கழுதைகளை விற்பதில்லை. ஒரு நாள் சந்தை வேலை முடிந்ததும் அவனும் செல்வந்தரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது செல்வந்தர் அவனை நோக்கி, என் கழுதைகளை எனது அடிமைகள் கவனித்துக் கொள்கிறார்கள். கழுதைக்குத் தேவையான உணவை என் அடிமைகளே தங்கள் சொந்தப் பொறுப்பில் எப்படியாவது கொண்டு வந்து விடுகிறார்கள். கழுதை வளர்ப்பில் எனக்குக் கொஞ்சம் கூட பணச் செலவில்லை. அப்படியிருந்தும் நான் மலிவான விலைக்கு விற்பதில்லை. நீரோ உமது கழுதைகளை மட்டும் எவ்வாறு குறைந்த விலைக்கு விற்கிறீர்? என்று கேட்டார். அவர் புன்னகை செய்தபடியே, அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, நீர் உமது கழுதைகளை வளர்ப்பதற்கு உழைப்பையும் அவற்றின் உணவையும் திருடுகிறீர்கள். நானோ கழுதைகளையே திருடி விடுகிறேன். இதுதான் உமக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்றார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வந்தன் அவனை முறைத்துக்கொண்டே வேகமாக செல்ல ஆரமித்தான். கொள்ளைகள் பலவிதம் இவருடைய லாஜீக்கும் ஒரு விதம். நாட்டில் முதலாளிகள் மோசமாக மாறினால் மக்கள் மட்டும் உத்தமர்களாக இருக்கவேண்டும் என்பது நியாயமா ? இதுதான் இந்த கதை நமக்கு கேட்கும் கேள்வி ! 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...